பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Pil

472

Pip


Pillow block: (எந்.) முட்டுத் திண்டுக்கட்டை: ஒரு சுழல் தண் டுக்கு முட்டுக்கொடுப்பதற்கான திண்டுக்கட்டை.

Pilot: (வானூ.) விமானம் ஒட்டி: விமானம் பறப்பதைக் கட்டுப்படுத்தி இயக்குபவர்.

Pilot balloon: (வானூ.) திசையறி புகைக் கூண்டு: காற்றுவீசும் திசை யையும் வேகத்தையும் கண்டறிவதற்காக மேலே பறக்கவிடப்படும் சிறு புகைக்கூண்டு.

Pilot drill: (கணி.) முன்னோடித் துரப்பணம்: ஒரு பெரிய துரப் பணத்தைச் செலுத்துவதற்கு வசதியாக ஒரு முன்னோடித்துளையிடுவ தற்குப் பயன்படும் சிறிய துரப்பணம்.

Pilot light: (மின்.) வழிகாட்டி விளக்கு: ஒரு சுவர்ப்பெட்டியில் அல்லது கொள்கலத்தில் கட்டுப்பாட்டு விசையில் அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறு விளக்கு. இது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனம் இயங்குகிறதா என்பதைக் காட்டும்.

Pincers: குறடு: இரு கவர் உள்ள இடுக்குப் பொறி

Pine: தேவதாரு: பசுமை மாறாத ஊசி இலை மரம். கடினமானது; கனமானது; கனரகக் கட்டுமானத்திற்குப் பயன்படக் கூடியது.

Ping: (தானி.) விண்ணொலி: துப்பாக்கிக்குண்டு பாய்தல் அல்லது எஞ்சின் நீள் உருளை வெடித்தல் மூலம் உண்டாகும் விண்ணென்ற ஒலி,

Pinion: (பல்.) சிறகுப் பல்லிணை: வடிவளவு எவ்வாறிருப்பினும், சரி வாக்கிய அல்லது குதிமுள்ளுடைய ஒரு சிறிய பல்லிணை.

Pinnacle: (க.க.) கோபுரமுகடு: உயர்ந்த அல்லது மிக உயர்ந்த மோட்டு முகடு.

Pin punch: (பொறி.)முளைத் தமரூசி: இறுக்கமாகப் பொருத்தியுள்ள முளைகளை வெளியே எடுப்பதற்குப் பயன்படும் ஒரு நீளமான மெல் தமரூசி.

Pin spanner: (எந்.) முளைப்பு முடுக்கி: சுற்றுப்புறப் பரப்பில் புரி முடுக்கி முளைகள் நுழைவதற்குள்ள துவாரங்கள் கொண்ட வட்டமரையாணிகளை முடுக்குவதற்குப் பயன்படும் முளைப்புரி முடுக்கி.

Pint; பிண்ட்: நீர் முகத்தளவைச் சிற்றலகு ஒரு காலனின் எட்டில் ஒரு பகுதி.

Pintle: (எந்.) தாழ்கட்டை:சுழலுறுப்புக்கு ஊடச்சாக உதவும் தாழ்கட்டை.

Pipe: (உலோ.) குழாய்: திரவங்கள் முதலியவற்றைக் கொண்டு செல்வ தற்குப் பயன்படும் உட்புழையுடைய நீண்டகுழாய். குழாய்கள் எஃகு இரும்பு, செம்பு, பித்தளை, உலோகக் கலவைகள் முதலியவற்றால் செய்யப்படுகிறது.