134 ஆர்ஜிரோசிஸ்
134 ஆர்ஜிரோசிஸ் கால்கள் முன்கால்களைவிட நீளமானவை. உடல் மேற் பரப்பு முழுதும் எலும்புத் தகடுகளால் மூடப்பட் டிருந்தது. உடல் மருங்குகளில் வரிசையாக நீளமான எலும்பு முட்கள் இருந்தன; வால் நுனியில் ஒரு பெரும் எலும்புத் திரட்சி இருந்தது. தரையில் படுத்துவிட்டால் வலுவான எதிரிகள் கூட தனை ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனால் இது தன் வால் நுனியால் அடித்து அவற்றின் எலும்புகளை நொறுக்கியிருக்கும். பற்கள் வலுவற்றவை. இவை மென்மையான தாவரங்களை உண்டு வாழ்ந்திருக்க வேண்டும். நூலோதி உ. கருப்பணன் 1. Colbert, E. H., Evolution of the Vertebrates, Wiley Eastern Limited, New Delhi, 1969. 2. Young, J. Z., The Life of Vertebrates, Oxford University Press, London, 1964. ஆர்ஜிரோசிஸ் இது கண்ணின் இமை இணைப் படலத்தில் உண்டா கும் ஒரு கறையாகும். கண்நோய்க்கு அடிக்கடி வெள்ளி நைட்ரேட்டுப்பயன்படுத்துவதால் வெள்ளி நைட்ரேட்டு வேதியியல் மாற்றம் ஏற்பட்டு அது இமை இணைப் படலத்தில் ஒரு கறையை உண்டாக்குகிறது. இதற்கு ஆர்ஜிரோசிஸ் (argyrosis) என்று பெயர். கண் முன்பு கண் நோய்களுக்கும், கண்ணில் ஏற்படும் டிரக்கோமா என்ற நோய்க்கும் கண்ணீர்ப்பை அறுவை சிகிச்சை நேரத்திலும் அதிகமாக வெள்ளி நைட்ரேட்டைப் பயன்படுத்தி வந்தனர். தற்காலத்தில் து அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை. இமை இணைப் படலத்திலுள்ள இரத்த நாளங்களின் சுவர்களிலும், சவ்வின் நார்ப் பகுதியிலும், கருவிழிப் படலத்தின் டெசிமெட் சவ்விலும் ஒருவித மாற்றத் தால், பழுப்புக் கறை ஏற்படுகிறது. சிகிச்சை வெள்ளி நைட்ரேட்டு, ஆர்ஜிரால் இவற் றைப் பயன்படுத்துகிறவரை இந்தக் கறையைத் தவிர்க்க முடியாது. 2% பொட்டாசியம் இரும்பு சய னைட்டின் இரண்டு பாகமும், 12% சோடியம் தையோசல்ஃபேட்டு ஒரு பாகமும் கலந்த மருந்தை இரும்புக் கலப்பு இல்லாத ஊசி கொண்டு, இமை இணைப் படலத்தில் செலுத்தினால் ஒரு வித குணம் தெரியலாம். ஆர்ஜிரோடைட்டு ஆர்ஜிரோடைட்டு (argyrodite) வெள்ளி, ஜெர்மானி யம், கந்தகம் கொண்ட ஓர் அருங்கனிமமாகும். வெள்ளி, ஜெர்மானியம், சல்பைடு என்ற வேதியியற் கூட்டுப் பொருளாலானது. இதன் வேதியியல் உட் கூறு Ag, GeSg படிகங்கள் செஞ்சமக் சதுரப்படிகத் தொகுதியைச் (isometric system) சார்ந்தவை. எண் முக (octahedron) மற்றும் பன்னிருமுகப் (dodeca iedron) படிகங்களாகக் காணப்படுகின்றன. ஆனால் பெரும்பாலும் திண்மமாகவோ (massive) படிகங்க ளைக் கொண்ட ஓடுகளாகவோ (crystalline crusts) காணப்படுகின்றன. ஸ்பினல் விதிப்படி இரட்டுறல் பண்புடையவை. ஆர்ஜிரோடைட்டு ஊதாச் சாயலைக் கொண்ட கறுப்பு நிறமுடையது; உலோக மிளிர்வுடையது (metallie lustre); கடினத்தன்மை 2.5; அடர்த்தி 6.1. முதல் 6.3 வரை மாறுபடும். ஆர்ஜிரோடைட்டிலுள்ள ஜெர்மானியம் (ger- manium ) அணுக்களுக்குப் பதிலாகத் தகரத்தின் (tin) அணுக்களைக் கொண்ட வெள்ளியின் மற்றுமொரு சல்பைடுக் கனிமம் கேன்ஃபீல்டைட்டு (canfieldite). இதன் வேதியியல் உட்கூறு Ags SnSe. வெள்ளியோடு, ஜெர்மானியம் மட்டுமே கொண்ட ஆர்ஜிரோடைட் டுக்கும், தகரத்தை மட்டுமே கொண்ட கேன்பீல் டைட்டுக்கும் இடையில் ஜெர்மானியம் மற்றும் தக ரம் ஆகிய இரு மூலகங்களின் வெவ்வேறு விகிதக் கூட்டுப் பொருளைக் கொண்ட பல கனிமங்கள் உள் ளன. இவ்வகையாகக் கனிமத் தொகுதி திண்மக் கரைசல் வரிசை (solid solution series) என்றழைக் கப்படும். ஜெர்மானியத்தின் இரு முக்கிய தாதுக்களில் ஒன்றான ஆர்ஜிரோடைட்டிலிருந்துதான் முதன் முத லில் ஜெர்மானியம் கண்டுபிடிக்கப்பட்டது. இயற்கையில், இரும்பின் தாதுவான சிடரைட்டு டனும் (siderite) தகரத்தின் தாதுவான கசிட்டரைட் டுடனும் (assiterite) ஆர்ஜிரோடைட்டு சேர்ந்து காணப்படுகிறது. ஜெர்மனியில் படிக ஒடுகளாகவும் பொல்வியாரில் பெரும் படிகங்களாகவும் கிடைக் கிறது. காண்க, ஜெர்மேனியம். நூலோதி வெ.இராதாகிருஷ்ணன் 1. கிருஷ்ணசாமி. எஸ், நிலத்தின் செல்வங்கள்- கனிப்பொருள்கள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1971. 2. Betakhtin, A., A Course of Mineralogy, Peace Publishers, Moscow. 3. Jenson, Mead.L. and Bateman, Alan.M, Economic Mineral Deposits, 3rd Ed., revised printing. John Wiley & Sons, New York, 1981. 4 The American Geological Institute deaeration