உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்தாப்ட்டிரா 115

அழற்சியும் வகை சேராப் புள்ளியுடைய வெள்ளை யணுக்களின் (neutiophils) கும்பலான சேர்க்கையும் காணப்படும். நாளாக ஆக அத்தகைய புள்ளி வெள்ளையணுக்களுக்குப் பதிலாக ஒற்றைப் பெரிய வெள்ளை அணுக்களும், அமிலப் புள்ளி அணுக்களும் சேர்ந்து படிப்படியாக, அழற்சி நீங்கி, எதிர்ப் பொருள் ஊக்கி (ahtigen), எதிர்ப்பொருள் இவற்றின் கூட்டுப் பொருள்களும் அப்புறப்படுத்தப்படும். மாற்றாக, எதிர்ப்பொருளைத் தோலுக்குக் கீழ் செலுத்தி, சில நாள்களில் திசுக்களில் அது நன்கு படிந்ததும் எதிர்ப்பொருள் ஊக்கியைச் (antigin) செலுத்தினால் முன்குறிப்பிட்ட ஆர்த்தஸ் நிகழ்ச்சி ஏற்படும். எதிர்ப்பொருள் ஊக்கி, எதிர்ப்பொருள் இவற்றின் கூட்டால் ஏற்படும் சிக்கல்களைக் கூம்பு என்பவர் நான்கு வகையாகப் பிரித்தார். அவற்றில் ஆர்த்தஸ் நிகழ்ச்சி கூம்பின் மூன்றாவது வகையைச் சேர்ந்தது. . மனிதனின் சில நோய்களுக்கு ஆர்த்தஸ் நிகழ்ச் சியைக் காரணமாகச் சொல்லலாம். சிறப்பு உதா ரணம், விவசாயி நுரையீரல் நோய் (farmers lung) அழுகிய வைக்கோலில் உள்ள காளான், சிறுபூச்சி நுண்ணுயிர் முதலியவற்றை விவசாயி தன் தொழி லின்போது சுவாசிக்கிறார். அவை அயல் புரதங் களானமையால் எதிர்ப்பொருள் ஊக்கியாகச் செயல் பட்டு எதிர்ப் பொருள்களை உடலில் உண்டாக்கு கின்றன. விவசாயி மறுபடியும் அழுகிய அதே காளான் துகள்களைச் துகள்களைச் சுவாசிக்கும்போது, எதிர்ப் பொருள் ஊக்கி எதிர்ப்பொருள் கூட்டு நுரையீரலில் ஏற்பட்டு, ஆர்த்தஸ் நிகழ்ச்சியில் உண்டாகும் திசு அழற்சி, இரத்தக்குழாய்களில் வீக்கம் வெள்ளை யணுக்களின் கும்பல் சேர்க்கை போன்ற நோய் இயல் குறிகளை வெளிக்காட்டும். அவற்றால் அவ் விவசாயி விரைவில் தோன்றும் மூச்சுத்திணறல் குளிர் காய்ச்சல், இருமல் இவற்றால் அவதிப்படு வார். சுமார் 12 முதல் 18 மணி நேரம் இக்குறிகள் இருந்து மெல்லக் குறையும். எனினும், நுரையீரலில் சில திசு மாற்றங்கள் சில நாள்கள் வரை மறை யாமல் இருக்கும். இதே மாதிரியாக வேறு பல தொழில் சம்பந்தப் பட்ட நோய்களும் இவற்றிற்கான காரணப் பொருள் களும் பின்வருமாறு. அவை கரும்புச்சக்கை நோய் (அழுகின கரும்புச் சக்கையில் உள்ள காளான்), பறவை வளர்ப்பவரின் நுரையீரல் நோய் (பறவை களின் எச்சம் மற்றும் இரத்தம்), பாலடைக்கட்டி செய்பவர்களின் நோய் (காளான் உள்ள பாலடைக் சட்டி) என்பன. இம்மாதிரி வேறு பல நோய்களும் உள்ளன. நூலோதி வை.சிவராஜன் Stites, D.P., Stobo, J. D., Fudenberg, H., Wells, J.V., அ.