உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அச்சுக்கோத்தல்‌ 133

படம்‌ 12. காந்த நாடா தெரிவு மின்‌அச்சுக்கோப்பு எந்திரம்‌. இது தானாகவே பல்வகை அச்செழுத்து வடிவங்களையும்‌ அளவுகளையும்‌ அமைக்கிறது. இத்த எந்திரம்‌ எல்லா எந்திர வேலைகளையும்‌, சொற்களையும்‌, எண்களையும்‌, காந்த நாடா மூலம்‌ பதிவு செய்து கொள்ளும்‌. பிறகு நொடிக்கு 14 எழுத்துகள்‌ வேகத்தில்‌ அவற்றை அச்சிட வல்லது. பதிவுக்‌ கருவியின்‌ மூலம்‌ நாடா உருவாக்கப்பட்ட படிப்பு அணிக்குள்‌ வைக்கப்‌படும்‌, படிப்பு அணி இயக்குநரின்‌ இடதுபுறமும்‌, பதிப்புக்கருவி பின்புறமும்‌ உள்ளன. (IBM கார்ப்பரேஷன்‌).

படம்‌ 13. ஒலி செய்தியமைப்பு. இது செய்தியை நொடிக்கு 50000 எழுத்துகள்‌ வீதம்‌ செலுத்தவல்லது (அமெரிக்கன்‌ டெலி போன்‌ அண்ட்‌ டெலிகிராப்‌ கம்பெனி).

தெரிவு மின்‌அச்சுக்கோப்பி (MT/SC) தானாகவே ஓர்‌ ஒளிப்படக்‌ கருவி மூலம்‌ நேரடிப்பதிவுநகலை ஒரு நிமிடத்‌திற்கு 45 சொற்கள்‌ வேகத்தில்‌ தயாரிக்கும்‌. இந்தச்‌ சாதனத்தில்‌ 6 புள்ளி முதல்‌ 12 புள்ளி வரையிலான அளவுகளும்‌ 80 வெவ்வேறு எழுத்து வடிவங்களும்‌

படல்‌ 14. மின்துகளியல்‌ ஒளிமுறை அச்சுக்கோப்பு எந்திரம்‌. வலதுபுற முள்ள எதிர்முனைக்‌ கதிர்க்குழல்‌ ஒளிப்படம்‌ எடுக்கவேண்‌டிய அச்செழுத்துகளைக்‌ காட்டுகிறது. இந்த எழுத்துகள்‌ கட்டுப்பாட்டு அணியிலிருந்து வரும்‌ கட்டளைகளால்‌ உருவாக்கப்படுகின்றன. திறந்த கட்டுப்பாட்டுப்‌ பலகையில்‌ இந்தக் கட்டுப்பாட்டு அணியைப்‌ பார்க்கலாம்‌.

மாற்றத்தக்க அளவு அச்சு ஃபான்டுகள்‌ (Founts) உள்ளன. படம்‌ 12 இல்‌ உள்ள மாற்றப்பட்ட காந்த நாடா தெரிவு மின்‌ தட்டச்சுப்‌ பொறியில்‌ உள்ள எழுத்துப்‌ பலகை மூலம்‌ இந்தக்‌ காந்த நாடா தெரிவு மின்‌அச்சுக்‌ கோப்பிக்குச்‌ செய்தி தரப்படுகிறது. இந்த அணிக்குள்‌ ஒரு திண்மநிலை அளவை நினைவகமும்‌. இரு நிலையக்‌ காந்த நாடா வடிப்பிகளும்‌, வெளியீட்‌டைத்‌ தருவதற்கான மாற்றப்பட்ட IBM தெரிவுமின்‌ அச்சுக்கோப்பியும்‌ உள்ளன. தக்க இடைவெளி விட்டு எழுதும்‌ அமைப்பில் (Justowriter system) மனிதரைத் கொண்டுதான்‌ தட்டச்சடிக்க முடியும்‌. இதில்‌ அதற்‌காக இரண்டு அணிகள்‌ அமைத்துள்ளன. முதல்‌ அணியில்‌ தட்டச்சடிக்க வேண்டிய செய்தி தட்டச்சடிக்கும்‌ போது அதே நேரத்தில்‌ ஒரு நாடாவைத்‌ துளையிடுகிறது. இந்த நாடாவில்‌ சொற்களுக்கடையில்‌ அமைய வேண்டிய தக்க இடைவெளி குறிப்பிடப்படுகிறது. இரண்டாவது அணி, நாடாவிலுள்ள இடைவெளி பற்றிய குறிப்புகளைப்‌ பயன்படுத்தத்‌ தானாகவே தக்க இடைவெளிகளுடன் எல்லா வரிகளையும்‌ தட்டச்‌சடிக்கும்‌.

இந்தத்‌ தட்டச்சுகளிலிருந்து பெறும்‌ செய்திகள் நேரடியாக எதிர்நகல்‌ எடுக்கப்படுகின்‌றன, இந்தச்செய்தி