266 அடிப்படைப் புள்ளிவிவரம்
யின் அவரியத்தை வலியுறுத்தி ஒர் அறிஞர் குழு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதற்கான எடுத்துக் . காட்டுப் பதிவு முறைகளையும் வெளியிட்டன.
அடிப்படைப் புள்ளிவிவரங்களின் பதிவு முறைகள்
நன்கு வரையறை செய்யப்பட்ட பரப்புகளைக் கொண்ட பதிவு அலுவலகங்களின் மொத்த அமைப்! அடி.ப்படைப் புள்ளிவிவரப் பதிவு அமைப்பாகும். பதிவு மாவட்டங்களின் எல்லைகள் அந்தந்தப் பகுதியைச் சார்ந்த அரசின் எல்லையோடு ஒன்றிணைந்திருப்பது விவரங்கள் தொகுப்பிற்கு மிகவும் எளிதாக இருக்கும். அந்நிகழ்ச்சிக்குத் தொடர்புடையவராலோ, நிகழ்ச்சி களை நன்கு ஆறிந்தவராலோ கொடுக்கப்படும் செய்தி கள் மட்டும் பதிவேடுகளில் குறிக்கப்பட வேண்டும். பிறத்தல் நிகழ்ச்சியைக் கொடுப்பவர் பெற்றோர்கள் ஆவார்கள். இருந்தபோதிலும் சில நாடு களில், எடுத்துக் காட்டாக ஐக்கிய நாடுகளில், குழந்தை பிறக் கும் போது அருகில் இருப்பவரும் அச்செய்தியைத் தர Rew mort.
ஒருவார் இறக்கும்போது அவருடைய உறவுக்காரார் பதிவு அலுவலரிடம் வந்து செய்தியை அறிவிக்க வேண்டும். அவ்வாறு வரத் தவறினால் இறக்கும் போது அவர் அருகில் இருந்த ஒருவர் தெரிவித்தால் போதுமானதாகும். நியூசிலாந்திலும் ஐக்கிய நாடு களிலும் இறுதிச் சடங்கு ஏற்பாடு செய்வோர் செய்தி களைக் தருகின்றனர். பல வளர்ந்த நாடுகளில் இறப்பின் காரணமும் பதியும்போது குறிக்கப்பட்டு வருகின்றது. அதற்கான சான்றை ஒரு மருத்துவர் வழங்க வேண்டும். இங்கிலாந்து, வேல்ஸ் (9/81௯) போன்ற நாடுகளில் இச்சான்றிதழ் ஒருவர் இறக்குமுன் அவருக்குச் ச௫ச்சை அளித்த மருத்துவராலோ அவர் இறத்த பின் அவரது உடலை ஆய்வு செய்த மருத்துவ ராலோ வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும். திருமண மணமகனோ
நிகழ்ச்சியைப் பொதுவாக அல்லது மணமகளோ தருவார்கள். சல பகுதிகளில் இருமண ஏற்பாடுகளைச் செய்பவர் அ௮ச்செய்தியைத் தரு இன்றனர்.
ஒவ்வொரு தாட்டுச்கும் பதிவு செய்வதற்கான காலக் கெ௫ு மாறுபடுகின்றது. பொதுவாகப் பிறப்பைவிட இறப்புக்கான கால அவகாசம் குறைவாகும், எடுத்துக் காட்டாக Agysr (Cuba) நாட்டில் இறப்பு உடனே பதிவு செய்யவேண்டும். பிறப்பு, பிறந்து ஒரு வருடத் இற்குள் பதிவு செய்யவேண்டும் என்ற சட்டம் உள்ளது. இங்கிலாந்திலும் வேல்ணிலும் இறப்பு பதிவுக்கான கால அவகாசம் ஐந்து நாட்கள் ஆகும். பிறப்புக்கு 42 நாட் கள் ஆகும்.
