உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கியார்னித்திஸ்‌ 83

விளிம்பு வரை நீர்நிரம்பிய தொட்டியில் குளிப்பதற் காக இறங்கும்போது நீர் வெளியில் வழிந்து சிந்து வதைப் பார்த்தார். வெளியேற்றப்பட்ட நீர் அமிழ்த் தப்பட்ட பொருளின் பருமனே உள்ளது என்பதைக் கண்டுணர்ந்தார். அந்த மகிழ்ச்சியில் குளியலறை யிலிருந்து ஆடையும் அணியாமல் 'யுரேகா, யுரேகா' (eureka, eureka) என்று கத்திக் கொண்டே தெரு வில் ஓடினார் என்ற செய்தியொன்று வழங்குகிறது. கிரேக்க மொழியில் யுரேகா என்றால் 'நான் கண்டு கொண்டேன்' என்று பொருள். ஆர்க்கிமிடீஸ் மகு டத்தின் அளவு எடையுள்ள தங்கத்தைத் தனியே நீரில் அமிழ்த்தி, அது வெளியேற்றிய நீரின் அளவைக் கண்டார். ஆனால் அதைவிட அதிக நீரை மகுடம் வெளியேற்றியதால் அதில் வெள்ளியைக் கலந்து பொன்னைத் திருடியிருக்கிறார் பொற்கொல்லர் என்று ஆர்க்கிமிடீஸ் தெரிவித்தார். கி.மு.214 இல் உரோமானியப் படைகள் மார் சிலஸ் தலைமையில் பல்வேறுதிசையில் சைராக்யூசை முற்றுகையிட்டன. ஆர்க்கிமிடீஸ் பல்வேறு போர்க் கருவிகளையும், உருவாக்கித் தந்து மன்னருக்கு உதவினார். இதனால் இரண்டு ஆண்டுக்காலம் எதிரிகளைச் சமாளிக்க முடிந்தது. குழி ஆடிகளைக் கொண்டு சூரிய வெப்பத்தை ஒருமுகப்படுத்தி அரு கில் வரும் உரோமானியக் கப்பல்களைத் தீக்கிரை யாக்கினார் ஆர்க்கிமிடீஸ். ஆனால் கி.மு.212 இல் உரோமானியப் படைகள் வெற்றி கொண்டு சைராக் யூசைச் சூறையாடினார்கள். அறிஞர் ஆர்க்கிமிடீஸை ஒன்றும் செய்யக் கூடாதென்று எதிரித்தலைவன் அறிவித்திருந்தான். ஆனாலும் விவரமறியாத உரோ மானிய வீரனொருவன் கணிதம் தொடர்பாகத்தான் வரைந்து கொண்டிருந்த மணற் சித்திரங்களைக் கலைக்கக் கூடாதென்று ஆர்க்கிமிடீஸ் சொன்னதைக் கேட்டு ஆத்திரமடைந்து அவரை வெட்டி வீழ்த்தி விட்டான். விவரமறிந்து மார்சிலாஸ் வருத்தமுற்று ஆர்க்கிமிடீஸிற்குத் தகுந்த மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் செய்வித்து, அவர் விரும்பிய உருளைக்குள் கோளம்' என்னும் சின்னத்தையும் சமாதியின் மேல் கட்டுவித்தான். நூலோதி எஸ். ருக்குமணி White, H.E., Descriptive College Physics, Third Edition, University of California, Berkeley, 1971. 2.The Book of Popular Science, Volume 1 and 2, The Grolia Society Inc., New york - Toronto, 1956. ஆர்க்கிமிடீஸ் சுருளி = am. 0 என்ற சுருளி ஆர்க்கிமிடீஸ். சுருளியானது TM களின் குடும்பத்தில் ஒரு சிறப்பு வளைவு (curve) அ. க. 3-6அ ஆர்க்கியார்னித்திஸ் 83 ஆகும். இதன் சமன்பாடு r=al ஆகும். இதனைக் கி.மு. 225 ஆம் ஆண்டு கிரேக்க அறிஞர் ஆர்க் கிமிடீஸ் என்பவர் கண்டறிந்தார். துருவத்தை மைய மாக வைத்து A படம் ஆர்க்கிமிடீஸ் சுருளி மாறாக்கோணத் திசைவேகத்தில் இயங்கும் ஆரத்திசையன் (radius vector) வழியாகச் சீரான திசைவேகத்தில் (uniform velocity) இயங்கும் ஒரு புள்ளியின் இயங்குவழி (locus) ஆர்க்கிமிடீஸ் சுருளி (archimedes spiral) ஆகும். ஆரத்திசையன் I - க்கும் X - அச்சுக்கும் இடையே உள்ள கோணம் 8 சுழி ஆகும்போது வளைவு துருவத்தின் வழியே செல்லும். கோணம் அதிகமாக அதிகமாக இன் மதிப்பு அதிகமாகும். கோணம் கந்தழியை (infinity) நெருங்கும்போது I இன் மதிப்பு கந்தழியை நெருங்கும். காண்க, அதிவளைச் சுருளி. ஆர்க்கியாப்ட் டெரிக்ஸ் காண்க. ஆர்க்கியார்னித்திஸ் ஆர்க்கியார்னித்திஸ் பெ.வ. பறவைகள் வகுப்பில் ஆர்க்கியார்னித்திஸ் (archae- ornithes) என்பது ஓர் உள்வகுப்பு. இன்றைக்கு ஏறக் குறைய 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜுராசிக் காலத்தில் (Jurassic period) வாழ்ந்து மறைந்த பண்டைக்காலப் பறவையின் பதிவு (fossil ) இந்த உள்வகுப்பின் ஆர்க்கியாப்ட்டெரிஜிபார்மிஸ் (archaeopterygiformes) என்ற வரிசையில் சேர்க்கப் பட்டுள்ளது. இப்பதிவு, தொல்சிறகி என்னும் பொருள்பட ஆர்க்கியாப்ட்டெரிக்ஸ் (Arehacopteryx) என்று பெயரிடப்பட்டது. ஆர்க்கியாப்ட்டெரிக்ஸ் லித்தோகிராஃபிகா (Archae lithographical) என்பது இப்பிரிவைச் சேர்ந்த முக்கிய பறவை. இதன் ஒரே ஓர் இறகின் opteryx