உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/919

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அக்கி 883

சின்ன அம்மை அல்லது நீர்க்குளுவான் (Chicken pox ) என வழங்கப்படும் நோய் அதிநுண்ணுயிரிகளால் (Virus) ஏற்படும் மற்றொரு நோய். அம்மை அக்கி ஒரு திடீர்த் (Acute) தொற்று நோய். இந்த அதி நுண்ணுயிர் சிலருடைய உடலில் தண்டுவடப் பின் வேர் முடிச்சில் (Posterior root ganglia) அல்லது கபால நரம்பு முடிச்சில் அழற்சியேற்படுத்தி உடலின் அல்லது முகத்தின் ஒரு பகுதியையோ, ஒரு கால் அல்லது கை யையோ பாதிக்கும். இது ஒரு குறிப்பிட்ட நரம்பின் ஊடுருவு பகுதியின் தோலில் கொப்புளங்களாகத் (Vesicles) தோன்றும். நோயின் வரலாறு கிரேக்கர்களால் இது ஒட்டியாணம் (Girdle) எனப் பெயர் பெற்றது. கி.பி. 1888 ஆம் ஆண்டு போகே (Bokay) என்பவர் இந்நோய்க்கும் சின்ன அம்மைக்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடித்தார். பிறகு 1921 ஆம் ஆண்டு விப்சூட்ச் (Lipschutz) என்பவர் இந்நோ யுண்ட தோலின் வெட்டுப் பகுதிகளை (Cut Sections) உருப்பெருக்கி மூலம் பார்த்து விவரித்தார். நோய்க்காரணம் அல்லது நோய் நாடு இயல்: இந்த அதிநுண்ணுயிர் மற்ற அதிநுண்ணுயிர்களை விடப் பெரியது. இது மனித உடலின் ஒட்டுண்ணி (Parasite) ஆகும். தோலில் உள்ள கொப்புளங்களிலிருந்து நோய்க்குக் காரணமான அதிநுண்ணுயிரிகளைத் தளிப்படுத்தலாம். நோய்க்குறிகள் படம் 1 அம்மையக்கி அதிநுண்ணுயிரால் ஏற்பட்ட கொப்புளம் பெரிய தும் சிறிதுமாகவும் படர்ந்தும் ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பதைக் காணலாம். கொப்புளத்தின் அளவில் வேறுபாடு கள் உள்ளன. தலை நோவும், மூளை வெளியுறை அழற்சியின் குறி களும் தோன்றலாம். அந்தப் பகுதியின் நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கி வலியுடனிருக்கும். 75% நோயாளிகளுக்கு இரண்டாவது முதுகெலும்பி லிருந்து (Thoracic vetebra) இரண்டாவது கீழ் முது கெலும்பு வரையுள்ள பகுதியே பாதிக்கப்படுகிறது (Lumbar vertebra). இதற்கு அடுத்தபடியாக ஐந்தாவது கபால நரம்பின் கிளையின் ஊடுருவல் பகுதி பாதிக்கப்படுகிறது. 50% நோயாளிகளுக்குக் கண் பாதிக்கப்படுகிறது. முழங்கை முழங்கால் பகுதிகளுக்குக் கீழே, இந்த நோய் மிக அரிதாகவே பாதிக்கும். ஏழாவது கபால நரம்பைச் சார்ந்த வளைவு முடிச்சு அல்லது மூழங்கால் முடிச்சு (Geniculate ganglion) பாதிக்கப்பட்டால், உள்காது, காது மடல், தொண்டை போன்ற பகுதிகளில் 21 நாட்கள், கொப்புளங்களும் வலியும் ஏற்படும். நாக்கின் முன்பகுதி சுவையுணர்வை இழந்து விடும். உடல் எரிச்சல், வலி நோய் அடைவுக் காலம் 7 முதல் இரண்டு, மூன்று நாட்களுக்குக் காய்ச்சல், நோவு. பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் உணர்வு இழந்து போதல் (Anaesthesia), அதிவ. Hypr algesia) முதலியவை ஏற்படும். பிறகு ஒரு குறிப்பிட்ட நரம்பின் ஊடுருவு பகுதித் தோலில் சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றும். இவை ஓரிரு நாட்களில் நீர்க் கொப்புளங்களாக மாறும். இரண்டு மூன்று நாட்களில் இசுகொப்புளங்களில் சீழ் பிடித்துவிடும் (Pustules). பின்னர் அவை காய்ந்து, சுருங்கி, உலர்ந்துவிடும். கொப்புளங்கள், உடலின் மையத்திலிருந்து ஒரு பாதியில் மட்டும் பரவும். உடலில் இவை ஒரு அரை ஒட்டியாணம் போன்றிருக்கும். வலியும், எரிச்சலும் ஒரு நரம்பின் ஊடுருவல் பகுதியில் உடலைச் சுற்றியும் அல்லது கை கால்களில் நேர்க்குத்தாகவும் பரவும். அ. க. 1- ஒரு முறை அம்மை அக்கி கண்டவர்க்கு மிக அரிதாகவே இரண்டாவது முறை காணும். இந்த நோய் ஏறத்தாழ 10 நாட்கள் முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கலாம். இந்நோயின் முக்கிய பின் விளைவான நரம்புத்தளர்ச் சியின் போது ஏற்படும் வலி தாங்க முடியாத ஒன்றா கும். வலியின் கொடுமையைத் தாங்க முடியாது. சிலர் தற்கொலைக்கும் துணிவர். இது கில வாரங்கள் முதல் பல வாரங்கள் வரை நீடிக்கலாம். மிகக் கடுமையான வலியும், எரிச்சலு மிருக்கும். கொப்புளங்களிலுள்ள நீரை, சீம்சா (Giemsa) முறை யில் சாயமிட்டு (Stain) ஆய்ந்தால் பூத உயிரணுக்களை