உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஆர்னித்தீசியா

132 ஆர்னித்தீசியா களின் இடுப்பெலும்பு மட்டும் நான்கார (tetrarad- iate) அமைப்புப் பெற்றது. பியூபிஸ், கீழ் முன்னோக் கியும் இஷியத்திற்கு இணையாகவும் அமைந்துள்ளது. முன் பியூபிஸ் (prepubis) முன்னோக்கியும் இலியத் துக்குக் கீழேயும் உள்ளது. இலியமும் முன்பக்கத்தில் நீண்டிருப்பதால் நான்கு ஆரமுடைய அமைப்புத் தோன்றுகிறது. பியூபிசும் இஷியமும் இணையாகப் பின்னோக்கியிருப்பது பறவைகளுக்கே உரித்தான ஒரு பண்பு. அதனால் ஆர்னித்தீசியன்களைப் பறவை இடுப்பெலும்பு அமைப்புள்ள ஊர்வன எனக் கூறுவ துண்டு. டிரையாசிக் காலம் முதல் கிரட்டேசியஸ் காலம் வரை (225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை) வாழ்ந்த இவை முன் டெண்டேட்டுடையவை predentate) என்றும் அலகுடை டைனோசார்கள் (beaked dinosaurs) என்றும் அழைக்கப்படுகின்றன. சில ஆர்னித்தீசியன்கள் இரண்டு (பின்னங்கால் கள்) கால்களாலும் மற்றவை நான்கு கால்களாலும் இடப்பெயர்ச்சி செய்தன. இருகால்நடைப் பழக்கம் (Bipedal gait) உள்ள விலங்குகளின் வால் நீண்டு, பருத்துப் பெரியதாக சமநிலைப்படுத்தும் உறுப்பாகச் balancing organ) செயல்பட்டது. தாடைகளின் முன் பகுதியில் பற்களில்லை, பின் பகுதியில் மட்டுமே பற் கள் இருந்தன. சில ஆர்னித்தீசியன்களின் உடல் மேற்பரப்பில் கெட்டியான கொம்புப் பொருளா லான பாதுகாப்புக் கவசமும், கடின எலும்புத் தகடுகளும் பெரிய கூரியமுட்களும் காணப் பட்டன. இவை யாவும் தாவரவுண்ணிகள், தாவரங் களின் இலைகளைப் பற்றிப் பறித்து (browsing) உண்டன. பிற்காலத்தில் ஆர்னித்தீசியன்களின் தாடைகளின் முன்பகுதி கொம்பு போன்ற கைட்டினப் பொருளால் போர்த்தப்பட்டு அலகு போல இருந்தது. அலகு போன்ற தாடையின் முற்பகுதியில் இலைகளை வெட்டித் தாடையின் பின் பகுதியிலுள்ள பற்களால் அவற்றை அரைத்து உண்டன. பெரும் பாலும் இவை நீர்நிலைகளுக்கு அருகில் வாழ்ந்து மறைந்தன. இவை கடலில் வாழவில்லை. தொல் ஆர் னித்தசியன்களிடம் மட்டும், பற்கள் தாடைகளின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்பட்டன. ஆனால் படிமலர்ச்சி மாற்றங்களின் காரணமாகப் பிற்பட்ட ஆர்னித்தீசியன்களில் தாடைகளின் முற்பகுதியில் பற் கள் மறைந்து பிற்பகுதியில் மட்டுமே காணப்படுகின் றன. இவற்றைக் கடைவாய்ப்பற்கள்(cheek teeth) என் பர். பற்கள் இலை போன்று தட்டையாகவும் வாள் பற்களுள்ள (serrated) விளிம்புடனும் இருந்தன. கீழ்த்தாடையின் முன் டென்டரி எலும்பிலும் மேல் தாடையிலுள்ள முன்மாக்சில்லரி (premxillary) எலும் பிலும் பற்களில்லை. பற்களில்லாத முன்பகுதி அலகு