உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 அணுக்கரு எரிபொருள்‌

568 அணுக்கரு எரிபொருள்‌ மீட்டுருவாக்கம்‌ அணுக்கரு எரிபொருள்‌ மீட்டுருவாக்கம்‌

அணுமின்‌ நிளையத்தில்‌ செறிவூட்டிய யுரேனியம்‌ போன்ற எரியொருள்களைப்‌ பயன்படுத்தி மின்சாரம்‌ ஆக்கப்‌ பெறுகிறது. இத்நிகழ்ச்சியில்‌ ஏற்படும்‌ அணுக்‌ கருப்‌ பிளப்பின்போழ்து கழிவுப்‌ பொருள்கள்‌ உண்டா இன்றன. இதனால்‌ அவ்வப்போது புதிய எரிபொருளை அணு உலையில்‌ இடவேண்டியுள்ளது. AHS HST டாக ஒரு சாதாரண நீரைப்‌ பயன்படுத்தும்‌ உலையில்‌ பயன்படுத்தப்படும்‌ எரிபொருளில்‌ ஆண்டுக்கு ஒரு முறை மூன்றில்‌ ஒரு பங்கை எடுத்து விட்டு, புதிய எரி பொருளை இட்டு நிரப்ப வேண்டும்‌, அப்போதுதான்‌ அணுஉலை தொடர்ந்து வேலை செய்யும்‌; மின்சாரமும்‌ தொடர்ந்து இட்டும்‌. இதனால்‌ மூன்றாண்டுகளில்‌ இடைக்கும்‌ பயன்படுத்தப்பட்ட எரிபொருள்‌ வீணாச எறியப்படாமல்‌ மீண்டும்‌ எளிதில்‌ பிளவுறும்‌ எரிபொரு ளாக மாற்றப்பட்டால்‌ நமக்குத்தொடர்ந்துள பொருள்‌ இடைத்துக்‌ கொண்டிருக்கும்‌. இவ்வாறு வீணான or. பொருளைப்‌ பயன்படும்‌ எரிபொருளாக மாற்றுவதே எர்பொருள்‌ மீட்டுருவாக்கம்‌ எனப்படும்‌.

236 1)" ஐப்‌ பயன்படுத்தும்‌ ஈனுலையில்‌ (766087 1280101) 239 உப இடைக்கும்‌, இது பல்வேறு வேதியியல்‌ கலவைகள்‌ கலந்த நிலையில்‌ தூய்மையற்றதாக இருக்கும்‌, இதனை

உலையினின்று எடுத்து நீருக்கடியில்‌ வைப்பா, இதனால்‌ இதனின்று வெளிப்படும்‌ கதிர்வீச்சுக்கள்‌ நீரால்‌ உறிஞ்சப்பெறும்‌. அதோடு மட்டுமல்லாமல்‌

எரிபொருள்‌ வெளிப்படுத்தும்‌ வெப்பத்தையும்‌ நீர்‌ வாங்கக்‌ கொள்கிறது. பலமாத காலமாக இவ்விதம்‌ எரிபொருள்‌ வைக்கப்பட்டு இது வெளிப்படுத்தும்‌ கதிர்‌ Sse (Radiation) ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்‌ ததும்‌ பாதுகாப்பாக ஒர்‌ எரிபொருள்‌ மீட்டுருவாக்க நிலையத்திற்குக்‌ (161 reprocessiag plant) கொண்டு செல்லப்படுகிறது, படம்‌-1 இன்‌ மூலம்‌ இங்கு நடை பெறும்‌ இயக்கத்தைக்‌ காணலாம்‌.

எரிபொருள்‌ எடுத்துச்செல்லும்போது அதன்‌ கதிர்‌ வீச்சு சூழலைத்‌ தாக்காமலும்‌, புறச்சூழலால்‌ அவை துக்குறாமலும்‌ இருக்கக்‌ காப்பு தேவை. இதற்கான எரிபொருள்‌ கலன்கள்‌ (1061 containers) Qua gains ந0 டன்‌ எடையும்‌ 4.5 மீட்டர்‌ நீளமும்‌, 7-5 மீட்டர்‌ விட்டமும்‌ கொண்ட எல்குத்‌ தொட்டிகளாகும்‌. தொட்டியினுள்‌ எரிபொருள்‌ அசைவுறாமலும்‌ பகுதிகள்‌ கலக்காமலும்‌ இருக்கத்‌ தனித்தனி அறைகள்‌ குழாய்‌ வடிவத்தில்‌ இருக்கும்‌. எரிபொருள்‌ குளிர்வதற்காக நீரும்‌, கஇரியக்கத்‌ துகள்கள்‌ வெளியேறாமல்‌ தடுக்கக்‌ காற்றுப்புகா மூடியும்‌ இருக்கும்‌, தண்ணீரால்‌ உறிஞ்‌ சப்படும்‌ வெப்பம்‌ சுவரில்‌ பரவிப்பிறகு தொட்டியின்‌ வெளியில்‌ அமைக்கப்படும்‌ குளிர்விக்கும்‌ இறகுகள்‌ (0௦௦112 1118) மூலம்‌ வெளி3யேற்றப்படுகிறது.

