பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Pap

461

Par


யெடுக்கப் பயன்படும் ஒரு சாதனம்.

Pantometer: (கணி.), கோண மானி: கோணங்கள். உயரங்கள் முதலியவற்றை அளவிடுவதற்கான ஒரு சாதனம்.

Paper: வரைதாள்: படங்கள் வரைவதற்குப் பயன்படும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தாள். இரண்டும் தட்டைத் தகடுகளாகவும் சுருள்களாக இருக்கும். நல்ல வரை தாள் முரடாகவும், பென்சிலையும் மையையும் ஏற்கக் கூடியதாகவும், அழித்துத் திருத்த இடமளிப்பதாகவும் இருக்க வேண்டும். இதற்குப் பொதுவாகக் கையினால் செய்யப்படும் காகிதம் பொருத்தமாக இருக்கும்.

Paper birch: காகிதப் பிரம்பு மரம்: இதனை வெண்பிரம்பு மரம் என்றும் அழைப்பர். இது 50" முதல் 75" வரை வளரும். மரம் வலுவானது; கடினமானது. இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். காகிதத்கூழ் தயாரிக்க முக்கியமாகப் பயன்படுகிறது.

Paper condenser: (மின்.) காகிதச் செறிவுறுத்து சாதனம்: ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட காகிதத்தினாலான மின் தடைப் பொருள் கொண்ட கெட்டிப்படுத்தும் சாதனம்,

Paper cutter: (அச்சு.) காகித வெட்டி: காகிதத்தை வேண்டிய வடிவனவுகளில் வெட்டுவதற்குப் பயன்படும் ஓர் எந்திரம். இதனை கையினாலோ விசையினாலோ இயக்கலாம்.

Paper drill: (அச்சு.) காகித துளைக் கருவி: அடுக்கிய காகிதங்களில் துளையிடுவதற்குப் பயன்படும் கருவி.

Paper machine: காகித எந்திரம்: காகிதத்தை வடிவமைக்கவும், அழுத்தவும், உலர்த்தவும், மெருகூட்டவும். சுருள்களாக கருட்டவும், தகட்டுத் தாள்களாக வெட்டவும் பயன்படும் எந்திரம்.

Papier mache:தாள் கூழ்: பல்வேறு வடிவங்களில் காகிதங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் காகிதக்கூழ்.

Parabola: (பொறி: கணி.) மாலை வளைவு: கூருருளையின் பக்கத்திற்கு இணையான தள வளைவு. ஒரு கூருருளையை பக்கத்திற்கு இணையாகச் செலுத்துவதன் மூலம் இது கிடைக்கிறது.

Parabolic girder: (பொறி.) மாலை வளைவு உத்தரம்: ஒரு மாலை வளைவுக்குள் வரையப்பட்ட பல கோண வடிவில் அமைத்த ஓர் உத்தரம். இது பாலங்கள் அமைப்பதற்குப் பயன்படுகிறது.

Parachut: (வானூ.) வான்குடை (பாராசூட்): வானிலிருந்து மெதுவாக மிதந்து கொண்டே தரையிறங்குவதற்குப் பயன்படும் குடை.