உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஆர்த்தாப்ட்டிரா

116 ஆர்த்தாப்ட்டிரா தாவுவதற்கும் தோண்டுவதற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளன. முதல் இரண்டு இணைக்கால்கள் நடப்பதற்கும், ஓடுவதற்கும் ஏற்றவாறும் நன்கு வளர்ச்சி அடைந்த மூன்றாவது இணைக்கால்கள் தத்திச் செல்லுதற்கேற்றவாறும் அமைந்துள்ளன, வயிற்றுப்பகுதி பத்துக் கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு கண்டத்திலும் ஓர் காற்றுத்துளைகள் இணைக் (spiracles) உடல் மருங்கில் அமைந்துள்ளன. வயிற்றுப் பகுதியின் பின்முனையில் இறுதிக் கண்டத்தில், ஆண்பூச்சி களில் பற்றும் உறுப்புக்களும் (claspers), பெண் பூச்சிகளில் முட்டையிடும் உறுப்பும் (ovipositor) உள் ளன. இப்பூச்சிகளின் செரிமான உறுப்புகள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. இவை பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. முட் டையிலிருந்து வெளிவரும் இளரிகள் தாயைப் போன்று இருக்கும்; ஆனால் அவற்றிற்கு இறக்கை கள் இல்லை. சில சிறப்பினங்களில் பெண் பூச்சிகள் மட்டுமே இருப்பதால் அவை கன்னி இனப்பெருக்க முறையில் (parthenogenesis) இனப்பெருக்கம் செய் கின்றன. இவை ஐந்து முதல் எட்டு முறை தோலு ரித்தபின் முழுப்பூச்சியாக மாறுகின்றன. இவ்வரி சையைச் சேர்ந்த பூச்சிகள் பலவகையான ஒலிகளை எழுப்புகின்றன. கரப்பான் பூச்சிகளின் புதைபடி வங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. வரிசை ஆர்த்தாப்ட்டிரா, என்சிஃபெரா (ensifera) சீலிஃபெரா (caelifera) என இரு துணைவரிசை களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. துணைவரிசை என்சிஃபெரா. இத் துணைவரிசை யில் அடங்கும் பூச்சிகளிலுள்ள உணர்கொம்புகள் நீளமானவை; பல கணுக்களாலானவை. செவிப் பறை உறுப்புகள் (tympanai organs) கால்களின் முன் டிபியப் (foretibiae) பகுதியில் அமைந்துள்ளன. இத் துணைவரிசையில் டெட்டிகோனியாய்டியா (tettigonioidea), கிரில்லாய்டியா (gryiloidea) ஆகிய இரு பெருங்குடும்பங்கள் (superfamilies) உள்ளன. பெருங்குடும்பம் டெட்டிகோனியாய்டியா. இப் பெருங்குடும்பத்தில் நீண்ட உணர்கொம்புகளுடைய வெட்டுக்கிளிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற் றின் கால்களிலுள்ள டார்சஸில் 4 கணுக்கள் உள்ளன. டெட்டிகோனியாய்டியா பெருங்குடும்பத் தில் 5 குடும்பங்கள் உள்ளன. குடும்பம் டெட்டிகோனிடே (tettigoniidae). இக் குடும்பத்தைச் சேர்ந்த பூச்சிகளைப் பச்சை வெட்டுக் கிளிகள் (green grasshoppers) எளவும், கேட்டிடுகள் (katydids) எனவும் அழைப்பர். இதன் உணர்கொம் புகள் நீண்டு சாட்டை போன்று காணப்படும். இது வரை இக்குடும்பத்தைச் சேர்ந்த 7,000க்கும் மேற் பட்ட பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, படம் 1. நீண்ட உணர்கொம்பு வெட்டுக்கிளி இவை நீளமான உடலுடையவை. உணர்கொம்புகள் உடலை விட நீளமாக இருக்கும், பின்னங்கால்கள் நன்கு வளர்ச்சிபெற்றுத் தத்திக் குதிப்ப்தற்கு ஏற்ற வாறு அமைந்துள்ளன. இதன் காரணமாக இப்பூச்சி களால் சிறிது தூரம் மட்டுமே பறக்க முடியும். இப் பூச்சிகள் பகற்பொழுதில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. பெரும்பாலும் தாவரங்களை உண வாக உட்கொள்கின்றன. இவை மாலை வேளையி லும், முன்னிரவிலும், தமது இட முன்னிறக்கையால் வல முன்னிறக்கையில் உள்ள பெக் (peg) எனப்படும் தொடர்ச்சியாக அமைந்த சிறுமுட்களின் மீது வேக மாக உரசி ஒலி எழுப்புகின்றன. ஆண்பூச்சி எழுப் பும் ஒலி பெண்பூச்சி எழுப்பும் ஒலியை விட அதிக மாக இருக்கும். இதன் செவிப்பறை உறுப்பு படம் 2. தத்துப்பாச்சை