உள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதை வெளியே எடுக்கும்போதும் அசைவயிறு பரி சோதனை அவசியமாகிறது.
அசைவயிற்றில் பரிசோதனை செய்த பின்னர் கடைப் பிடிக்க வேண்டிய முறைகள்
அசைபோடும் விலங்குகளின் அசைவயிற்றில் ஏதா வது இயல்பற்ற pew (Abnormality) ஏற்பட்டதன் விளைவாக உடல் நலம் குன்றிக் காணப்பட்டால் எச்சை அளிக்க உடனடியாக ஏற்பாடு செய்வது அவ சியம்.
தவனம் உண்ண விருப்பமில்லாது இருந்தால் அவற் திற்கு வெது வெதுப்பான கஞ்சி சிறிய அளலில் அடிக் கடி கொடுப்பது அவசியம். நலிவுற்ற கால்நடைகளை அதிகதாரம் ஒட்டிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
வயிறு உப்புதல் ஏற்படின் முதல் உதவியாக நீளமான வைக்கோல் பிரியை வாயில் விட்டு அதன் இருமுனை களையும் கொம்பில் அல்லது கழுத்தில் இணைத்து விடுவது நல்லது. இதனால் அசைபோட வாய்ப்பு உண்டாவதால் வயிற்றிலுள்ள காற்று குறைய வழி ஏற்படக்கூடும். தவிர வயிறு உப்புதல் குறைய அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை கடலை எண்ணெயை
- வாயின் மூலம் உட்செலுத்தவேண்டும்.
வயிறு அடைத்திருந்தாலும் (Impaction), சாணம் போடாமல் இருந்தாலும் கஞ்சி கொடுக்க வேண்டும்.
அசைவயிற்றில் உலோகம் இருப்பதாகக் கண்டறித் தால் அதை அறுவைச் இச்சையின் மூலம் அகற்றிவிட லாம்.
அசைவயிற்றில் எந்தப் பாகத்திலாவது புண் ஏற்பட் டிருந்தால் நச்சு எதிர்ப்பு மருந்து கொடுத்துக் குணப் படுத்தலாம், உடல் நலிவுற்நிருப்பின் ஊடு மூலம் மின்பகு பொருள் கொடுக்கலாம்,
இரத்தக் கழிச்சல் ஏற்பட்டால் உள் ஒட்டுண்ணி களான புழுக்கள் குடலில் இருக்கலாம். அப்போது நுண்ணோக்கியொல் (Microscope) சாணத்தைப் பரி சோதனை செய்து அதற்கேற்ற குடல்புழு நீக்க மருந்து' கொடுத்துக் குணப்படுத்தலாம். ௩ .மா,
நூலோதி
1. H.-H. Dukes Zhe Physiology of Domestic Animals, Bailliere Tindall and Co., London.
அசைவற்ற சிறுகுடல்
அசைவற்ற இறுகுடல் என்பது குடல் விறைப்பற்ற நிலையில் குடல் அலைகள் குறைந்து வயிறு வீங்கிக்
அசைவற்ற இறுகுடல் JRE
காணப்படும் நிலையேயாகும். இந்நிலை பொதுவாக நரஜ்பு . தசைகளுக்குரிய செயல் ப.ழுதுபடுவதாலேயே ஏற்படுகின்றது அப்பொழுது வயிற்று வீக்கத்துடன், மலச்சிக்கல், வாந்தி, குசு பிரியாநிலை, குடல் அலைவு, ஓலி கேளாமை முதலியவை ஏற்படும்,
வயிற்றுப் பின்புறம் உள்ள உட்புறச் சுவரின் அடிப் HDs இசுக்களில் மாறுபாடு நிகழும் பொழுது அசை வற்ற குடல் (Adynamic Heus) ஏற்படுகின்றது. (வரடுத்துக்காட்டு - இருபுறமும் செய்யப்படும் முதுகு பரிவு நரம்பு அறுவை, சிறுநீரகம் அகற்றும் அறுவை, அடிபட்ட திலையில் ஏற்படும் கழ் முதுகு இரத்த ஒழுக்கு, கண்டுவட எலும்பு முறிவுக்கு மாவுக்கட்டு பின்னோக்கிப் போடப்படும் நிலை, சறுநீரசுக்கல்லினால் ஏற்படும் வலி, பிரசவத்திற்குப் பிந்திய நிலை, தண்டு வட. எலும்பு முறிவு.)
வயிற்று உட்புறச் சுவர் அழற்சியுடன் அசைவற்ற குடல் சேர்த்து காணப்படும். இந்நிகழ்ச்சி முதலில் அழற்சியைப் பரவாமல் தடுக்க இயற்கை செய்து கொள் ஞம் தடுப்பு முறையாகும். பிறகு, சீழினால் உண் டாகும் நஞ்சு குடலில் உள்ள நரம்புகளைச் செய லிழக்கச் செய்து குடல் ௮டைப் க்கான அறிகுறிகளை ஏற்படுத்தும், இந்நிலையில் குடல் பகுஇகள் ஒன்றுடன் ஒன்றுநார்ப்போருள்களினால் ஓட்டிக் கொண்டிருக்கும்.
உடல் வளர்சிதை மாற்றத்தின் மாறுபாடு காரண மாக இரத்தத்தில் யூரியா என்ற பொருள் அதிகரித்த நிலையில், அசைவற்ற கூடல் வயிறு வீக்கக்துடன் வாத்தி, விக்கல், சிறுநீரகப் பழுது முதலியவற்றுடன் தோன்றும். (எடுத்துக்காட்டு-புராஸ்டேட் அறுவைச் இ௫ிச்சைக்குப், பிந்திய நிலை). இதைப் நீரிழிவு நோயினால் ஏற்படும் ஆழ்த்த மயககம், பொட் டாசியம். குறைந்த நிலை அல்லது குறை தைராய்டு சுரப்பு நிலையில் செய்யப்படும் மற்ற அறுவை முறை களிலும் காணப்படும்.
போலவே
புரோபாந்தின், அட்ரோபின், ஹெக்சாமெத் தோனியம் புரோமைட் போன்ற மருந்துகளும் அசை வற்ற குடலை ஏற்படுத்தும். வயிற்றில் று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டாலும் குடல் அசைவற்ற திலை ஏற்படுகின்றது. இந்நிலை ஏன் ஏற்படுகின்றது என்பது இன்னமும் அறிவுலகற்கு ஓர் புதிராகவே உள்ளது. ஆனாலும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுபவை அறுவைச் சிகிச்சையின் பொழுது முறையறியாமல் குடலைக் கையாள்வது, பொட்டாசியக் குறைவு இரத்தம், நீர், மலம் முதலியவை வயிற்றினுள் சிந்திய நிலை, உட்புறச் சுவர் அழற்சி முதலியவையாகும்.
இந்தோயின் அறிகுறியாக வயிறு வீக்சும், முயற்? அற்ற முறையில் ஏற்படும் வாத்து, மலச்சிக்கல் வயிற்றுக்கோளாறு, உணர்ச்சியுடன் கூடிய திலை முதலியனவ தோன்றும், அப்பொழுது நாடித் துடிப்பு அதிகமாகி உடல் வெப்பம் சாதாரணமாகக் காணப்