உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/918

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

882 அம்மீட்டர்‌

882 அம்மீட்டர் மாங்கனின் கான்ஸ்ட்டன்டன் கான்ஸ்ட்டன்டன்! மாங்கனின் அளவு மின்னோட்டத்தின் அளவைப் பொறுத்துள்ளது. எனவே வெளிப்படும் வளிமம் அல்லது படியும் உலோ கத்தை அளந்து மின்னோட்டத்தை அளக்கலாம். இந்த அடிப்படையில்தான் அனைத்துலக ஆம்பியர்' என்னும் மின்னோட்ட அளவின் செந்தர அலகு (Standard unit) வரையறுக்கப்பட்டுள்ளது. படம் 10. வெப்பச்சந்தி மின்னோட்ட அளவி கிறது. வெப்பக்கடத்தல் வகையில் பெரும்பாலும் இரும்பு - கான்ஸ்டன்டன், தாமிரம் - கான்ஸ்ட்டன்டன் மாங்கனின் - கான்ஸ்ட்டன்டன் ஆகிய சந்திகள் பயன் படுத்தப்படுகின்றன. மாங்கனின் கம்பியும், கான்ஸ்ட்டன்டன் கம்பியும் இணையாக இழுத்துக் கட்டப்பட்டுள்ளன. கீழ்ச்சந்தி ஒரு தடையின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. இத்தடைப் பகுப்பை ஒரு நகரியால் (Slider) சரி செய்து இரு சும்பி களின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செல்லு மாறு செய்யலாம். மாங்கனின் கம்பியின் மையத்தி லிருந்து கான்ஸ்டன்டன் கம்பியும், கான்ஸ்டன்டன் கம்பியின் மையத்திலிருந்து மாங்கனின் கம்பியும் நுண் பற்றவைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இரு சந்திகளும் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு இவ் விரு முனைகளும் ஒரு கால்வனா அளவியுடன் இணைக் கப்பட்டுள்ளன. மின்னோட்டத்தால் இச்சந்திகளில் தோன்றும் மின்னியக்கு விசையைக் கால்வனா அளவி யால் அளந்து மின்னோட்டம் அளக்கப்படுகிறது. இவ்வகை அளவிகள் வெப்பநிலைக்கெழு (Tempera- ture coefficient), பெல்ட்டியர் விளைவு (இரு சந்திகளும் சமமாகச் சூடாகாமல் இருப்பது) ஆகியவற்றால் பாதிப் புறுவதில்லை. வேதியியல் வகை (Chemical type). ஒரு மின்கரை சலின் (Solution) வழியாக மின்னோட்டம் செலுத்தப் படும்போது அது மின்கரைசலில் வேதியியல் பிரிகையை (Decomposition) உண்டாக்குகிறது. இந்த வேதியியல் பிரிகையின்போது வளிமம் (Gas) வெளிப்படுகிறது அல்லது மின்னோட்டம் கரைசலைவிட்டு நீங்கும் இடத் தில் உலோக வீழ்படிவு ஏற்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் வளிமம் அல்லது வீழ்படியும் உலோகத்தின் படம் 11 வேதியியல்வகை மின்னோட்ட அளவி 1. தேர்மின்முனை 2. கரைசல் 3. எதிர் மின்முனை நீருடன் கரைந்த வெள்ளி நைட்ரேட் கரைசலின் வழியாகச் செலுத்தப்படும்போது நொடிக்கு 11.18 மில்லிகிராம் அளவு வெள்ளியைப் படியச் செய்யும் மின் னோட்ட அளவு 'அனைத்துலக ஆம்பியர்' என்று வரை யறுக்கப்பட்டுள்ளது. மின்னோட்ட அளவியின் அகன்ற இடைவெளி முழு வதிலும் (Wide range) இந்த அளவுகோல் மின்னோட்ட அளவுக்கு ஏற்ப நேரியல்பிலேயே மாறுவதால் இவ் வளவி செந்தர அளவுகளை வரையறுக்கப் பயன்படு கிறது. நிலை வகை. இவ்வகை அளவிகள் இயங்கு உறுப்பு ஏதுமின்றி மின்துகளியல் (Electronic) நெறிமுறையில் மின்னோட்டத்தின் அளவு நேரடியாக இலக்கக் காட்சி யாகத் (Digital display) தெரியும் வண்ணம் புதியமுறை யில் உருவாக்கப்பட்டுள்ளன. கலப்பு வகை. மேற்கண்ட வகைகளில் பயன்படுத்தி யுள்ள நெறிமுறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நெறி முறைகளைப் பயன்படுத்தி இயங்கும் சில கலப்புவகை அளவிகளும் உருவாகியுள்ளன. மேற்கண்ட எல்லா வகை அளவிகளின் பயன்பாடும் அவற்றின் துல்லியமும் முன்பக்கம் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. மா.தெ. நூலோதி 1. சுப்பிரமணியன், ஆர்.கே. மின்அளவைக் கருவிகள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. 1975. 2. Golding, E.W.. Widdis. F.C., Electrical Measurements and Measuring Instruments. Sth Edition. Wheeler Publishers, Allahabad, 1979.