788 ஆக்சிஜன்
788 ஆக்சிஜன் 1a 1 H lla 3 4 Li Be 11 12 0 2 Illa Va Va Va Vila He 56 2 B 3 10 E C N 0 F Ne 23 14 15 16 17 18 Na Mg 1lb IVb Vb Vib VIIb Vlll llb A1 Si P S CI Ar 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh 55 56 57 72 73 74 75 76 77 Cs Ba La Hf Ta W Re Os fr 87 88 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 Fr Ra Ac RI Hal Pd Ag Cd In Sn Sb Te Xe 78 79 80 81 82 83 84 85 86 Pt Au Hg Tl Pb Bi Po At Rn 68 69 70 71 Tm Yb Lu லாந்தனைடு 58 | 59 | 60 | 61 | 62 தொகுதி Ce Pr Nd Pm Sm 63 Eu 64 Gd 65 66 Tb Dy 67 Ho Er தொகுதி Th Pa 0 91 92 93 94 95 96 97 98 U Np Pu Am Cm Bk Cf 99 100 101 102 103 Es Fm Md No Lr (outer orbit) ஆறு எலெக்ட்ரான்களே உள்ளதால், மேலும் இரண்டு எலெக்ட்ரான்களைக் கவர்ந்து நியான் வளிமத்தின் எலெக்ட்ரான் அமைப்பைப் பெறும். எனவே இதன் ஆக்சிஜன் ஏற்ற நிலை -2 ஆகும். இதனால் இத்தனிமம் 02- அயனியாக எளி தில் மாறும். இத்தனிமத்தின் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் மிக அதிகமாக இருப்பினும், ஃபுளுரின் மோனாக்சைடு (F2O) என்ற சேர்மத்தில் இது+2 நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. VIA தொகு தியில் உள்ள மற்ற தனிமங்கள் போல் அல்லாமல், இதில் காலியான d - ஆர்பிட்டால்கள் (d-orbitals) இல்லை. இத்தொகுதியில் உள்ள ஆக்சிஜனும், கந் தகமும் மட்டுமே, பாலி ஆக்சைடுகளையும் (polyoxides) பாலிசல்ஃபைடுகளையும் (polysulphides) தருகின்றன. கந்தகத்தைப் போலவே இது புறவேற்றுமை உருவங் களாக (allotropes) உள்ளது. அவை Og, Og1 இரு ஆக்சிஜன் அணுக்கள் இணைந்து ஆக்சிஜன் மூலக் கூறையும், மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இணைந்து ஓசோன் (Ozone) மூலக்கூறையும் தருகின்றன. இத் தொகுதியில் உள்ள மற்ற தனிமங்கள் போல் அல் லாமல் இது ஹைட்ரஜன் பிணைப்பையும் (hydrogen bond) ஏற்படுத்தவல்லது. தொழில் முறையில் தயாரித்தல், காற்றைக் குளிர் வித்து, நீர்மமாக்கிப் பின்னக் காய்ச்சி வடித்தலுக்கு (fractional distillation) உட்படுத்துவதனால் பெரும ளவில் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. காற்றில் உள்ள தேவையற்ற கார்பன் டை ஆக்சைடு, நைட்ர ஜன் போன்ற வளிமங்களை நீக்கி ஆக்சிஜன் தயாரிக் கப்படுகிறது. காற்று உலர வைக்கப்பட்டுப் பின் குளிர்விக்கப்பட்டு. அதில் உள்ள கார்பன் டைஆக் சைடு வளிமம் நீக்கப்படுகிறது. இவ்வளிமம் 30 வளிமண்டல அழுத்தத்திற்கு (atmospheric pressure) உந்தப்பட்டு, இணைக்கப்பட்ட பிஸ்டன் (piston) இயக்கப்படுகிறது. இவ்வேலையைச் செய்வதற்கான ஆற்றலை, அது தன்னிடமே இருந்து எடுத்துக் கொள்வதால் காற்றின் வெப்பநிலை குறைகிறது. இம்முறைக்கு ஜூல்-தாம்சன் விளைவு (Joule -Thom- son effect) என்று பெயர். இம்முறையை மீண்டும் மீண்டும் செய்யும்போது, காற்று படிப்படியாகக் குளிர்ச்சி அடைகிறது. இப்போது குறைந்து கொதி நிலையை உடைய நைட்ரஜன் (77.3 K)நீர்மமாகிறது. எஞ்சியிருக்கும் காற்றை மேலும் பிஸ்டன் இயக்கத் திற்கு உட்படுத்தும்போது, இது வெப்பநிலையை இழந்து 90.04° Kஇல் நீர்ம ஆக்சிஜனாக (liquid oxygen) மாறுகிறது. இவ்வாறு காற்றில் இருந்து பெருமளவில் ஆக்சிஜன் பெறப்படுகிறது. எடுத்துச் செல்லுதல். 1. குழாய்கள் மூலமாகத் தேவையான இடங்களுக்கு ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுகிறது. இதை இம்முறையில் ஓர் தொழிற் சாலையில் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லலாம். 2.சுமார் 10% வரை நீர்ம நிலையில் இது எடுத் துச் செல்லப்படுகிறது. குளிர்விக்கப்பட்ட, அரிதிற் கடத்திகளால் (semiconductor) செய்யப்பட்ட தொட் டிகளில் நீர்ம ஆக்சிஜன் வைக்கப்பட்டுத் தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. 3. சுமார் 1% வரை அதிக அழுத்தத்தில் உருளை களில் எடுத்துச் செல்லப்படுகிறது. இயல்புகள். இது இயல்பான வெப்பநிலையில் நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற வளிமம். குளிர் விக்கப்பட்ட நைட்ரஜன் நிறமற்ற நீர்மமாக மாறு வதுபோல் அல்லாமல், இது வெளிறிய நீலத் திரவமாக மாறும். இதனை 219°C-க்குக் குளிர்வித்தால், நீலங் கலந்த வெண்மையான திண்மப் பொருளாக மாறும். து காந்த ஈர்ப்புத் தன்மை (paramagnetic) உடை யது. கொதிநிலை (ஒரு வளி மண்டல அழுத்தத் தில்) - 182,9°C; 0° Cயில் ஒரு வளி மண்டல அழுத் தத்தில், இதன் அடர்த்தி 1. 4290; ஐசோடோப்பு களைக் கண்டறிவதற்குமுன், ஆக்சிஜன் அணு எடை. 16.0000 என அறியப்பட்டு, இதன் அடிப்படையில் மற்ற தனிமங்களின் அணு எடை கணக்கிடப்பட் டுள்ளது. இது மிகவும் குறைந்த அளவு நீரில் கரை யும். காற்றை விடச் சற்றுக் கனமானது. இதன் மேலும் சிவ இயல்புகள் பக்கம் 789இல் அட்ட வணையில் கொடுக்கப்பட்டுள்ளன. வேதிப் பண்புகள். இது நன்கு வினைபுரியும் தனிமம். மந்த வளிமங்களைத் தவிர மற்ற தனிமங் களுடன் வினைபுரிந்து, நிலைத்த ஆக்சைடுகளைத் தரும். இந்த ஆக்சைடுகளைப் பெறுவதற்கு அந்த