வாழ்நாள் நிகழ்ச்சியைப் பதிவு செய்யும் விண்ணப் பத்தின் அமைப்பு நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றது. பொதுவாகப் பதிவு செய்யும் அமைப்புகளில் செய்க அளிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு சான்றிதழ் வழங்கப் படவேண்டும். அந்தச் சான்றிதழ், பதிவின் அனைத்துத்
குகவல்களையும் கொண்டிருக்கும். ஆனால் தொரகுக்
கப்படும் சல செய்இகள் புன்ளியியலின் தேவைகளுக்
காகவே அன்றி அச்சான்றிதழில் இடம் பெறா. ஒரு
பிறப்பு பதிவு செய்யப்படும்போது பிறற்த நாள், இடம்,
இனம், தந்தையின் பெயர் முதலியவை தொகுக்கப்படு . இன்றன. ல வாழ்நாள் புள்ளிவிவர அமைப்புகள் ~ மேலும் ரில செய்திகளைத் தொகுக்கின்றன. அதாவது காயாரின் வயது, தந்தையின் தொழில், வயது, அவர் களுடைய தஇருமணத்திற்குப் பின் கழிந்த ஆண்டுகள், சகோதர சகோதரிகளின் எண்ணிக்கை, குழந்தையின் எடை முதலியவை தொகுக்கப்படுகின்றன. பெயர், வயது, இனம், இறந்த இடம், இறந்த தேதி மூதலி யவை இறப்புப் பதிவில் குறிக்கப்படுகன்றன. சில அமைப்புகள் இறந்தவருடைய தொழில் இறப்பதற் கான காரணம் முதலியவற்றையும் தொகுக்கின்றன. ஒரு திருமணம் பதியப்படும்போது மணமக்களின் தொழில், அவர்களின் வயது முதலியன தொகுக்கப்படு இன்றன.
அடிப்படைப் புள்ளிலிவரத்திலும் அடிப்படை நிகழ்ச்சிப் பதிவிலும் பல பொதுவான ிக்கல்கள் உள்ளன. இறப்புப் பதிலில் அதற்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகன் றன. சுகாதாா நிறுவனம் ஒரே சீரான அனைத்துலக மருத்துவ இறப்புச் சான் றிதழ் முறையை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய தாடுகளின் புள்ளியல் குழுவுக்குப் பரிந்துரை செய்தது.
இறந்து பிறத்தல் அல்லது கருமுதிராது பிறத்தல் என்ற வரையறையை வகைபாடு செய்வது மற்றும் ஒரு சிக்கல் ஆகும். பெல்ஜியத்தில் ஒரு குழந்தை பிறந்து பதிவு செய்வதற்குள் (பிறந்து மூன்று நாட்களுக்குள் இறத்துவிட்டால்) இறந்து பிறந்ததாகவே பதிவு செய் யப்படுகன்றது. கொலம்பியாவில் இறந்து பிறந்த குழந்தை பதிவு செய்யப்படுவதில்லை. பிரிட்டனில் கருத்தரித்த 88 வாரத்இற்குள் மூச்சற்ற நிலையில் பிறக் கும் குழந்தையும் இறந்து பிறந்ததாகவே கருதப்படு கின்றது. இறந்து பிறத்தலும், கருமுதிராத பிறப்பும் பலமுறைகளில் வரையறுக்கப்படுவதால் அவைகளை ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.
பயன்கள்
அடிப்படை நிகழ்ச்சிப் பதிவுகளிலிருந்து தொகுக்கப் படும் செய்திகள் மக்கள் நடமாட்டத்தை அறிய உதவு இன்றன. ஏனென்றால் மக்கள் தொகைக் (ற00ய/81100) கணக்கெடுப்பு ஒரு குறிப்பிட்ட காலத்துற்கு ஒருமுறை தான் செய்யப்படுகின்றது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை மூப்பீடுகளைப் பற்றிய விவரங்களை அடிப்படைப் புள்ளிவிவரம் மூலம் அறிய லாம். இப்புள்ளி விவரங்கள் தனி மனிதனுக்குப் பயன் படுவது போலவே அரசுக்கும் பொது நிறுவனங்களுக்கும் பெரிதும் துணை புரிகின்றன. தாய்சேய் நலப் பதிவு யாவும் பிறப்பு-இறப்புப் பதிவிலிருந்துதான் தொடங்கு இன்றன. குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