உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்தோகிளேசு 119

2. Nayar, K.K., Ananthakrishnan. T.N., and David B.V., General and Applied Entomology, Tata McGraw-Hill Publishing Company Ltd., New Delhi, 1982. 3. Essig, . Conege Entomology, satisa 223K Enterprise, Agra, 1982. 4. Horn.D.J., Biology of Insects, W.B. Saunders Company, Phildaelphia, 1976. ஆர்த்தோகிளேசு ஒற்றைச் சரிவுத் தொகுதியில் (monoclinic system ) படிகமாகும் ஃபெல்ஸ்பார் வகையில் அடங்கிய கனிமமே இது. இது பொட்டாசியம் அலுமினியம் சிலிக்கேட்டு என்னும் வேதியியல் உட்கூறுடையது (K,O AI,0, 6 SI0,). இது கார்ல்ஸ்பாடு {carlspad) விதிமுறைப்படி ஒன்றையொன்று தொட்டுக் கொண் டிருப்பது போன்ற (படம் 1) அல்லது ஒழுங்கற்ற (படம் 2)ஊடுருவும் தன்மையைப் பெற்ற இரட் டுறல் (twinning) படிகமாகவும், பாவினோ (baveno) விதிமுறைப்படி உருவாகும் சதுரப்படிகங்களாகவும் (படம் 3) மனிபாக் (maneback) இரட்டிப்பு விதி முறைப்படி ஒன்றையொன்று தொட்டுக் கொண் டிருக்கும் படியான செம்பாளப் படிகங்களா கவும் (படம் 4) பொதுவாகக் காணப்படுகின்றது. இதனுடைய மூன்று வகையான கனிமப்பிளவுகள் (cleavage), (001). (001). (010), (110) ஆகிய மூன்று கோணங்களில் காணப்படுகின்றன. இதன் முழுஉருப் படிகங்களைக் காணும்பொழுது பட்டசு (prismatic) வடிவில் (படம் 5,6) நிலை அச்சிற்கு இணையாசக் காணப்படும். சிலசமயங்களில் நெட்டச்சிற்கு (a) இணையாக நீண்ட படிகமாகவும் (படம் 7) குட்டச் சிற்கு இணையாக வளர்ந்து செம்பாளப் (labular படிகமாகவும் (படம் 8) நிலை அச்சிற்கு இணையாக. வளர்ந்த பட்டகப் (prismatic) படிகமாகவும் (படம் 9) காணப்படும். பெரும்பாலும் இயற்கையில் திண்ணிய நிலைப் (massive) படிகக் கனிமங்களாகவும் சிற்சில சமயங் களில் தாள்படல (lamellar) அமைப்புடைய படிகங் களாகவும் காணப்படலாம். இதனுடைய முறி வுத் தன்மை (fracture) சங்கு முறிவு (conchoidal) போன்ற தன்மையிலிருந்து சீரிலா (uneven) முறிவுத் தன்மை வரை உடையதாகக் காணப்படலாம். இத னுடைய கடினத்தன்மை 6 ஆகும். இதன் அடர்த்தி எண் 2.56இலிருந்து 2.58 வரையில் காணப்படலாம். இதுபளிங்கு மிளிரிவுத் (vitreous Justure ) தன்மையைப் பெற்றுள்ளது. இயற்கையாகக் காணப்படும்பொழுது நிறமின்றியும் வெள்ளை, வெளிர் மஞ்சள், சாம்பல், ஊன்சிலப்பு (flesh red) போன்ற பல வண்ணங் ஆர்த்தோகிளேசு 119 களிலும் காணப்படும். இதன் உராய்வுத் தூள் (streak) நிறமற்றதாகும். இந்தப் படிகங்களில் அமையும் மூன்று அச்சுக்களின் நீள விகிதத்தை நெட்டை அச்சு (a): குற்றச்சு (b); நிலை அச்சு {c} = 0.6585:1:0.5554 எனவும், இதன் நெட்டை அச் சிற்கும் நிலை அச்சிற்கும் இடைப்பட்ட கோணத்தை 63°57' எனவும் கணித்துள்ளார்கள். இந்தப் படிகங்களை நுண்நோக்கியில் (micro- scope) காணும்போது ஒளி விலகலின் தன்மை மூன்று அச்சுகளுக்கும் இணையாக மாறுபட்டுக் காணப் படும். இதன் ஒளிவிலகல் எண் (refractive index விரைவொளி அச்சுக்கு 1.519 எனவும், இடைஒளி அச்சிற்கு 1.523 எனவும், மெதுலொளி அச்சிற்கு எனவும் கண்டுபிடித்துள்ளார்கள். இதன் விரைவொளி அச்சுக்கும், மெதுவொளி அச்சிற்கும் இடையில் உள்ள ஒளியியல் அச்சுக்கோணம் 1.525 (2v, optical axial angle) 70 ஆகும். இது நேராக அணையும் (straight extinction) தன்மையுடையது இதன் ஒளிபரவல் (dispersion) கிடைமட்ட நிலையா யும் (horizontal) சிவப்பொளி அச்சுக்களின் கோணம் (r) நீல அச்சுகளின் கோணத்தை (v) விட அதிக மானதாயும் இருக்கும். இது ஒளியியலாக எதிர் மறைக் (negative) கனிமம். இதன் ஒளி பிரிதிறன் (resolution) இதன் ஒளியியல் அச்சுத் தளத்தைப் (axial plane) பொறுத்தது. நுண்நோக்கியின் மூலம் இந்தப் படிகங்களை அவற்றின் குறைந்த ஒளி வில கல் தன்மை, மெல்லிய மங்கலான படிகவிளிம்பு (low relief) ஒளிக்குறுக்கீட்டால் உண்டாகும் தெளிவற்ற மங்கலான நிறங்கள் ஈர் அச்சு முனைப் புத்தன்மை, ஒன்றையொன்று செங்குத்தாகச் சந்திக் கும் படியான இருவரைக் கனிமப் பிளவுத்தன்மை வானிலைச் சிதைவினால் (weathering) உருவாகிய நுண்ணிய நுண்களிமண் துகள் உள்ளடக்கங்கள் (inclusions) ஆகியவற்றால் ஏனைய கனிமங்களி லிருந்து இதை வேறுபடுத்திக் கண்டுபிடிக்கலாம். ஆர்க்தோகிளேசு கீழ்க்காணும் நான்கு வகைகளாகக் காணப்படுகிறது. அடுலேரியா (adulatia). இது துாய பொட்டாசி யம் அலுமினியம் சிலிக்கேட்டாகும். இயற்கையில் கிடைக்கும்பொழுது இது படிகமாகப் பட்டக வடிலிலே (படம் 9) காணப்படும். இதன் படிசு வமைப்பில் பாவினோ இரட்டிப்பு முறைப்படியான இரட்டிப்புப் படிசுங்கள் மிகுதியாகக் காணப்படும். இதன் அடர்த்தி எண் 2.565. இது ஒளிபுகும்படி யான அடர்த்தி கொண்டது. முத்துப்போன்ற பால் மிளிர்வுத் (cpaiascente): 'தன்மையையோ, நிற அணித் தன்மையையோ, உலோக நிற உள்மிளிர்வுத் தன்மையையோ (schiller) பெற்ற நிலாப்படிகக்கல் (moonstone) இயற்கையில் காணப்படுகிறது. இது குறைந்த வெப்ப நிலையில் உருவான் ஆர்த்தோ கிளேசு படிகமாகும்.