போன்றிருந்தது. ஆர்னித்தீசியன்கள் நாற்கால்நடைப் பழக்கத்தி லிருந்து (quadrupedal gait) இருகால்நடைத் தக வமைப்புப் பெற்றன; சில ஆர்னித்தீசியன்கள் திரும்ப வும் நாற்கால் நடைப் பழக்கத்தைப் பெற்றன. ஆனால் பொதுவாக முன்கால்கள் பின்கால்களை விடக் குட்டையாகவும் வலிமை குறைந்தனவாகவும் காணப்பட்டன. பின்கால்கள் முன்கால்களைவிட நீள மானவை; வலுவானவை. கால்களில் மூன்று அல் லது ஐந்து விரல்கள் காணப்பட்டன. விரல் நுனி களில் தட்டை நகம் அல்லது குளம்புகள் இருந்தன. இருகால் ஆர்னித்தீசியன்களின் கால்களில் மூன்று விரல்கள் செயல்பட்டன. ஆர்னித்தோப்போடுகள் (ornithopods) விரலூன்றி (digitigrade) நடந்தன. மற்றவை உள்ளங்காலூன்றி (plantigrade) நடந்தன. ஆர்னித்தோப்போடுகள் தவிர மற்ற ஆர்னித்தீசியன் களில் எலும்பாலான கெட்டியான ஒருபுறக்கவசம் உடலின் மேற்பகுதியை மூடியிருந்தது. சில ஆர் னித்தோப்போடுகளில் புறக்கவசம் குறைந்து அல்லது மெலிந்து காணப்பட்டது. சில ஆர்னித்தீசியன்களின் எலும்புகள் உட்கூடு இன்றிக் கெட்டியாக இருந்தன. ஆனால் வேறு சில வற்றின் நீண்டஎலும்புகளில் குழாய் போன்ற உட் குடைவு இருந்தது. தொடை எலும்பு (femur), மேற்கை எலும்பை (rumerus) விடப் பெரியது. உடலுடன் செங்குத்தாக இணைந்திருந்தது. தொடை எலும்பின் நடுப்பகுதியில் ஒரு பெரிய முண்டு காணப்பட்டது. இதனை நான்காவது டுரோகேன்ட் டர் (trochanter) என்பர். இதன் மேற்பரப்பு வலு வான தசைகள் இணைந்துகொள்ள ஏற்புடையதாக இருந்தது. பின்கால்களின் டிபியா (tibia) என்னும் கீழ்க்கால் எலும்பு தடித்து நன்கு வளர்ச்சியுற்றி ருந்தது. கால்களில் முழங்கால் சில் (patella) இல்லை; தொடை எலும்பைவிட டிபியா நீளமானது. இத் தகைய கால் எலும்புகள் வேகமாக ஓடக்கூடிய விலங்குகளின் பண்புகளில் ஒன்றாகும். மண்டை யோட்டில் கண்குழிகளுக்கு முன்னுள்ள பகுதியில் துளைகளில்லை. விலங்கு ஆர்னித்தீசியன்கள் எந்த ஊர்வன வகையிலிருந்து படிமலர்ச்சி மாற்றங்கள் பெற்றுத் தோன்றின என அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால் இவை புரோசாரப்போடுகளிலிருந்து (Pro- sauropoda) தோன்றியிருக்க வேண்டுமென்று கருதப் படுகின்றது. சாரப்போடுகள் (sauropods) தோன்றி யதற்குப் பின்னரே ஆர்னித்தீசியன்கள் தோன்றின. கிரட்டேசியஸ் காலத்தில் இவை படிமலர்ச்சி பெரும அடைந்தபோது சாரப்போடுகள் எண்ணிக்கையில் குறைய ஆரம்பித்தன. சாரீசியன்களின் படிமலர்ச்சி காலத்தைவிட ஆர்னித்தீசியன்களின் படிமலர்ச்சிக் காலம் குறைவானது. ஆனால் இவை பலவகையான படிமலர்ச்சித் தகவமைப்புகளைப் பெற்றன. புதை படிவங்கள் அடிப்படையில் ஆராயும்போது இலை டிரையாசிக் காலம் முடியும்வரை காணப்பட்ட