உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அச்சடித்தல்‌, வண்ண 89

களாகப் பிரிக்கும் முறையால் கண்காணிக்கப்படுகின்றன. இந்தப் பரப்புகளின் உறவுகள், மூலப்படங்கள்,அச்சடிப்பு முறைகள் ஆகியவற்றின் சிறப்பியல்புகளைப் பொறுத்து அமையும். வண்ணம் பிரிப்புக் கட்டத்தில் பலவிதத்தொழில் நுட்ப முறைகளைப் பயன்படுத்தி வரிநீழல் உறவுகளைத் தக்கபடி மாற்றி அமைக்கலாம். இந்த வரி நீழல் சமநிலையைப் பொதுச்சாம்பல் நிறத்தைப் பொது நிலையில் இருக்கும்படி செய்து உருவாக்க வேண்டும். இதற்குச் சாம்பல்நிறச் சமநிலை என்று பெயர். இதை மஞ்சளும், மெஜந்தாவும் உள்ள இடங்களில் கூடுதலான சீயான் நிறத்தை அச்சடித்து உருவாக்குவர். கருப்பு வண்ணம் பிரிப்புப் படலத்தில் உயரழுத்த, நடுநீழல் பகுதிகளில் வரிநீழல்கள் இரா. ஆனால் நடுநீழல், நீழல் பகுதிகளில் அதிகமான வரி நீழல்கள் அமையும்.

மின்துகளியல் முறையில் வண்ணம் பிரித்தல் (ciectronic colour separation). நிறம் பிரிப்புச் செயல்முறையில் 30 விழுக்காட்டிற்கு மேலான பொருள்கள் தற்காலத்தில் மின்துகளியல் முறையாலேயே நிறம் பிரிக்கப்படுகின்றன. 1940 இல் தான் அறிமுகமாகிய இந்த முறை, ஒளிப்பட முறையுடன் வன்மையாகப் போட்டியிட வல்லதாய் உள்ளது. இரண்டு முறைக்கும் இடையில் உள்ள வேறுபாடு மூலத்தில் உள்ள படிமம் எப்படிப் பதப்படுத்தப்படுகிறது என்பதில் தான் உள்ளது. மூலப்படிமம் இம்முறையில் தொடர்ச்சியான மின் துலங்கல்களாக (electrical responses) கணிப்பொறிச் சுற்றுவழிகள் மூலம் மாற்றப்படுகிறது. இந்த மின் துலங்கல்களைப் பயன்படுத்திஓர் ஒளி வாயில் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ஒளி வாயிலின் மூலம் ஒளிப்படப் பசை ஒவ்வொரு புள்ளியாக அலகிடப்படுகிறது.

நிறம்பிரிப்புப் படலங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் இவ்வகைச் சாதனங்களுக்கு மின்துகளியல் வண்ண அலகிடுவான் (electronic colour scanner என்று பெயர். பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு இத்தகைய அலகிடுவான்கள் ஒருமின் ஒளிக்கடைசல் வகைக் electro optical lathe) கட்டுமானத்தை அடைந்துள்ளன. இம்முறையில் ஒரு நீண்ட உருள்கலனில் ஓர் ஓரத்தில் ஒளி ஊடுருவும் அல்லது ஒளி தெறிக்கும் மூலம் (original) சுற்றப்பட்டு இருக்கும். இம்மூலம் ஒளி வாயில்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும். உருள் கலன் உயர் வேகத்தில் சுழலும்போது அலகிடும் ஒளி வாயிலும் படம் எடுக்கும் ஒளிவாயிலும் ஒரே நேரத்தில் மூலத்தின் மேலும் ஒளிப்படப் பொருள்களின் மேலும் மாறிமாறிக் கடந்து செல்கின்றன.