தொட்டியினுள்‌ இருக்கும்‌ அறைகள்‌, எரிபொருளைத்‌ தொடர்‌ வண்டி மூலமோ சரக்குந்து மூலமோ எடுத்துச்‌ சொல்லும்போது எவையேனும்‌ விபத்துக்கள்‌ ஏற்பட்‌ டால்‌ ஒன்றுடன்‌ ஒன்று கலந்து விடாதபடி அமைக்கப்‌ படுகின்றன. மேலும்‌ அவை 9 மீட்டர்‌ உயரத்தி லிருத்து தரையில்‌ போட்டாலும்‌ தாங்கிக்‌ கொண்டு வீணாகாமலும்‌, உயர்ந்த அளவு 1000” வெப்பத்தை யும்‌ தாங்கிக்‌ கொள்ளும்‌ அளவுக்கும்‌ கட்டப்படுகின்‌ றன,

இவ்வீதம்‌ எரிபொருள்‌ பலவிதமான பாதுகாப்போடு எரிபொருள்‌ மீட்டுருவாக்க வேதியியல்‌ கூடத்திற்கு வந்து சேர்கிறது. இங்கு இந்த எரிபொருள்‌ எந்திரங்‌ கன்‌ மூலமாகச்‌ சிறு சிறு துகள்களாக வெட்டப்படு கிறது. யுரேனியம்‌, புஞட்டோனியம்‌ மற்ற அணுப்‌ பிளவுப்‌ பொருள்கள்‌ ஆ௫ியனவ அடங்கியிருக்கும்‌ இந்த எரிபொருள்‌ துகள்கள்‌ நைட்ரிக்‌ அமிலத்தில்‌ (14012 8௦4) கரைக்கப்படுகின்றன., இதனால்‌ சா தாது ஒதுக்‌ கப்படுகிறது. மீண்டும்‌ இந்தக்‌ சரைசல்‌ சுரைப்பான்‌- பிரித்தல்‌ ($014600 extraction) என்ற வேதியியல்‌ முறைக்கு உட்படுத்தப்படுகிறது. இதனால்‌ யுரேனியம்‌, புளுட்டோனியம்‌ ஆகியவை இரண்டும்‌ பிரித்தெடுக்‌ கப்படுசன்றன. யுரேனியம்‌ கலவை நைடம்ரேட்டி லிருந்து ஆக்சைடாக மாற்றப்பட்டுப்‌ பிறகு ஹெக்சா புளுரைடாக (11603 [1ப01106) மாற்றப்பட்டுத்‌ தனியே ஒரிடத்தனிமங்களைப்‌ (Isotopes) பிரித்தெடுக்கும்‌ பகுதிக்குக்‌ எடுத்துச்‌ செல்லப்படுசன்றது. அங்கு அவை சேமித்து வைக்கப்படுகன்றன. புளஞுட்டோனியக்‌ கலவை அடர்த்தியான கரைசலில்‌ வைக்கப்பட்டுச்‌ சேமித்து வைக்கப்படுகிறது.

புஞட்டோனியத்தைக்‌ கையாளும்போது அனைத்துப்‌ பாதுகாப்பு நடவடிக்கைகளையும்‌ மேற்கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌, 7. இது ஒரு சிறந்த அணுப்பிளவுப்‌ பொருள்‌, U- 235 விடச்‌ ல காரணங்களினால்‌ மேன்மை புடையதாக இருக்கின்‌ றது. ்‌

2, இதன்‌ அரைஆயுள்‌ (18வ14-11/6 period) சுமார்‌ 24,390 ஆண்டுகள்‌. மேலும்‌ தீய விளைவுகளை உண்டுபண்ண வல்ல இவிரமான கதிர்வீச்சுக்‌ களை உமிழக்கூடியது.

3... இம்முறையில்‌ பிரிக்கப்படும்‌ புளுட்டோனியத்தை அணுகுண்டு, அணுவாற்றலினால்‌ இயங்கும்‌ போர்க்கருவிகள்‌ தயாரிக்கப்‌ பயன்படுத்தலாம்‌. ஆசையால்‌ தேவையான பாதுகாப்பு நடவடிக்‌ கைகள்‌ இதைச்‌ சேமித்து வைத்திருக்கும்‌ இடத்‌ இற்கு இன்றியமையா தனவாகும்‌.

பி.ம.

நூலோதி

Raymon Lb. Murray Nuclear Energy Perga- mon Press inc. 1975.