உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஆர்க்கிமிடீஸ்‌

82 ஆர்க்கிமிடீஸ் ஆர்க்கிமிடீஸ் கணித வல்லுநரும், இயற்பியல் அறிஞருமான ஆர்க் கிமிடீஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்த சிசிலியில் சைராக்யூஸ் நகரத்தில் பைதியாஸ் என்ற பெயர் பெற்ற வானநூல் வல்லுநருக்கு மகனாகப் பிறந் தார். இவர் வாழ்ந்த காலம் கி.மு.287-லிருந்து கி.மு. 212 வரையில். இவர் கல்வி கற்றது அன்றைய அறிவுக் களஞ்சியமாக விளங்கிய எகிப்து நாட்டி னைச் சேர்ந்த அலெக்சாண்டிரியா நகரமானாலும் தம் வாழ்க்கையில் பெரும் பகுதியைச் சைராக்யூளில் தான் கழித்தார். அத்தேசத்து அரசர் இரண்டாம் ஹீரோ இவருக்கு உறவினர். ஆர்க்கிமிடீஸ் ஆர்க்கிமிடீஸ், கணிதத்தில் பல உண்மைகளைக் கண்டுபிடித்தார். ஓர் உருளைக்குள் (cylinder) ஒரு கோளத்தைப் (sphere) பொருந்தும்படி அமைத்தால் கோளத்தின் கொள்ளளவு உருளையினுடைய கொள் ளளவில் மூன்றில் இரண்டு பங்காக இருக்குமென்று கண்டறிந்தார். அதன் நினைவாகவே அவர் கல்ல றையின் மேல் இவ்வுண்மையைக் காட்டும் வடிவமே அமைந்துள்ளது. வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்துக்கும் உள்ள என்ற விகிதத்தின் மதிப்பு 10 10 3 க்கும் 3 க்கும் இடையில் இருக்கவேண்டும். 70 10 3 70 71 10 71 π 3 என்று கண்டறிந்தார் மிகப் பெரிய எண்களைக் கூட எளிமையான முறையில் எழுதுவதற்கு வழியொன்று கண்டுபிடித்தார். இயற்பியலில் (physics) ஆர்க்கிமிடீசின் கண்டு பிடிப்புக்கள் மிகப்பல. நெம்புகோலின் (Lever) தத்துவத்தைக் கண்டறிந்த அவர் பூமிக்கு வெளியே நிற்பதற்கு ஓரிடத்தையும், ஒரு நெம்பு கோலையும் எனக்குத் தந்தால் நான் பூமி யையே நகர்த்துவேன் என்று கூறியதாகச் சொல்லப் படுகிறது. இக்கூற்றின் உண்மையை அறிய விரும்பி னார் அரசர். ஆர்க்கிமிடீஸால் தயாரிக்கப்பட்ட நெம்புகோலின் ஒரு முனையில் ஒரு சிறிய விசையைச் செலுத்திப் பளு ஏற்றப்பட்ட கப்பல் ஒன்றைத் தனி மனிதராக அரசர் ஹீரோ கடலில் நகர்த்தினார். மன்னருக்காகக் கட்டப்பட்ட ஒரு கப்பலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றத் திருகு குழாய்க் கருவி ஒன்றையும் இவர் கண்டு பிடித்தார். இக்கருவி இப் போதும் எகிப்தில் வேளாண்மைக்குப் பயன்படுத் தப்பட்டு வருகிறது. ஆர்க்கிமிடீஸ் தத்துவம். குடத்தில் நீரை முகந்து கிணற்றிலிருந்து தூக்குகையில், நீருக்குள் இருக்கும போது குடம் இலேசாகவும், நீரைவிட்டு வெளியில் எடுத்த பின்பு அது கனமாகவும் இருக்கிறது. இரும்புக் குண்டை நீருக்குள் போட்டால் அமிழ்ந்து விடுகிறது. ஆனால் இரும்பினால் கட்டப்பட்ட கப்பல் நீரில் மிதக்கிறது. நீர்மத்தில் மூழ்கியுள்ள C என்ற பொருளின் மேற்பரப்பு A நீர்ம மட்டத்திலி ருந்து குறைந்த ஆழத்திலும், அதன் அடிப்பரப்பு B நீர்ம மட்டத்திலிருந்து அதிக ஆழத்திலும் இருப்ப தால் மேற்பரப்பின் மேலுள்ள கீழ்நோக்கிய அழுத் தத்தைக் காட்டிலும் கீழ்ப் பரப்பின் மேலுள்ள மேல் நோக்கிய அழுத்தம அதிகமாகும். இதன் விளைவாக அப்பொருளின் மேல் செயல்படும் மேல் நோக்கிய ஒரு விசை அப்பொருளினால் இடம் பெயர்க்கப்பட்ட எடைக்குச் சமமாகும். இதுவே ஆர்க்கிமிடீசின் நீர்மக் தத்துவமாகும். ஒரு திண்பொருள ஒரு நீர்மத்தில் மூழ்கி இருக் கும்போது அது இழந்ததாகத் தோன்றும் எடை அதனால் இடம் பெயர்க்கப்பட்ட நீர்மத்தின் எடைக் குச் சமம். முழுதும் மூழ்காமல் மிதக்கும் பொருள் களையும் உள்ளடக்கிக் கூறவேண்டுமானால் இத் தத்துவம், ஒரு திண்பொருள் ஒரு நீர்மத்தில் முழுதுமோ ஒரு பகுதியோ மூழ்கி இருக்கும்போது அதன் மீது ஒரு தொகு தள்ளுவிசை (resultant thrust) மேல்நோக்கிச் செயல்படும். இந்த தள்ளு விசை மூழ்கியுள்ள பொருளினால் இடம் பெயர்க்கப் பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம் என வரை யறுக்கப்படும். ஆர்க்கிமிடீஸ் தத்துவம் கண்டு பிடித்த நிகழ்ச்சி சுவையானது. பொற்கொல்லர் ஒருவரிடம் பொன் னைக் கொடுத்து அரசர் ஒரு பொன்முடி தயாரிக்கச் சொன்னார். தயாரித்த பொன்முடி கொடுத்த பொன்னின் எடைக்குச் சமமாக இருந்தாலும் வேறு உலோகங்கள் கலந்து தங்கத்தின் தரத்தைக் குறைத் திருப்பார் என்று மன்னருக்கு ஐயம் ஏற்பட்டது. இதை ஆராய்ந்து தன் ஐயத்திற்கு விடை காணு மாறு ஆர்க்கிமிடீஸை அரசர் பணித்தார். இதைப் பற்றி நீண்டகாலம் எண்ணியும் விடைகாண முடியா தென்று நம்பிக்கை இழக்கும் தறுவாயில், அவர்