உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 அகார்‌ அகார்‌


கடற்பாசிகள்‌ கடலில்‌ சூரிய ஒளியைப்‌ பயன்‌படுத்தி, ஒளிச்சேர்க்கை (Photosynthesis) எனும்‌ நிகழ்ச்சியை நடத்தி, உணவுப்‌ பொருள்களைத், தயாரிக்கின்றன. பின்பு அவை சிறு மிதவையுயிர்கள்‌, இறால்‌, மீன்‌ போன்றவற்றின்‌ குஞ்சுகட்ரும்‌ உணவாகின்றன. இறால்‌, மீன்‌, நண்டு போன்றவை பெரியவையாகி மனிதனுக்கு உணவாசின்றன. எனவே கடலிலிருந்து மனிதனுக்குக்‌ கிடைக்கும்‌ உணவுப்‌ பொருள்கட்கும்‌ கடல்‌ தாவரங்கள்‌ தான்‌ அடிப்படைக்‌ காரணம்‌. அது மட்டுமின்றிக்‌ கடல்‌ தாவரங்களில்‌ குறிப்பாகக்‌ கடற்பாசிகளில்‌, புரதமும்‌. வைட்டமின்‌களும்‌, கனிமப்‌ பொருள்களும்‌ ஏராளமாக இருப்பதால்‌, பிற நாடுகளில்‌ இவை நேரடியாகவே உணவாக உண்ணப்படுகின்‌றன. ஆடுமாகுகட்கும்‌ கோழி கட்கும்‌ தீவனமாகக்‌ கூடப்‌ பயன்படுகின்‌றன.

கடல்‌ தாவரங்களில்‌ பல பாசிகள்‌ உள்ளன. அவற்‌றின்‌ சிவப்பினப்‌ பாசிகளிலிருந்து அகார்‌ பெறப்படுகின்றது. இப்பாசிகள்‌ ஓத இடைப்பரப்பிற்குள்‌ (Intertida) zone) அதிகமாகக்‌ காணப்படுகின்றன. இவற்றுள்‌ ஜெலீடியம்‌ (Gelidium), ஜெலீடியல்லா (Gelidiella) கிராஸிலேரியா (Gracilaria) ஜைஜார்டினா (Gigartina), கோரண்ட்ரஸ்‌ (Chondrus) மில்லோ போரா (Phyllophora) ஆலை சிறப்பு நிறப்‌ பாசிகள்‌ முக்கியமானவை.

நம்‌ நாட்டில்‌

ஜெலீடியல்லா அஸிரோசா (Gelidiella acerosa)
கிராஸிஸாரியா கிரஸ்ஸா (Gracilaria crassa)
கிராஸிலாரியா வெர்ருகோசா((Gracilaria verrucosa)
கிராஸிலாரியா கார்டிகேடா (Gracilaria corticata)
கிராஸிலாரியா ஃபோலிபெரா (Gracilaria foliifera)

போன்ற பாடுகள்‌ அகார்‌ காயாரிப்பில்‌ பயன்படுத்தப்‌படுகின்‌றன.

அகார்‌ அகார்‌ (Selly) போன்றதாகும்‌. இது மேற்கூறப்பட்ட பாசிகளின்‌ செல்சுவர்களில்‌ உள்ள செல்லுலோஸ்‌ (cellulose) என்ற டொருளுடன்‌ ஒரு பல்கரிச்‌ சர்க்கரைப்‌ பொருளாக (polysaccharide) அமைத்துள்ளது. இதில்‌ அகாரோஸ்‌ (Agarose), அகாரோபெக்டின்‌ (Agaropectin) எனும்‌ இரு பொருள்கள்‌ அடங்கி உள்ளன. அகார்‌ குளிர்த்த நீரில்‌ கரைவதில்லை. ஆனால்‌ கொதி நீரில்‌ கரையும்‌ தன்மையுடையது, 35°C முதல்‌ 58°C வரையிலும்‌ உள்ள வெப்ப நிலையில்‌ திடப்‌ பொருளாக இருக்கும்‌. 80°C முதல்‌ 100°C வரையிலும்‌ உள்ள வெப்ப நிலையில்‌ உருகிடும்‌ தன்மையுடையது.