க. 3-82 ஆர்த்தாப்ட்டிரா 115 Basic and Clinical Immunology, Fourth Eedition, Darge Medical Publications, California, 1982. ஆர்த்தாப்ட்டிரா பல உலகில் உள்ள அறுகால் பூச்சி வகைகளைப் வரிசைகளாகப் பிரித்துள்ளனர். அவற்றுள் ஆர்த் தாப்ட்டிராவும் (orthoptera) ஒன்றாகும். இலை நேரான 'இறக்கைகளையுடைய பூச்சிகள். இந்த வரிசையில் கிட்டதட்ட 12,000 இனங்களைச் சேர்ந்த வெட்டுக்கிளிகள், கரும்பாச்சைகள், தத்துப்பாச்சை கள், பிள்ளைப்பூச்சிகள் போன்றவை துருவப் பிர தேசங்களைத் தவிர்த்து உலகின் அனைத்துப் பகுதி களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இப்பிரி லைச் சேர்ந்த லோக்கஸ்ட்டு (locust) எனப்படும் வெட்டுக்கிளிகளின் கூட்டங்கள் பயிர்களை அதிக அளவில் தாக்கிச் சேதப்படுத்திப் பஞ்சம் ஏற்படக் காரணமாகின்றன. பிரிவுக இப்பூச்சிகள் 2 மில்லி மீட்டர் முதல் 10 செ. மீ. வரை நீளமுடையவை. பழுப்பு, மஞ்சள், பச்சை, சாம்பல் மற்றும் பல அழகிய வண்ணங்களில் தோற்றமளிக்கின்றன. ஆனால் இரவு நேரத்தில் காணப்படும் கரப்பான் பூச்சிகள் (cockroaches) கருப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். இவற்றின் உடலைத் தலை (head), மார்பு (thorax), வயிற்றுப்பகுதி (abdomen) என மூன்று ளாகப் பிரிக்கலாம். அழுத்தமான, கைட்டினப் பட்ட தோல் உடலுக்குப் பாதுகாப்பாக உள்ளது. தலை பெரியது. தலைப்பகுதியில் உறுதியான வெட் டும் தாடைகள் (mandibles) மெல்லிய, நீண்ட அல்லது குட்டையான உணர்கொம்புகள் (antennae) ஆகியவை உள்ளன. ஓர் இணை பெரிய கூட்டுக் கண்களும் (compound eyes), மூன்று தனிக் கண் களும் உள்ளன. இதன் மார்புப் பகுதி முன்மார்புப் பகுதி (prothorax), இடைமார்புப் பகுதி (meso- thorax), கடைமார்புப் பகுதி (metathorax) என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன் மார்புப் பகுதியில் மேல்தகடு நன்றாக வளர்ச்சி யடைந்த ஒரு கேடயம் போன்று அடுத்துள்ள இடை மார்புப் பகுதியை ஓரளவு மறைக்கிறது. இப்பூச்சி கள் மெல்லிய பல நரம்புகளுடன் கூடின ஓரிணைப் பின்னிறக்கைகளும், சற்று அழுத்தமான ஓரிணை முன்னிறக்கைகளும், மூன்று இணையான கால்களும் பெற்றுள்ளன. தடித்த முன்னிறக்கைகள் பறப்பதற் குப் பயன்படுவதில்லை என்றா லும் பின்னிறக்கை களுக்குப் பாதுகாப்பாக அமைந்துள்ளன. சில பொதுவினங்களில் இறக்கைகள் காணப்படுவதில்லை. இந்த வரிசைப் பூச்சிகள் பெரும்பாலும் தரையில் வாழ்வனவாக இருப்பதால் கால்கள் ஓடுவதற்கு