$46 அண்டக் கதிர்கள்
மருந்துகள் :
இந்த நோயில் *ஹிஸ்டமின்” (Histamine) எனும் பொருள் தோலழற்சியுடைய இடங்களில் வெளிப் ப௫ுவகால் நமைச்சல் உண்டாடூறது. ஹிஸ்டமின் எதிர்ப்பிகளைக் (Anti histamine) கொடுத்தால் நமைச் சல் குறைந்து நோயாளிக்குச் சிறிது ஆறுதல் சடைக் இறது. Ger Sager நுண்ணுயிர்கள். தோலினுள்
சென்று பரவலான அபூற்சி ஏற்படலாம். இதற்கு நுண்ணுயிர்க்குத் தக்கவாறு நுண்ணுயிர் எதிர்ப்
பிகளைக் கொடுக்க வேண்டும். பலமுறைகள் ஒரே மருந்தைக் கொடுத்தால், நுண்ணுயிர்கள் அந்த மருந் தற்கு “எதிர்ப்பாற்றல்! * (1821978௩0௦) பெறுகின்றன. செபலோதின் (Cephalothin) cara நுண்ணுயிர் எ௫ர்ப்பிக்கு இன்னும் எதிர்ப்பாற்றல் ஏற்படவில்லை. படைகளின் மேல் :“ஸ்மீராய்டுகள்'” (Steroids) கொண்ட களிம்புகளை உபயோகப் படுத்தினால் பலன் தெரிகிறது. தோல் உலராவண்ணம் யூரியா சேர்ந்த களிம்புகளை உபயோகப்படுத்தலாம். சவுக்காரம் (காவடி இல்லாத சோப்புகளை இவர்கள் பயன்படுத்த வேண்டும்.
ஜி.ரா,
நூலோதி:
1. 619141. 888 ட, ,4/20/௦ Oermatitis-pp 520- 571-1982 In: ‘Dermatology in General McGraw-Hill Book Company-1979.
2, Parish WE, Champian RH: Atopic Dermatitis, pp 193-270. In ‘Recent Advances in Dermatology, Churchill Livingstone 1973.
Medicine’.
அண்டக் கதிர்கள்
1900ஆம் ஆண்டு 9, டி. ஆர். வில்சன் என்பார், மின் னேற்றம் கொடுக்கப்பட்ட தங்க இலை மின்காட்டி (Gold leaf electroscope), தக்க மின்காப்பிடு செய்யப் பட்டிருந்தும் மின் கரிவிற்கு உள்ளாகின்றது என்று சுண்டறித்தார். இதை விளக்கும் பொருட்டுத் தங்க இலை மின்காட்டியில் உள்ள காற்று வளிமத்தை அயனியாக்க வல்ல அயனிகள் அருகாமையில் இருக்க லாம் என்று கருதினார்.
சூரியன் தன்னைச் சுற்றியுள்ள அணுக்களைத் தனது வெப்பத்தால். அயனிகளாக்கி வெளியேற்றுவதால் இப்படி நிகழ்சின்றது என்று முதலில் நினைத்தார்கள் . ஆனால் விக்டர் ஹெஸ் (V. Hess) carn அறிவியல் அறிஞர், 1921இல் பலூன்களுக்குள் ஆய்கருவிகளை வைத்துப் பறக்கவிட்டு ஆராய்ச்சி நடத்திச் சூரியன் மட்டும் ௮யனிக் குிர்களுக்குக்காரணமாக இருக்க முடி யாது என்பதை நிறுவினார். அயனிக் கதிர்களின்
செறிவு, உயரத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது. மற்றும் அலை இரவு பகல் நேரங்களில் அதிக மாறுதலுக்கு உள் ளாவதில்லை என்பதிலிருந்தும், சாதாரண நாட்களி லும், சூரியன் மறைவுற்ற நாட்களிலும் செறிவில் அதிக மாறுபாடு இல்லை என்பதிலிருந்தும் இதை உறுதி செய்து கொள்ள முடியும்.
அயனிக் கதிர்கள் அண்ட வெளியில் உண்டாகும் ஒரு வகைக் கர்கள் என்று ஹெஸ் சருஇனார். 1985ஆம் ஆண்டு மில்லிகள் (44111௫ என்ற அறிவிய aie இக்கஇர்கள் அண்ட. வெளியிலிருந்து வருவ தால் இவற்றிற்குக் காஸ்மிக் கதிர்கள் (லேப் 7838) எனப் பெயரிட்டார்.
முதன்மை, இரண்டாம் நிலைக் கதிர்கள் (2 ரம வாம் secondary rays)
அண்டக் கதிர்கள் பேரண்ட வெளியில் உற்பத்தியாகி வளிமண்டலத்தை ஊடுருவிப் பூமியை வந்தடைடன் றன, வளி மண்டலத்தை அஊடுருவும்போது காற்று மூலக்கூறு களுடன் மோதிப் பல வகையான இடையமீட்டு வினை களை ஏற்படுத்துகின்றன. அண்டக் கதிர்களின் ஆற்றல் மிக அதிகமாக இருப்பதால், இடையீட்டு வினையால் வெளிப்படும். துகள்களின் ஆற்றலும் ஒரளவு அதக மாகவே இருக்கும், இவை இரண்டாம் நிலை அண்டக் சஇர்கள் என்றும், இவற்றிற்குக் காரணமான அண்டக் கஇர்களை முதன்மை அண்டக் கஇர் என்றும் கூறுகின் றார்கள். முதன்மை அண்டக் கஇர் பற்றிய ஆய்வுகள் பலூன் சோதனைகள் மூலமே செய்யப்படுகின்றன. எனைனில் வளி மண்டலத்தின் உயரத்தில் 710 ப௫ுதியை ஊடுருவிச் செல்வதற்குள் தம் ஆற்றலை முழுவதும் அவை இழந்து விற்கின்றன. இரண்டாம் நிலை அண்டக் கதிர்களே பூமியின் பரப்பையும் கடல்
மட்டங்களையும் எட்டுகிள்றன.
அண்டவெளியில் ஹைட்ரஜன் அதிகமாக இருப்ப தால் முதன்மை அண்டக் சுஇர்களின் பெரும் பகுதி புரோட்டான்௧ளே. இவற்றுள் மெசான்களும், எலக்ட் ரான்களும் கூட இருப்பதுண்டு. இவற்றின் ஆற்றல் 708 மி.எ.வோ. வரை உள்ளது. முதன்மை அண்டக் கதிர்கள் காற்று மண்டல வளிமப் பொருள்களின் அணுக்களைப் பிளந்து பலலகைத் துகள்களை உண் டாக்குகின்றன. இரண்டாம் நிலை அண்டக் கதிர்கள் என்று அழைக்கப்படும் இக்கதிர்களை ஆராய்ந்த பலருள் இந்திய விஞ்ஞானி ஹோமி ஜெகாங்கீர் பாபாவும் ஒருவர். இரண்டாம் நிலைக் குதிர்கள் தூறல்களாகக் (Showers) 57 Day மண்டலத்தில் பரவுகின்றன என்று இவர் விளக்கினார்.
அண்டக் சுதிர்களில் மின்னூட்டம் பெற்ற: துகள்கள் பேரளவில் இருப்பதால், அவை புவிகாந்தப் புலத்தில் பாதிக்கப்படுகின்றன. இப்பாதிப்பை (1) நில நடுக் கோட்டிற்கிணை கோட்டு விளைவு (Latitude or geomagnetic effect) (2) உயர விளைவு (Altitude effect)