124 ஆர்த்தோபைராக்சின்
124 ஆர்த்தோபைராக்சின் டச்சிற்கும் (b) நிலை அச்சிற்கும் (c) உள்ள நீளங் களின் விகிதத்தை 0.9702:1:0.5710 என்று குறிப் பிடலாம். இதன் வேதியியல் உட்கூறு Mg SiO, ஆகும். இக்கனிமப் படிகங்களில் இரட்டுறல் தன்மை மிகவும் அரிதாகவே காணப்படும். அப்படிக் காணப்பட்டால் அவ்வித இரட்டுறல் பண்பின் இரட்டுறல் தளம் (twinning plane) அதன் நெட்டச்சிற்கு இணையாக உருவாகும் பக்கமாகிய குவிமாடத்திற்கு (dome 101) ணையாக இருக்கும். அவை இரட்டுறல் படிகங் களாக ஒன்றை ஒன்று ஊடுருவித் தோன்றும்பொழுது விண்மீன் வடிவைப் பெறுகின்றன. இக்கனிமங்கள் இயற்கையில் உருவான நல்ல கனிமப் படிகங்களாகக் கிடைப்பது அரிது. இவை பெரும்பாலும் திண்ணிய நிலையிலும் நார் போன்றும் தாள்படலம் போன்றும் (lamellar) காணப்படுகின்றன. இவற்றின் கனிமப் பிளவுகள் பட்டகப் பக்கத்திற்கு (110) இணையாகவே காணப் படும். இக்கனிமங்களில் கனிமப் பிரிவுகள் (partings) குறு இணைவடிவப் (brachy pina coid) பக்கத்திற்கு (010) இணையாகவும் செவ்விணை வடிவப் பக்கத் திறகு (100) இணையாகவும் காணப்படுகின்றன. இவற்றின் கனிம முறிவு (fracture) ஒழுங்கற்றதாகவே இருக்கும். இவை எளிதில் நொறுங்கும் தன்மையன; இவற்றின் கடினத் தன்மை 5.5 ஆகும். இவற்றின் அடர்த்தி எண் 3.1 இலிருந்து 3.3. வரை .லாம். இவற்றின் மிளிர்வு பளிங்கு மிளிர்வாகும். சில சமயங்களில் கனிமப் பிளவுகள் முத்துப் போன்ற மிளிர்வுடையனவாகக் காணப்படும். இக்கனிமங்கள் சாம்பல், மஞ்சள், ஆலிவ் பச்சை, பழுப்பு ஆகிய நிறங்களில் உருவாகின்றன. இவற்றின் உராய்வுத் சமயங்களில் தூள் மாறுபட நிறமற்றனவாகவும் சிற்சில சாம்பல் நிறத்தை ஒத்தனவாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் ஒளிக்கசிவுடைய (translucent) படி கங்களாகக் காணப்படும். இவற்றின் பல திசை அதிர்வு நிறமாற்றம் (pleochroism) வலுவிழந்து இருக் கும். இவை ஒளியியலாக நேர்முறைக் கனிமங்கள் ஆகும். ஒளியியல் அச்சுத்தளம் (optic axial plane) குறு இணை வடிவப் பக்கத்திற்கு (010) இணையாக இருக்கும். இவற்றின் ஒளியியல் அச்சுத் தளத்தில் உள்ள விரைவு மெது ஒளி அச்சுகளுக்கு இடையில் உள்ள அச்சுக் கோணத்தின் அளவு பெரிதாகவே காணப்படும். இக்கனிமங்களில் உள்ள ஒலி அச்சு களின் ஒளி விலகல் எண் விரைவொளி அச்சிற்கு (u) 1.650 என்றும் இடைநிலையொளி அச்சிற்கு (B) 1.653 என்றும், மெதுவொளி அச்சிற்கு (y) 1.658 என்றும் கணித்துள்ளார்கள். இக்கனிமங்களில் வேதி யியல் உட்கூறில் இரும்பே இல்லாத சாம்பல் நிறக் கனிம வகையான, மகனீசியம் என்ஸ்ட்டடைட்டை யும், எரி விண்மீன் பாறைகளில் காணப்படும் கிளாண் டைட்டு (chlandite) என்னும் ரோசான் நிறக்கனிம வகையையும், ஊசி போன்ற படிக அமைப்பைப் உ பெற்ற விக்டொரைட்டு) (victorite) என்னும் கனிம வகையையும் குறிப்பிடலாம். நுண்நோக்கி யின் உதவியால் இக்கனிமங்களின் மெல்லிய கனிமச் சீவல்களைக் (thinsections) காணும்போது பெரும்பா லும் இவை நிறமற்றோ மஞ்சளாகவோ பச்சை யாகவோ காணப்படும். இவற்றுக்கு அருகில் உள்ள ஏனைய கனிமங்களின் படிக விளிம்புகளைவிட இவற் றின் படிகவிளிம்பு தெளிவாகவும், அடர்த்தியாகவும் காணப்படும். கனிமப் பிளவுகளுக்கு இணையான நுண்நோக்கியின் அச்சுகளைக் கொணரும்பொழுது உண்டாகும் ஒளிமறைவு (extinction) இணை நிலை யாக (parallel extinction) இருக்கும். இதன் கனிமப் பிளவுகளின் இடைவெளிகளில் ஏராளமான இரும் பாலான நுண்துளைகள் காணப்படும். இக்கனிமங்கள் பைரோட்டினைட்டு (pyrotenite), பெரிடோட்டைட்டு (peridotite) காப்ரோ (gabbro) மற்றும் நோரைட்டு (norite) ஆகிய ஆகிய அனற் பாறைகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. சில சமயங்களில் இரு உருமாற் றப் பாறைகளிலும் காணப்படும். காண்க. என்ஸ்ட் டடைட்டு; பிரான்சைட்டு. பிரான்சைட்டு. இதன் வேதியியல் உட்கூறில் என்ஸ்ட்டடைட்டில் இருப்பதைவிட அதிகமான இரும்பு இருக்கும். இவற்றின் மிளிர்வு முத்து அல்லது மணி வெண்கலம் உலோகக் கலவை போன்றது. இவை அனல் தாங்கும் (refractory) பண்பினைக் கொண்டவை. இவை என்ஸ்ட்டடைட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேதியியல் கூற்றில் மாற்றப் பட்டுச் சர்ப்பன்டைன் (serpentine) என்னும் கனி மத்தையொத்த வேதியியல் உட்கூற்றை அடையும் பொழுது இவற்றைப் பாஸ்ட்டைட்டு (bastite) அல்லது உலோக நிற மிளிர்வுக் கல் (schiller spar) என்றும் அழைக்கிறார்கள். இவற்றின் கடினத் தன்மை 3.5 இலிருந்து 4 வரை மாறும். அடர்த்தி எண் 2.5 இலிருந்து 2.7 வரை மாறுபடும். இவை பல்வகைப் பச்சை கலந்த நிறப் படிகங்களை உடையன. இவற்றின் பல திசை அதிர் நிறமாற்றம் தெளிவாகப் புலப்படா. இது ஒளியியலாக எதிர் மறைக் கனிமம். இவற்றின் ஒளிவிரவல், சரிவுத் தன்மையுடையதாகும். சிவப்பொளி, அச்சின் கோணம், நீல ஒளி அச்சுக்கோணத்தைவிடப் பெரிதாக இருக்கும் (Y>v). பாஸ்ட்டைட்டு முதன் முதலாக ஜெர்மனியில் உள்ள பாஸ்ட்டே (baste) என்னும் நகர்ப்புறத்தில் காணப்பட்டதால் இப் பெயர் இதற்கு ஏற்பட்டது. ஹைப்பர்ஸ்த்தீன். இது மிகவும் வன்மையான கனிமம் என்பதால் இப் பெயர் பெற்றது. இத அச்சுக்களின் னுடைய படிக நீளம் குற்றச்சுக்கு 0.9713 என்றும் நெட்டச்சுக்கு 1 என்றும் நிலை அச்சுக்கு 0.5704 என்றும் கணித்துள்ளார்கள். இப் அமைப்பிலும் (படம் 2அ) படிகங்கள் பட்டக