அலகிடும் படம் எடுக்கும் ஒளிவாயில்களின் இடையிலுள்ள கணிப்பொறிச் சுற்றுவாயில்கள் மின்துகளியல் வண்ண அலகிடுவானுக்கு மிகுந்த வலிமையைத் தருகின்றன. மூலத்தில் இருந்து வரும் குறிப்பலைகளைத் தக்க வரிநீழல் மாற்றத்தையும், நிறம் திருத்தல் தன்மைகளையும் உள்ளடக்கும்படி உருவாக்கி, அந்த மாற்றப்பட்ட குறிப்பலைகளைப்படம் எடுக்கும் ஒளி வாயிலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம். இந்த அலகிடுவானில் பயன்படுத்தப்படும் பிற சுற்றுவழிகள் மின்துகளியலாக மூலப் படலத்தின் விளிம்போரப் பகுதிகளின் விளைவுகளை நன்கு அமைக்கின்றன. வண்ணம் திருத்திய கருப்பு அச்சடிப்பு வண்ணம் பிரிப்பைத் துல்லியமாகக் கணக்கிட்டு உள்தரும் படிமங்களை வெளியீட்டுப் படலத்தில் நன்கு ஒருங்கிணைக்கின்றன. சில அலகிடுவான்களில் இலேசர் ஒளி வாயில்கள் பிரிப்புப் படலங்களில் படம் எடுக்கப் பயன்படுகின்றன. இந்தப் புள்ளிகள் மின்துகளியலாக உருவாக்கப்படுபவை. எனவே மேற்படி வகை அரைவரித்திரை (halftone screen) ஏதும் இதற்குத் தேவையில்லை. எனவே இவற்றில் புள்ளி அளவையும் இருப்பையும் கணக்கிடும் சுற்று வழிகளும் உள்ளன.

பெரும்பாலான அலகிடுவான்களில் உருவாக்கப்படும் நிறம்பிரிப்புப் படலங்கள் இயல்படலங்களாகவோ எதிர்படலங்களாகவோ திரையிட்டனவாகவோ தொடர்வரி உடையனவாகவோ அளவு பெருக்கியனவாகவோ சுருக்கியனவாகவோ அமையலாம். ஏனென்றால் இவற்றில் வரி நீழல் வேறுபாட்டையும் நிறத்திருத்தத்தையும் மின்துகளியலாக, இடையில் ஒளிப்பட முறை கட்டங்கள் இல்லாமல், நேரடியாக ஒரே செயல் முறையில் செய்து, இறுதி வண்ணம் பிரிப்புப் படலம் உருவாக்கப்படும். ஒளிப்பட முறையைப் போல் மின்துகளியல் முறை அலகிடுவான்கள் 3 அல்லது 4 மடங்கு விலை அதிகமானவை. ஆனால் மின்துகளியல் முறையின் உற்பத்தித்திறன் ஒளிப்பட முறையைப் போல இரண்டு மடங்கு அதிகமானது. மின்துகளியல் முறை எதிர்காலத்தில் வளர்வதற்கான வாய்ப்புகள் ஒளிமயமாக உள்ளன.

திரையீட்டுக் கோணங்கள் (screen angles). அச்சிட்ட வண்ணப் படங்களில் மாயிர்வடிவ (moire) வரிகள் உருவாகாமல் இருக்கத் தனித்தனி வண்ணம்பிரிப்புப் படலங்கள் தேவை. வண்ணம் பிரிப்புப் படலங்களின் அரைவரி நீழல் புள்ளிக் கட்டமைப்பை ஒவ்வொரு நிறத்திற்கும் ஏற்ற கோணத்தில் அமைக்க வேண்டும். வழக்கில் உள்ள கோணங்களாவன: மஞ்சளுக்கு 90; மெஜந் தாவுக்கு 75°; சீயானுக்கு 150; கருப்புக்கு 45°; பழுப்பு நிற அல்லது தோல்நிற வண்ணங்களில் மாயிர் வரிவமைவைத் தவிர்க்கச் சிலர் மெஜந்தா, கருப்புக் கோணங்களைத் தலை கீழாக்குவர். எல்லா வண்ணங்களையும் விட மஞ்சளுக்கு நுண்மையான திரைகளைப் பயன்படுத்துவர். இவை ஒளிப்பட, மின்துகளியல் முறைகளுக்குப் பொருந்தும் என்றாலும் இலேசர் ஒளிவாயிலைப் பயன்படுத்தும்போது அரைவரி நீழல் புள்ளி வடிவங்களை உருவாக்கச் சில விதிவிலக்குகள் தேவைப்படுகின்றன.

நிறம் எண்பித்தல் (colour proving). நடைமுறையில் வண்ணப்படங்களை அச்சிடத் தொடங்குமுன்

அ.க.1-12