உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஆர்க்டிக்‌ வட்டம்‌

90 ஆர்க்டிக் வட்டம் 800-3,000 மீ) நீரின் வெப்பநிலை படிப்படியாக -0.3° C. க்குக் குறைகிறது. இதை இடை கீழ்நிலை நீர் அடுக்கு (intermediate lower water) என்பர். நூலோதி அ.பசுபதி 1. John, G. Weihaupt, Exploration of the Oceans, Macmillian Publishing Co Inc., New York, 1979. 2. Thurman, H.V., Introductory Oceanography. Charles E. Merri! Publishing Company, Colum- bia, 1975. ஆர்க்டிக் வட்டம் நிலநடுவரைக்கு (equator) வடக்கே சற்றேறக்குறைய 664 இல், அதாவது வடதுருவத்திலிருந்து (north pole) 231 இல், பாயும் அகலாங்கு இணைவரை (parellel of latitude) ஆர்க்டிக் வட்டம்(arctic circle) என்று அழைக்கப்படுகிறது. ஆர்க்டிக் என்ற சொல் வடபுல வானில் ஒளிரும் துருவ விண்மீன் குழுவின் (northern constellation) கிரேக்கப் பெயரினின்று மருவியது. நிலநடுவரையிலிருந்து ஆர்க்டிக் வட் டம் வரையிலான கோணத் தொலைவும் (engular distance) நிலக்கோள அச்சு சூரியனின் பாதையோடு (plane of the ecliptic) ஏற்படுத்தும் சாய்வும் ஒன் நாகவே அமைகின்றன. அதன் காரணமாக நிலக் கோள வட அரைப்பகுதி (northern hemisphere) கோடைக்கதிர் திருப்பக் (summer solstice) காலத்தில் (சூன் 21) வட துருவம் சூரியனை நோக்கி 231 சாய்ந்திருப்பதால் சூரியனின் கதிர்கள் வடதுருவத் திற்கு அப்பாலும் பாய்ந்து ஆர்க்டிக் வட்டத்தின் 231 வரை பரவுகின்றன. இதனால் அந்த ணைவரைப் பகுதியில் 24 மணி நேரப்பகல் பொழுது ஏற்படுகிறது. அதே நாள் நண்பகலில் சூரியனின் கதிர்கள் நிலநடுவரையிலிருந்து 66° தெற்கே அமைந்துள்ள அண்டார்க்டிக் வட்டத்தில் (Antarctic circle) circle) தொடுவானத்தைச் (horizon) சென்றடைகின்றன. ஆர்க்டிக் வட்டத்தில் நண்பகல் சூரியன் மிகக் கூடுதலான உயரத்தை சூன் 21 அன்று, தொடுவானத்திற்கு மேலே 47° யில் அது இருக்கும் போதுதான் எட்டுகிறது. ஆர்க்டிக் வட் டத்தில் நெடும்பகற்காலத்தில் சூரியன் தொடு வானத்திற்கு மேலே தொடர்ச்சியாக 24 மணி நேரம் மட்டுமே நிலைத்திருக்கிறது. எனினும் அந்தி மெல் லொளியைக் (twilight) கருத்தில் கொள்ள அங்கே தொடர்ந்தாற்போல் ஏறக்குறைய 5 மாதங்களுக்குப் பகல் பொழுது காணப்படுகிறது (சூரியன் தொடு வானத்திற்குக் கீழே 18° அளவிற்குச் செல்லும் வரை அந்தி மெல்லொளி நீடிப்பதாகக் கொள்ளலாம். காண்க, மெல்லொளி அ.பசுபதி ஆர்க்ரைட், சர் ரிச்சர்டு துணித் தொழிலதிபரும் புதுமைப் புனைவாளருமான சர் ரிச்சர்டு ஆர்க்ரைட், என்பவர் 1732 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 23ஆம் நாளன்று இங்கிலாந்து நாட்டில் லங்காஷயரில் (Lan hashire)உள்ள பிரெஸ்ட் டன் நகரில் பிறந்தார். 1792 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டுத் திங்கள் 3ஆம் நாளன்று டெர்பிசயரில் கிராம் ஃபோர்டு (Cramford) எனுமிடத்தில் இறந் தார். இவர் திறன் கொண்டு ஒட்டப்படும் எந்திரங் களாலான தொழிலக அமைப்பை (factory system) உருவாக்கிய முனைவர் (pioneer) ஆவார். சர் ரிச்சர்டு ஆர்க்ரைட் உள்ள இளமையில் ஆர்க்ரைட் சவுரி முடித் தயாரிப் பாளராகப் (wigmaker) பணி புரிந்தார். இவர் பிரிட் டன் பெருநாட்டின் (Great Britain) பெரும் பகுதி யைச் சுற்றி வந்தார். தம் சொந்த முயற்சியிலேயே சுல்வி கற்றார். 1764இல் இவர் நூற்பு எந்திரம் செய்வதில் (spinning machinery) ஆர்வம் உற்றார். 1779 இல் பதிவுரிமம் (patent) பெறப்பட்ட இவரது முதல் நூற்பு எந்திரம் நீர்த்திறன் (water power) கொண்டு இயங்கியதால் நீர்ச்சட்டம் (water frame) என வழங்கப் பட்டது. இந்த எந்திரம் உருவாக்கிய நூல்,பாவுக்கும் (warp) ஏற்றதாக அமைந்தது. பல பங்கு தாரர்களுடன் இவர் நாட்டிங்காமிலும் (Nottingham) கிராம்ஃபோர்டிலும் பல தொழில் கங்களைத் தொடங்கினார். சில ஆண்டுகளில் பஞ்சடித்து இழை தயாரிப்ப திலிருந்து (carding) நூல் நூற்பது (spinning) வரை உள்ள நூல் தயாரிப்பின் பல கட்ட நிகழ்வுகளை (processes) நிகழ்த்தும் பல தொழிலகங்களை நிறுவ லானார். 1772இல் முழுப்பருத்திச் சதுர நெசவுத் துணியைத் (all cotton calico) தயாரித்தார். இதற்கு முன்பு லினன் (linen) பாவு இழையாகப் பயன்பட் டது. இதனால் வட இங்கிலாந்தில் பருத்தித் துணித் தொழில் பெருகி வளரலாயிற்று.