உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/817

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்சிஜன்‌ 787

குறைந்த ஒளி விலகல் எண் இடைவெளியையும், அதிகமான ஒளியியல் அச்சுக் கோணங்களையும், ஒற்றைக் கனிமப்பிளவுத் தன்மையையும் வைத்து ஏனைய கனிமங்களிலிருந்து எளிதில் பிரித்துக் காண முடியும். இக்கனிமங்கள் கிரானைட்டு அல்லது டயா பேஸ் (diabase) போன்ற பாறைகளில் உள்ள குழி களில் காணப்படும். மேலும் சுண்ணாம்புப் படிவு களும், கார அனற் பாறைகள் எரிமலைக் குழம்பு களால் ஊடுருவப்படும்பொழுது உருவாகும் தொடுகைமாற்றவட்ட வளாகப் (contact aurecl} பகுதிகளில் பிரிஹினைட்டு (prehnite), சோயிசைட்டு (zoisite), டாட்டோலைட்டு (datolite), டூர்மலின (tourmaline), ஆக்டினோலைட்டு (actinolute), கால் சைட்டு (calcite) போன்ற கனிமங்களுடன் தொடர் புற்றுக் காணப்படுகின்றன. இவை டாஸ்மேனியா நாட்டிலுள்ள ரோஸ்பெர்கு (Roseberg), ஜப்பான் நாட்டிலுள்ள ஒபிரா (Obira),பிரான்சு நாட்டிலுள்ள கிருஸ்டோஃபே (Cristophe), சுவிட்சர்லாந்திலுள்ள ஊரி (Uri), கோத்தார்டு (Gottbard), அமெரிக்காவில் பெத்லஹேம் (Bethlehem), கலிஃபோர்னியா போன்ற இடங்களில் அதிகமாக காணப்படுகின்றன. நூலோதி ஞா.வி.இரா. 1. Ford, W. E., Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastera Limited, New Delhi, 1985. 2. Winchell, A. N., Wincell. H. D., Elements of Optical mineralogy, Fourth Edition, Wiley Eestern Private Limited, New Delhi, 1968. 3. Deer, W. A., Howie, R.A., Zussman, J., An Introduction to the Rock forming Minerals, Third ELBS Impression, ELBS and Longman, England, 1983. ஆக்சிஜன் இது வளிம நிலையில் உள்ள ஒரு தனிமம். இதன் அணு எண் 8, அணு எடை 15.994. இது புவியின் மேல் பரப்பில் அதிகம் கிடைக்கும் தனிமம். இது உயிரினங்கள் சுவாசிக்கவும், பல்வேறு வேதி வினை கள் நிகழவும் காரணமாக உள்ளது. இதன் எலெக்ட் ரான் அமைப்பு 1s22522p; இணைதிறன் (அணுவலு 6760) 2. 1..2-50 31. ஆக்சிஜன் 787 இவ்வளிமம் 1774இல் ஜோசப் பிரிஸ்டிலி (Joseph Priestley) என்ற ஆங்கில அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது; 1787இல் பிரெஞ்சு வேதியியல் வல்லுநர்களால் 'ஆக்சிஜன்' (oxygen) என்று பெய ரிடப்பட்டது.(ஆக்சிஜன் என்ற சொல்லுக்கு அமில மாக்கி என்று பொருள்.) அக்காலத்தில், இத்தனி மத்தின் ஆக்சைடுகளான கந்தகத்தின் ஆக்சைடுகள், நீரில் கரைந்து அமிலங்கள் உண்டாக்கும் முறை அறியப்பட்டதால் இதற்கு ஆக்சிஜன் என்று பெயரிட் டனர். ஆனால் அமிலங்கள் எல்லாவற்றிலும் ஆக்சி ஜன் இல்லை. இப்பொழுது தனிமங்களின் ஆக்சிஜன் கொண்ட அமிலங்கள் ஆக்சிஅமிலங்கள் (oxyacids) என்று அழைக்கப்படுகின்றன. எடை கிடைக்கும் விதம். புவியில் மணல், நீர் ஆகிய வற்றில் 49.5 சதவீத விகிதத்தில் இது உள்ளது; நீரில் 88.81 சதவீத எடை விகிதத்திலும், உலர் ர்ந்த காற்றில் 20.945 சதவீதக் கன அளவு விகி தத்திலும் உள்ளது. இத்தனிமம் மூன்று ஐசோடோப் புகளாகக் (isotopes) காணக்கிடைக்கின்றது. இதில் 99.749 சதவீத ஆக்சிஜன்-16, 0.037 சதவீத ஆக்சிஜன்- 17, 0.204 சதவீத ஆக்சிஜன்-18 உம் உள்ளன. இயல் பான நிலையில் ஆக்சிஜன், 0 என்ற 'இரு அணு' (diatonic) மூலக்கூறாக உள்ளது. சுவாசிததல் போன்ற உயிரியல் நிகழ்ச்சிகளால் வளிமண்டலத்தில் இருந்து தொடர்ச்சியாக ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும் ஒளிச்சேர்க்கை (photosynthesis) போன்ற வேறு வகை உயிரியல் நிகழ்ச்சிகளால் ஆக்சிஜன் உ காற்று மண்டலத்தை மீண்டும் வந்தடைகின்றது. எனவே வளி மண்டலத்தில் ஆக்சிஜன் அளவு ஒரே சீரான நிலையில் உள்ளது. ஆக்சிஜன்-14, ஆக்சிஜன்-15, ஆக்சிஜன்-19 என்ற இதன் கதிரியக்க ஐசோடோப்புகள் (radio- active isotopes) துகள் முடுக்கிகளைப் (particle accelerators) பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஐசோடோப்புகள் குறைந்த அரை ஆயுள் களை (half-life pariods) உடையவை. இது தனிம வரிசை அட்டவணையில் VI A தொகுதியில் உள்ளது. இதன் அயனியாகும் ஆற் றல் (ionisation potential) 314 கிவோ கலோரி மோல் ஆகும். எனவே இது எளிதில் எலெக்ட்ரான்களை இழப்பதில்லை. இத்தொகுதியில் உள்ள மற்ற தனி மங்களை விட இது மிக அதிகமான அயனியாகும் ஆற்றலைப் பெற்றுள்ளது. அலோகமான (non-metal) இத்தனிமத்தின் பண்புகளுடன் இதே தொகுதியில் உள்ள மற்ற தனிமங்களை ஒப்பிட்டு நோக்கும் போது, இதன் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் மிகவும் அதிகம். இத்தனிமத்தின் வெளிச்சுற்றுப்பாதையில்