ஆர்னித்தீசியா 133
தாகத் தெரியவில்லை. ஆனால் டிரையாசிக் காலமுடி வில் இவை தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தனவென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றின் ஐவிரல் காலடிச் சுவடுகள் வட அமெரிக்கப் பகுதி யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வகைப்பாடு. வரிசை ஆர்னித்தீசியா நான்கு உள் வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உள்வரிசை 1 - ஆர்னித்தோப்போடா (ornithopoda). இவ்வரிசையைச் சேர்ந்தவை இரண்டு (பின்னங் கால்களால் நடந்தவை; முன்கால்கள் சிறியவை; மேல் டிரையாசிக் முதல் மேல் கிரட்டேசியஸ் வரை வாழ்ந்தவை. உள்வரிசை 2 -சொட்டாப்சியா (ceratopsia). இல் வரிசையைச் சேர்ந்த ஆர்னிததீசியன்கள் நான்கு கால்களாலும் நடந்தவை; மண்டையோட்டுடன் கொம்புகள் இணைந்திருந்தன. இவை மேல் கிரட்டே சியஸ் காலத்தில் வாழ்ந்தவை. உள்வரிசை 3 - ஸ்டீகோசாரியா (stegosauria). நான்கு கால்களால் நடந்த ஆர்னித்தீசியன்கள்; உடல் தோலில் கெட்டியான எலும்புத்தகடுகள், கூர்முட்கள் இருந்தன; இவை மேல் டிரையாசிக் முதல் கீழ் கிரெட் டேசியஸ் வரை வாழ்ந்தவை. உள்வரிசை 4 - ஆங்கைலோசாரியா (ankylosauria) இவற்றின் உடல் மேற்பரப்பு எலும்புத் தகடுகளால் தட்டையான மூடப்பட்டிருந்தது; இவை சற்றுத் உடல் கொண்டவை. மேல் கிரட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்தவை. கீழ் கிரட்டேசியசில் ஒருசில வாழ்ந்தன. ஆர்னித்தோப்போடுகள். ஹெட்டிரோடான்ட்டோசா ரஸ் (heterodontosaurus) என்னும் இனம் தென் ஆப்பி ரிக்காவில் மேல் டிரையாசிக் படிவுப் பாறைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. கேம்ட்டாசாரஸ் (Complosaurus ) மேல் ஜுராசிக் காலத்தில் வாழ்ந்தது. 2 மீட்டருக்கு மேல் உயரமுடையது. ஆர்னித்தோப்போடுகள் பெரும்பாலும் பின்கால்களால் மட்டும் நடந்தன பின்கால்கள் நீளமானவை; வலுவுள்ளவை. நான்கு கால்களால் நடக்கப் பயன்படும் அளவுக்கு முன் கால்கள் நீளமானவை. ஓய்வாக இரைதேடும்போது நான்கு கால்களால் நடந்தன. தேவையான நெருக்கடி காலங்களிலும், எதிரிகளிடம் இருந்து தப்பி ஓடவும் மட்டுமே பின்கால்களைப் பயன்படுத்தின. பின் கால்களில் அகலமான முன்பக்கம் நீட்டிக்கொண் டுள்ள நான்கு விரல்கள் இருந்தன. ஐந்தாவது கால் விரல் மிகச் சிறியதாக இருந்தது. முன்கால் விரல்கள் மிகச் சிறியவையாக இருந்தமையால் அவற்றைக் கொண்டு எதையும் பற்றிப் பிடிக்க முடியாது. தாடையும் பற்களும் தாவரம் உண்ணும் வழக்கத் திற்கேற்ப அமைந்திருந்தன. தாடையின் பக்கங் களில் இலை போன்ற தட்டையான பற்கள் இலை களை வெட்டி உண்ணுதற்கேற்ப