உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/790

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754 அதிஆபத்துக்குரிய குழவி

754 அதி ஆபத்துக்குரிய குழவ்‌

ஒரே பிரசவத்தில்‌ ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள்‌ பிறக்கக்கூடும்‌, கருப்பை, குழந்தைகளின்‌ பாரம்‌ தாங்‌ காமல்‌ குறித்த காலத்திற்கு முன்பே குழத்தைகள்‌ பிறந்துவிடுவதுண்டு. இக்குழந்தைகள்‌ சில சமயங்களில்‌ உடல்‌ நலமின்றி இருக்கும்‌.

மேற்கூறிய குறிப்புசுளிலிருந்து எந்தெந்தச்‌.சமயங்‌ களில்‌ 95) ஆபத்துக்குரிய குழத்னத பிறக்கும்‌ என்‌ பதைத்‌ தெரிந்து கொண்டோம்‌. கூடுமானவரை மருத்துவ உதவியோடு, இம்மாதிரியான குழந்தைகள்‌ பிறக்காதவாறு பார்த்துக்‌ கொள்ளவேண்டும்‌. அடிக்‌ கடி மருத்துவரை அணுகி மருத்துல ஆலோசனையைப்‌ பெற்று அதன்படி நடந்து கொள்ளவேண்டும்‌. ஒரு பிரசவம்‌ எளிதாக இருப்பது போல்‌ அடுத்த பிரசவம்‌ இருப்பதில்லை. ஆகவே ஒவ்வொரு பேறுகாலத்தின்‌ போதும்‌ நாம்‌ விழிப்பாக இருக்க வேண்டும்‌. முன்‌ எச்ச ரிக்கையாக பேறு காலத்தின்‌ போது தாயையும்‌, குழந்‌ தையையும்‌ காக்க வேண்டி எல்லா ஏற்பாடுக வளயும்‌ செய்து வைக்க வேண்டும்‌, தவிர்க்க மூடியாத சந்தர்ப்‌ பங்களில்‌ பிறக்கும்‌ ஆபத்துக்குரிய குழந்தைகளைப்‌ பராமரிப்பது பற்றிக்‌ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறக்கும்‌ இடம்‌ துப்புரவாக இருக்க வேண்டும்‌. குழந்தை பிறந்தவுடன்‌ அழுது, எளிதாக மூச்சுவிட்டால்‌ பிறகு பயமில்லை. குழந்தை பிறந்த வுடன்‌ வாயிலும்‌. மூக்கிலும்‌ உள்ள பனிநீரை, உறிஞ்‌ சும்‌ குழாயால்‌ (800110 (ப) அகற்ற வேண்டும்‌. இதனால்‌ குழந்தை எளிதாக மூச்சுவிட. முடியும்‌. GPS தையின்‌ கண்களைத்‌ தொற்று நீக்கப்பட்ட மெல்லிய துணியால்‌ துடைக்க வேண்டும்‌. குழந்தையை நச்சுக்‌ கொடியிலிருந்து பிரித்து எடுத்துத்‌ தூய்மையான பருத்திக்‌ துணியில்‌ சுற்றிலைக்க வேண்டும்‌. இண்டிக்கப்‌ பட்ட நச்சுக்‌ கொடியின்‌ பாகத்தை ஸ்பிரிட்டால்‌ துடைத்து இரத்தக்‌ சவு இல்லாதபடி பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌.

குழந்தை பிறந்தவுடன்‌, அழாமல்‌ மூச்சுலிட.த்‌ இணநி னால்‌, ஆக்சிஜனன மொல்ல்ய இரப்பர்க்குழாய்‌ மூலம்‌ மூக்கு வழியாகச்‌ செலுத்த வேண்டும்‌, இந்த முயற்‌ சியும்‌ பலனளிக்காவீட்டால்‌ 5மி. லி. 25% குளுக்கோஸ்‌ நீரையும்‌ கலந்து மெதுவாக த்ச்சுக்‌ கெபடியிலுள்ள இரத்தக்‌ குழாய்‌ மூலம்‌ குழந்தைக்குச்‌ செலுத்தினால்‌ குழந்தையின்‌ மூச்சு ரோ௫இவரும்‌. குழத்தை வாய்மேல்‌ மெல்லிய துணி போட்டு நம்‌ வாயை வைத்துச்‌ சீராசு உளதிக்‌ குழந்தைக்குச்‌ மூச்சு வருவதற்கு வழி செய்யலாம்‌.

