உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 அலையியக்கம்‌, பாய்மங்களில்‌

394 அலையியக்கம், பாய்மங்களில் நூலோதி 1. Weber,Manaing, White and Weygand, College Physics, Tata Mcgraw-Hill Publishing Company Ltd., New-Delhi, 1982. 2. Starling S.G. and Woodall, A.J., Physics, Longmans, Green and Co. Ltd., 48, Grosvenor Street, London, W. 1985. அலையியக்கம், பாய்மங்களில் பரவும் அலையியக்கம் என்பது பல நிகழ்ச்சிகளுக்கு அடிப் படையான ஒன்று. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத் துக்கு ஆற்றல் செல்ல வேண்டியமுறைகளில் இது ஒன்று-ஓர் ஊடகத்தில் (medium) அலை போது (propagation) ஒவ்வொரு துகளும் அலைக்கப் பட்டுச் (disturbed) சீரியல் இயக்கத்திற்குட்பட்டு (simple harmonic vibration) அதிர்கின்றது. தன்னிலை யிலேயே இருந்து அதிருமேயன்றி அது அலையியக்கத் துடன் நகர்வதில்லை. இது அலை இயக்கத்தின் ஒரு பண்பு ஆகும். பாய்மங்களில் (fluids) ஓரிடத்தில் ஏற்படும் அலைவு (disturbance) பிற இடங்களுக்கு அலையீயக்கத்தின் மூலமே பரவுகிறது. ஆற்றல் பரவும் திசை அலைபரவும் திசை எனப்படும். பாய்மத்துடன் ஒப்பிடும்போது கிடைக்கும் அதிர்வின் சார்பு வேகம் அலைகளின் திசைவேகம் எனப்படும். பயன்கள். ஆழமானி (Fathometer), சோஃபார் (SOFA R )முதலிய கடலியற் கருவிகள் அலை இயக் கத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஒலியினும் கடிது செல்லும் வான ஊர்தி (Supersonic Aircraft). காற்றுச் சுருங்கைகள் (wind tunnels), அதிர்ச்சிக் குழாய்கள் (shock tubes), குண்டு வெடிப்பு, புற ஒலி அலைகளைப் (ultrasonic waves) பயன்படுத்தும் கருவிகள் முதலியவற்றிலும் அலையியக்கம் இடம் பெறுகிறது. பாய்மங்களில் அலைகள் விளிம்பு வளைவும் (diffraction), விலகலும் (refraction) அடைவதால் அவற்றை ஓரிடத்தில் குவியச்செய்து ஆற்றலை அதி கரிக்கலாம். சான்றாக அதிர்ச்சிக் குழாய்களில் ஆற்ற லானது அலையியக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்கப்பட்டு ஒரு செறிவான துடிப்பாக (sharp pulse) மாற்றப்படுகிறது. பெரிய கணிக்கும் கருவிகளில் (computers) புற ஒலி அலைகளைப் பயன்படுத்தும் நினைவு அடுக்குகள் (menories) பயன்பெறுகின்றன. செங்குத்தாகச் செல்லும் எரோபி (aerobee) வெளிக்கோள் போன்ற விண் வெளிவிடும் எரி பொருட் கலவையினால் தோன்றும் பாய்ம அலைகள் தரைநிலையத்தில் இருந்து உணரப்பட்டுக் காற்றின் வேகம், காற்றில் ஏற்படும் அடர்த்தி வேறுபாடுகள் முதலியன கணக்கிடப்படுகின்றன. உயர் வளி மண்டலத்தில் (upper atmosphere) அலைகள். வானிலையை மிகுதியாக மாற்றமடையச்செய்கின்றன என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். இது வானிலையை முன் கூட்டியே கணிப்பதற்கு உதவுகிறது. அலைகளின் வகைகள். ஒரு நீர்மப் பரப்பில் புவி ஈர்ப்பு விசை (gravity) தோற்றுவிக்கும் அலைகள் குறுக்கலைகளாகும் (transverse). ஆனால் வளிமம் போன்ற ஒரு பாய்மத்தினுள் தோன்றும் அலைகள் நெட்டலை (longitudinal) களாகும். பாய்மத்தின் அடுத்தடுத்த அடுக்குகள் மாறிமாறி இறுக்கவும் (compressed) விரிவாக்கவும் (expanded) படுவதால் இவை தோன்றுகின்றன. இந்த நெருக்கங்களும், தளர்வுகளும் அலைவிரையும் திசைக்கு இணை யான (parallel) திசையில் உண்டாவதால் நெட்டலைகளாகும். வை அலையியக்கத்தின்போது ஒரு பாய்மம் அமுக்கப் பட்டால் அத்தகைய அலைகளை அமுக்க அலைகள் (compressional waves) எனவும், பாய்மம் விரிவடைந் தால் அத்தகைய அலைகளை தளர்வு அலைகள் (expansion waves) எனவும் வகைப்படுத்தலாம். மேலும் அவைகளை அவற்றின் வீச்சைப் (amplitude) பொறுத் தும், பாய்மத்தின் வேதியியல் தன்மையைப் (chemical nature) பொறுத்தும் வகைப்படுத்தலாம். சான்றாக சிறுவீச்சினைக் (small amplitude) கொண்ட அவை களை ஒலி அலைகள் (acoustic waves) எனலாம். வேதியியல் மாற்றமடையாத (chemically inert) பாய்மங்களில் பரவும் இறுக்க அலைகளை அதிர்ச்சி அலைகள் (shock waves) எனலாம். பூமியினுள் செல் லும் அலைகளை நில அதிர்ச்சி அலைகள் (ceismic waves ) எனலாம். வேதியியல் மாற்றத்தின்போது தோன்றும் வீச்சுமிகுந்த (large amplitude) அலைகளை வெடி அலைகள் (detonation waves) எனலாம். இத்தகைய அலைகள் ஒலி அலைகளைக் காட்டிலும் கூடுதல் வேகத் துடன் செல்லக்கூடியவை. ஒலி அலைகள். பாய்மங்களில் ஒலி அலைகள் பர வும் வேகத்தைக் கணக்கிடக் கீழ்க்காணும் சமன்பாடு உதவுகிறது. =V K இதில் 'V' என்பது ஒலி அலைகளின் வேகத்தையும், K என்பது பாய்மத்தின் பருமமீட்சிக் கெழுவையும், P என்பது அடர்த்தியையும் குறிக்கும்.