பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Pho

470

Pic


படுகிறது. உலோகப் பொருள்களின் வரிவாக்கம் 100 முதல் 500 மடங்கு வரை அமைந்திருக்கும்.

Photostat: ஒளி நகல் படவுருப்படிவம் :ஆவணங்கள், வரிவடிவங்கள் முதலியவற்றின் படியுருவங்களை எடுப்பதற்கான ஒளிப்பட அமைவு.

Photosynthesis : (வேதி.)ஒளிச்சேர்க்கை : தாவரங்களின் இலைகளில் சூரிய ஒளிபடும் போது, நீரிலிருந்தும் கார்பன்டை யாக்சைடிலிருந்தும் தாவரங்கள் கார்போஹைடிரேட்டுகளைத் தயாரித்துக் கொள்ளும் முறை.

Physical Astronomy : (இயற்.) இயற்பியல் வானியல் : வான் கோளங்களின் இயற்பியல் நிலையையும் வேதியியல் நிலையையும் ஆராயும் அறிவியல் துறை.

Physical change : (இயற்.) இயற்பியல் மாற்றம் : ஒரு பொருளின் தற் பணபுகள் மாறாத வகையில் ஏற்படும் மாற்றம். எடுத்துக் காட்டு: ஒரு பலகையை ரம்பத்தால் அறுத்துச் சிறு சிறு துண்டுகளாக ஆக்குதல்.

Physical chemistry : இயற்பியல் வேதியியல் : இயற்பியல் சார்ந்த வேதியியல் கூறுகளையும், வேதியியல் சார்ந்த இயற்பியல் பண்புகளை, வேதியியல் இயைபுகளோடு உடனாக ஏற்படும் இயற்பியல் மாற்றங்களையும் ஆராய்ந்தறியும் துறை•

Physical geography i (இயற்.)இயற்பியல் நிலவியம் : இயற்கை அமைப்புகளைப் பற்றிக்கூறும் நில வியல்,

Physical metallurgy : இயற்பியல் உலோகவியல்: உலோகங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆராய்ந்தறியும் துறை.

Physics : இயற்பியல்: இயற் பொருள், ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை.

Pi : (கணி.) பை: வட்டத்திற்கும் விட்டத்திற்கும் சுற்று வரைக்கும் உள்ள தகவினைக் குறிக்கும் பை' என்ற வட்டலகின் அடையாளம். இது 'பை' என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்தினால் குறிக்கப்படுகிறது.

பை (ா) = 3.1416.

Piano wire : (உலோ.) பியானோ கம்பி : மிகவும் வலுவான ஒரு கம்பி. இதன் விறைப்பாக்க வலிமை ஒரு சதுர அங்குலத்திற்கு 3,00,000 முதல் 3,40,000 பவுண்டு ஆகும்' இதில் கார்பன் 0.570, சிலிக்கன் 0.090, சல்பர் 0.011, பாஸ்பரம் 0.018, மாங்கனீஷ் 0.425 அடங்கியுள்ளது.

Pica : பிக்கா : ஒர் அங்குலத்தில் ஆறு வரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருவப் படிவம்.

Pickle: வார்ப்படக் கரைசல்: வார்ப்படங்களைத் தூய்மையாக்குவதற்குப் பயன்படும் கரைசல். இரும்பு