பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H+ + KHb HHb + K+ K+ + HCO KHCO, K* + CIĪ KC1

அமில-காரச் சமன்பாடு

NaCl → Na+ + CĪ (சிவப்பணுவுள் ஊடுருவு கிறது) (பிளாஸ்மாவில் தங்குகிறது)

Na + HCO, → NaHCO,

இரத்தச் சிவப்பணுவின் புறச்சுவர் HCO அய னிக்கு ஊடுருவத்தக்கதாக இருப்பதால் சிவப்பணு வின் உள்ளிருந்து பிளாஸ்மாவிற்குப் பரவுகிறது.

இவ்வாறாக 70% C0, பைக்கார்பனேட்டாகச் சிவப்பணுக்களின் மூலமும், பிளாஸ்மாலின் மூலமும் நுரையீரலை வந்தடைகிறது. நுரையீரலில் மேற் கூறிய வினைகள் யாவும் எதிர்த்திசையில் நடந்தேறு கின்றன. இங்கு தமனி இரத்தத்தில் குளோரைடு பிளாஸ்மாவிற்குத் திரும்பக் கடத்தப்பட்டுப் பொட் டாசியம் விடுவிக்கப்படுகிறது. இந்தப் பொட்டா சியம் புதிதாக உண்டாகிய ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட ஹீமோகுளோபினைத் தாங்குகிறது. பிளாஸ்மாலிற் குத் திரும்பிய CI அயனி, Na+ அயனியுடன் வினை புரிந்து, Na T விடுவிக்கப்பட்டு மூச்சுக்காற்றில் வெளி யேறுகிறது.

பிளாஸ்மா புரதத் தாங்கல் முறை. CO, குறைந்த அளவிலேயே பிளாஸ்மா புரதத்தால் கீழ்க்கண்ட வாறு தாங்கப்படுகிறது.

CO, + H,O = H,CO

H,CO, + B புரதம் — BHCO, + H புரதம் .

H+ புரதம் H,CO ஐ விட ஒரு வலுவிழந்த அமில மாகும்.

சுவாசமுறை அமில - காரச் சமன்பாடு. சுவாச இயக்க முறை அமில காரச் சமன்பாட்டிற்கு மிகவும் துணைபுரிகிறது. சுவாச மையமானது (res piratory centre) pH, Pco, இவற்றின் குறைந்த மாற்றத்திற்கும் எளிதாகத் துண்டப்படுகிறது.

CO, இரத்தத்திலிருந்து நுரையீரல் சிற்றறைக்கு எளிதாகப் பரவுகிறது. இரத்தத்தில் PCO,வின் அளவை 1.5 மி. மீ. அளவிலும், H அயனியின் அடர்த்தி சிறிதும் உயர்வது, சுவாச மையத்தைத்

தூண்டி அதிகமான மூச்சுக் காற்று வெளியேற வழி கோலுகிறது. அதிகப்படியாக மூச்சுவிடுதல், கூடு தலான CO வை வெளியேற்றுகிறது. இதைப் போன்றே Peo, H* அயனியின் அடர்த்தி குறையும் பொழுது, சுவாச இயக்கம் குறைபட்டு மூச்சுவீடு தலும் குறைகிறது. இந்த நிலை இரத்தத்தின் Pco வும் அயனியின் அடர்த்தி நிலையும் இயல்பான நிலைக்கு வரும் வரை நடைபெறுகிறது. H

வளர்சிதை மாற்றத்தினால் H,CO, தொடர்ச்சி யாக உண்டாகிக் கொண்டிருப்பினும், இந்தச் சுவாச இயக்க முறையினால்H,CO, BHCO,=(!) என்ற

நிலையான விகிதத்திலேயே வைக்கப்படுகிறது.

20

சிறுநீரக வழி அமில - காரச் சமன்பாடு. நுரையீரல், எளிதில் ஆவியாகக் கூடிய அமிலங்களை மட்டுமே வெளியேற்றக்கூடிய ஆற்றல் படைத்தது. ஆனால் நிலை அமிலங்களையோ, காரங்களையோ அதனால் வெளியேற்ற இயலாது. எளிதில் ஆவியாக இயலாத அமிலங்களான லேக்டிக் அமிலம், பைருலிக் அமிலம், ஹைட்ரோக் குளோரிக் அமிலம், ஃபாஸ்ஃபோரிக்அமி லம்,சல்ப்ஃயூரிக் அமிலம் போன்றவை பைக்கார்பனேட் தாங்கல் முறையால் நன்கு தாங்கப்படுகின்றன. இதனால் செலவாகும் கார இருப்பை (alkali reserve) நுரையீரலால் ஈடுகட்ட இயலாது.

செலவாகும் கார இருப்பைச் சிறுநீரகத்தால் மட்டுமே ஈடுசெய்ய இயலும். சிறுநீரகம், தன் மீள் உறிஞ்சும் தன்மையாலும் (rcabsorbing capacity), சுரக்கும் தன்மையாலும், அமில - காரங்களை வெளியேற்றும் தன்மையாலும் அமில-காரச் சமன் பாட்டைப் பேணுகிறது.

இயல்பான நிலையில் சிறுநீரின் pH மதிப்பு 6.0 ஆகவும், பிளாஸ்மாலின் pH மதிப்பு 7.4 ஆகவும் அமைந்துள்ளன. சிறுநீரகம் பிளாஸ்மாவில் உள்ள அமிலத்தை வெளியேற்றுவதாலேயே சிறுநீர் அமிலத் தன்மையுடையதாய் உள்ளது. அமிலத் தன்மை மிகும்பொழுது (acidemia) சிறுநீர் அதிக அமிலத் தன்மையையும் (pH-4.5), காரத் தன்மை மிகும் பொழுது சிறுநீர், அதிகக் காரத் தன்மையையும் (pH -8.2) அடைகிறது. இவ்வாறு சிறுநீரகம் பாஸ் ஃபேட்டு, பைக்கார்பனேட்டு இயங்கு முறை, அம் மோனியா இயங்கு முறை என்ற இரு முறைகளால் HT யின் அடர்த்தியை நிலைப்படுத்துகிறது.

பாஸ்ஃபேட்டு இயங்கு முறை. இரத்தத்தில் குறைந்த அடர்த்தியில் காணப்படும் பாஸ்ஃபேட்டு சிறுநீரகத் தில் அதிக அடர்த்தியாகி ஒரு முக்கிய தாங்கல் முறை

15