அமைந்திருந்தன. ஆர்னித்தீசியா 133 ஹிப்சிலோ ஃபோடான் (hypsilophodon) கீழ்கிரட்டே சியஸ் காலத்தில் காணப்பட்டது. இதற்கு முன்மாக் சில்லரிப் பற்கள் இருந்தன. இது ஆர்னித்தீசியன்களின் தொடக்ககால நிலையைக் காட்டுகிறது. இகுவானோ டான் (iguanodon)பெல்ஜியம் நாட்டில் கீழ்த்கிரட்டேசி யஸ் காலத்தில் காணப்பட்டது. இது 3 முதல் 5 மீட்டர் வரை நீளமானது. இது இரண்டு பின் கால்களால் நடந்தது. இதன் முன்கால்கள் சிறியனை வாக இருந்தன. குத்துவாள் போன்று நீண்டு உறுதி யாக இருந்த முன்கால கட்டைவிரல், தற்காப்புக் கும் பயன்பட்டிருக்கலாம். தலையில் கவசத் தகடுகள் இல்லை. பற்களின் விளிம்புகள் வாள்பற்கள் போல இருந்தன. செயல்படும் பல்வரிசையை அடுத்துப் பல வரிசைகளில் மாற்றுப் பற்கள் காணப்பட்டன். சொட்டாப்சியன்கள். இவை கொம்புடைய டை னோசார்கள் (horned dinosaurs). மேல் கிரட்டே சியஸ் காலத்தைச் சார்ந்த டிரைசெரட்டாப்ஸ புரோர் சஸ் (Triceratops prorsus) இந்த உள்வரிசையைச் சேர்ந்த பெரும்பல்லி உடல் 5 மீட்டர் நீளமானது, நீண்ட தடித்த நேரான நான்கு கால்கள் உடலைத் தாங்கிநின்றன. தடித்த வலுவான மண்டையோட் டின் பின்பகுதியிலிருந்து இரண்டு நீண்ட வலு வான கூரிய முனையுள்ள கொம்புகள் முன்பக்கம் நீட்டிக் கொண்டிருந்தன. தலையின் முன்முனை யில் நாசி எலும்புடன் இணைந்த ஒரு சிறு கொம்பு இருந்தது. எலும்பாலான ஒரு பெரிய பிடரிக் கேட யம் மண்டையோட்டின் பின்முனையுடன் இணைந் திருந்தது. இவற்றின் பற்கள் இரண்டு வேர்கள் உடையவை, தாவர உணவுக்கு ஏற்ப அமைந்திருந் தன. இரட்டை வேர்ப்பற்கள் ஊர்வன விலங்கு களில் காணப்படுவதில்லை; இது ஒரு விதிவிலக்கு. ஸ்டீகோசார்கள். மேல் ஜூராசிக் காலத்தில் வாழ்ந்த ஸ்டீகோசாரஸ் (Stegosaurus) இந்த உள் வரிசைக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதன் நீளம் 5 மீட்டர். தலை மிகச்சிறியது; முதுகு மேற் பக்கம் வளைந்திருந்தது; வால் சிறியது; பின்கால்கள் முன்கால்களைவிடப் பெரியவை; வலுவானவை இந்த வகை ஆர்னித்தீசியன்கள் நான்கு கால்களால் நடக்கும் வழக்கத்தைத் திரும்பப் பெற்றன. பிடரி யில் தொடங்கி வால் வரையில் முதுகில் 8 ஜோடி கனமான எலும்புத் தகடுகள் காணப்பட்டன. இத் தகடுகளின் பின்னால் தடித்த முட்கள் இருந்தன. உடல் மேற்பரப்பு முழுதும் கூர்முள் போன்ற அமைப்புகள் இருந்தன. ஆங்கைலோசார்கள். இவை கவசமுடைய டை னோசார்கள் ( (armoured dinosaurs). ஆங்கைலோ சாரஸ் (ankylosaurus), 7 மீட்டர் நீளமிருந்தது; கிரட் டேசியஸ் காலத்தில் வாழ்ந்தது. ஸ்டீகோசாரஸைப் போன்ற உயர்ந்த மேல்நோக்கிய வளைந்த முதுகு இல்லை. கால்கள் குட்டையானவை; பின்