மேற்கூறிய வழிகளிலும்‌ குழந்தையின்‌ மூச்சு சீராக வரவில்லை என்றால்‌ மூச்சுக்‌ குழாயில்‌ (7௨68) இரப்‌ பர்‌ சுழாயைச்‌ செலுத்தி அதை ஆச்சிஜன்‌ உள்ள பெட்டியோடு இணைத்துக்‌ குழந்தை ஏராசச்‌ மூச்சு விடுவதற்கு நாம்‌ உதவ வேண்டும்‌. இதைப்‌ பயிற்சி பெற்ற ஒருவராள்தான்‌ செய்ய முடியும்‌. குழந்தையின்‌

இதயத்‌ - துடிப்பையும்‌ கருத்துடன்‌ கவனித்துவர

வேண்டும்‌.

இதிலும்‌ குழந்தை மூச்சுவிடத்‌ தவறினால்‌ பிறகு குழந்தையைக்‌ காப்பாற்றுவது கடினம்‌. குழத்தையின்‌ உள்ளுறுப்புகவில்‌ கோளாறு ஏதாவது இருந்தாலும்‌ குழந்தை மூச்சுவிடத்‌ திணறும்‌. இதைக்‌ சுவனித்து அதற்குத்‌ தேவையான சிகிச்சையை உடனே செய்ய வேண்டும்‌.

குழந்தை குறைமாதப்‌ பிரசவத்தினாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள்‌ பிறந்ததனாலோ மிகவும்‌ சிறியதாக இருந்தால்‌ குழந்தையை அடைகாப்‌ பான்‌ பெட்டியில்‌ (1௦௨௦) வைத்துக்‌ காக்க வேண்டும்‌,

குழந்தைக்குப்‌ பால்‌ புகட்டும்போது மிகவும்‌ சுத்த மான முறையில்‌ கொடுக்கவேண்டும்‌. மிகச்‌ சிறிய குழந்தையாக இருந்தால்‌ சொட்டுக்‌ குழாய்‌ மூலம்‌ சொட்டுச்‌ சொட்டாக இரண்டு மணிக்கு ஒருமுறை 10 மி, லி. முதல்‌ 15 மி. வி, வரை கொடுக்கலாம்‌. சர்க்‌ சுரை சுலந்த நீரைக்‌ கொடுக்கலாம்‌.

இந்தக்‌ குழந்தைகளை உடனே குளிப்பாட்டுவது நல்லதன்று. சுத்தமான வெதுவெதுப்பான கண்ணீரால்‌ துடைத்துலிட்டுச்‌ சுத்தமான பருத்தித்‌ துணியால்‌ நன்கு மூடி வைக்க வேண்டும்‌. சிறுநீர்‌, மலம்‌ வரும்‌ வழிகள்‌ நன்கு உள்ளனவா என்று பார்க்க வேண்டும்‌.

6 மணி நேரம்‌ கழித்துத்‌ தாய்‌ ஆரோச்சியமாசு தல்‌உ நிலையில்‌ இருந்தால்‌ குழந்தைச்குப்‌ பால்‌ கொடுக்கச்‌ செய்யலாம்‌.

௮இ ஆபத்துக்குரிய குழந்தைகளுக்கு எந்த தோயுப எனிஇில்‌ வரக்கூடும்‌. எனவே சுற்றுப்புறத்தைச்‌ சுத்த மாக வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. நுண்ணுயிர்ச்‌ கொல்லிகளைச்‌ (கபய) ரை வழிச்‌ செலுத்த வேண்டும்‌. குழந்தையின்‌ உடல்நிலையைக்‌ கவனித்துச்‌ குளிப்பாட்ட வேண்டும்‌. எண்ணெய்‌, முட்டை தேய்த்‌ துக்‌ குளிப்பாட்டுவது நல்லதன்று. சோப்புப்‌ போட்டுக்‌ குளிக்க வைக்கலாம்‌. குழந்தைக்குப்‌ போதுமாள உணவும்‌, ஆரோக்கியமான சுற்றுப்புறமும்‌ இன்றியமை யாதவை, முலைப்பால்‌ அருந்துவது குழந்தைக்கு நல்லது.

ஒரு மாதத்திற்குள்‌ காசநோய்த்‌ தடுப்பு ஊசியும்‌, 3 மாதத்திலிருந்து மாதம்‌ ஒரு முறை மூன்று தடை முத்‌தடுப்பு ஊசியும்‌, இளம் பிள்ளை வாத தோய்த்‌ தடுப்பு மருந்தும்‌ போட வேண்டும்‌.

த. சி.