பலன்‌ பல தரும்‌ அகாரைச்‌ சிவப்பினப்‌ பாசிகளிலிருந்து மிக எளிதாகப்‌ பிரித்தெடுக்கலாம்‌. அகார்‌ உள்ள சிவப்பினப்‌ பாசிகளைக்‌ கடலிருந்து எடுத்து, தூய்மைப்படுத்தி, சூரிய ஒளியில்‌ உலர வைத்துப்‌ பின்னர்‌ அதிக அழுத்தத்தில்‌ இதனைக்‌ கொதி நீரில்‌ பிரித்தெடுக்கின்றனர்‌. இறுதியில்‌ இந்நீரை வட்டிக்‌ குளிர வைத்துக்‌ கூழாக மாற்ற வேண்டும்‌. மேலும்‌ இரு இனங்களுக்கு அதிகக்‌ குளிரூட்டி பின்‌ வெப்பமூட்டி உருகச்‌ செய்து நீரையும்‌ நீரில்‌ கரைந்‌துள்ள வேண்டாப்‌ பொருள்களையும்‌ நீக்கி விடலாம்‌,இவ்வாறு தூய்மைப்‌ படுத்தப்பட்ட அகாரைக்‌ துண்‌டாக்கி உலர வைத்து வெளிரச்‌ செய்து பயன்படுத்தலாம்‌.

அகாரின்‌ பயன்கள்‌ எண்ணற்றவை, முக்கியமாக, நுண்ணுயிரிகளைச்‌ சோதனைச்‌ சாலைகளில்‌ ஏற்ற ஊடகமாகப்‌ பயன்படுத்துகின்றனர்‌. நீரிழிவு நோயால்‌ (Diabetes) பாதிக்கப்பட்டவர்களுக்காசுப்‌ பரிந்துரைக்‌கப்பட்டுத்‌ தயாரிக்கப்படும்‌ உணவில்‌ இது சேர்க்கப்படுகின்றது. பனிக்குழைவு (Ice cream), புட்டிங்‌ (Pudding). பழக்குழைவு (Fruit salad), சாறு (Soup) ஆகியவற்றைத்‌ தயாரிக்கும்‌ பொழுது ஒரு திடப்படுத்தும்‌ பொருளாக (Stabilizer) அகார் சேர்க்கப்படுகிறது.

இதே போன்று அழகுப்‌ பொருள்கள்‌ (Cosmetics). முகப்பூச்சு (face creams), போட்டோ பில்ம்‌ (photo film),தோல் பூச்சுப் பொருட்கள் (Shoe polish) தயாரிப்பிலும்‌ அகார்பயன்படுத்தப்படுகின்றது. இவை மட்டுமன்றி இறைச்சி, மீன்களைப்‌ பதப்படுத்துதல்‌, நூல்‌ இழைகளை நேராக்கல்‌, காகிதங்கட்குப்‌ பளபளப்‌ பேற்றுதல்‌ ஆகியவற்றிற்கும்‌ அகார்‌ பயன்படுகின்றது.மருத்துவத்திலும்‌ இதன்‌ பயன்‌ சிறப்பானதாகும்‌. கிளிசரினுக்கு மாற்றுப்‌ பொருளாகவும்‌, களிம்பின்‌ தளப்‌ பொருளாகவும்‌ (Ointment base), புண்களை ஆற்றுவதற்கும்‌, குழிகைகளின்‌ (capsule) மேல்‌ உறையாகவும்‌, மேலும்‌ இரத்தத்தை உறைய வைப்பதற்கும்‌ அது பயன்படுகின்றது. இதோடன்றி பல்‌ கட்டுவதற்கு முன்பாகப்‌ பற்பதிவினை எடுத்துக்‌ கொள்ளப்‌ பயன்‌படும்‌ கலவைக்கும்‌ (Dental impression compound) இதனைப்‌ பயன்படுத்துகின்றனர்‌. மதுபானக்‌ தயாரிப்பில்‌ ஒரு தூய்மைப்படுக்தும்‌ பொருளாகவும்‌ அகார்‌ (Cleaning agent) பயன்படுகின்றது'

அகார்‌ பெறப்படும்‌ இக்கடற்பாசிகளைக்‌ கடலிலேயே பயிர்‌ செய்யும்‌ (Mariculture) முறை ஜப்பான்‌, தாய்லாந்து, இந்தோனீரியா, கொரியா ஆகிய நாடுகளில்‌ கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்தியாவில்‌ கிராஸிலாரியா எடுவின் (Gracilaria edulis) எனும்‌ அகார்‌ தரும்‌ தாவரம்‌ கடற்கரையோரத்தில்‌ பயிர்‌