818 அதிர்வு தனிப்படுத்தல்
துல்லியமான பொறிகளோ மின்துகளியல் (electronic) கருவிகளோ இருந்தால் அவற்றின் இயக்கம் பாதிக்கப்பட்டுத் துல்லியம் (accuracy) குறையும்.
அதிர்வினால் உண்டாகும் விளைவுகளைக் குறைப்பதற்கு அதிர்வு ஏற்படக் காரணமானவற்றைக் கண்டு, களைந்து, அதிர்வைக் குறைக்க முதலில் முயற்சி எடுக்க வேண்டும். கட்டுமானங்களை முறையாக வகுப்பதனாலும் (design). இயக்கச் சுமையைச் சரியாக சமன் செய்வதினாலும் சரியான இடம், அடித்தள (founda- tion) அமைப்பு, இயங்கு சுமை (dynamic load) ஆகியவற்றைத் தேர்வு செய்வதனாலும் அதிர்வைக் குறைக்கலாம். இத்தகைய முயற்சிகள் எல்லாம் எடுத்தாலும் அதிர்வை முழுவதுமாகக் குறைத்துவிட முடியாது. ஆகவே அதிர்வினால் ஏற்படும் விளைவைக் கட்டுப்படுத்த அதிர்வைத் தனிப்படுத்திப் பிரிக்க வேண்டும்.
அதிர்வு தனிப்படுத்திகளின் நெறிமுறை. அதிர்வு தனிப்படுத்தலின் தலையாய பணி. சுமையின் அளவு தேவைப்பட்ட இயற்கை அலைவெண் (Natural frequency), அதிர்வு தனிப்படுத்தியை அமைக்கும் முறை, வைக்கும் இடம், சாதனங்களுக்கும் அவறறை வைத்துள்ள கட்டுமானத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு ஆகியவற்றிற்கு ஏற்ப அதிர்வு தனிப்படுத்தியைத் தேர்ந்தெடுத்துப்பயன்படுத்தும் நெறிமுறை ஆகும்.
அதிர்வு தனிப்படுத்தி பயனுள்ளதாக அமைய அதன் இயற்கை அலைவெண், அது அடங்கியுள்ள அமைப்பு அல்லது கட்டுமானத்தின் இயற்கை அலைவெண்ணை விட மிகமிக அதிகமாகவோ, மிகமிகக் குறைவாகவோ இருக்க வேண்டும்.
பல்வேறு அலைவெண்களில் அதிர்வு அயையும் கட்டு மானங்களான விமானம் போன்றவற்றில் (5Hz-2000 Hz) உள்ள அதிர்வு தனிப்படுத்தியின் இயற்கை அலைவெண் விமானம் செல்லும் வேகத்தைப் பொறுத்து அமையும்.
அதிர்வு தனிப்படுத்தியின் இயற்கை அலைவெண் குறைவாக இருந்து அது தாங்கும் அமைப்பின் அலை வெண் மாறக்கூடியதாக இருந்தால் அமைப்பின் அலை வெண்ணும், தனிப்படுத்தியின் இயற்கை அலை வெண்ணும் ஒன்றாகும்போது அவை இரண்டும் சேர்த்து மிகவும் அதிகமான அதிர்வை உண்டாக்கும். இதற்கு ஒத்தலைவு (Resonance) அல்லது ஒத்திசைவு என்று பெயர். ஒத்தலைவைக் கட்டுப்படுத்தாவிடில் அது பல கேடுகளை விளைவிக்கும். ஆகவே ஒத்தலைவால் ஏற்படும் பெரும (Maximum) அதிர்வை 3 மடங்கிற்கு மேல் போகாமல் கட்டுப்படுத்த அதிர்வு தனிப்படுத்தியின் வில்தன்மையை (Resilience) ஒடுக்க வேண்டும்.
அதிர்வு தனிப்படுத்தி என்பது அதிர்வு தளிப்படுத்தும் அமைப்பின் நடுப்பகுதி மட்டுமே. மற்ற பகுதிகள் அடித்தளமும் (Foundation) பொறிகளும் ஆகும். ஒத்தலைவு நேரம் உய்யமானதாக (Critical) இருந்தால் அதிர்வு தனிப்படுத்திகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும்போது, அடித்தனங்களின் நெளிவும் (Flexi- bility) அதிர்வுதனிப்படுத்தியின் நெளிவும் தொடர் நிலையில் (Series) அமையும். அப்பொழுதுதான் கமையேற்றப்பட்ட அமைப்பின் அலைவெண் இந்த இரு நெளிவுகளின் கூட்டுத்தொகையின் வர்க்க மூலத்திற்குத் (Square root) தலைகீழ் விகிதத்தில் இருக்கும். ஒத்தலைவின்போது, கட்டுமானத்தில் கூடுதலான நெளிவுத்தன்மையை அமைத்தால் அது இயற்கை அலை வெண்ணைக் குறைப்பதோடு இடப்பெயர்ச்சியையும் (Displacement) கூட்டும். இது ஒடுக்கப்படாத கட்டமைப்புத் தன்மையால் ஏற்படுகிறது. துணைக்கட்டுமானம், கட்டுமானத்தில் மூட்டியிருக்கும் இணைப்புகள் ஆகியவற்றின் தெளிவு அதிர்வு தனிப்படுத்தியின் தெளிவைவிட 25 விழுக்காட்டுக்கு மேல் அதிகமாக இருக்கக்கூடாது.
அதிர்வு தனிப்படுத்தலின் வகைகள். அதிர்வு தனிப்படுத்தல் இரண்டு வகைப்படும். அதிர்வு உண்டாக்கும் இடத்தில் அதிர்வு அந்த இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்கும் முதல் முறை செய் (active) அதிர்வு தனிப்படுத்தல் எனப்படும். இதற்கு மாறாக, அதிர்வினால் பாதிக்கப்படும் பொருள்களைத் தனிப்படுத்தும் இரண்டாம் முறை முடக்க அல்லது செயப்பாட்டு (passive) அதிர்வு தனிப்படுத்தல் ஆகும்.
வில்-பொருண்மை அமைப்பு (Spring - mass system). ஒரு வில்லைப் பயன்படுத்தி ஓர் அமைப்பின் பொருண்மையை அடித்தளத்தோடு இணைக்கலாம். இதற்கு அதிர்வு சமன்படுத்தல் என்று பெயர். இந்த முறை அலைவெண் நிலையாக இருக்கும் அமைப்புகளுக்கே பொருந்தும். அலைவெண் மாறும் அமைப்புகளுக்கு அதிர்வு ஒடுக்கிகனைத் (vibration dampers) தான் பயன்படுத்த வேண்டும். இதில் நிலைமைக்கேற்ப அடித்தளத்தின் மொத்த பொருண்மையைக் கூட்டியோ அல்லது அதன் அடிப்பரப்பைக் கூட்டியோ அடித்தளத்தின்