உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியோல்‌, தொடுகை 149

வீச்சுகளையும் பால்வழி மண்டலங்களிலிருந்து (galaxies) வீசும் கதிர்களையும் ஆய்வு செய்வது வானியல் கதிர்வீச்சுச் செய்முறையின் முக்கிய குறிக் கோள். சூரிய இயற்பியல் சோதனையில் சூரியக் கதிர் வீச்சுலிருந்து வீசும் அல்லது உமிழும் திறன்மிக்க நியூட்ரான், காமாக்கதிர்கள் வளிமண்டலத்தில் இக்கதிர்களின் ஊடுருவுதிறன், அடர்த்தி முதலியவை ஆய்வு செய்யப்படுகின்றன. அயன் வளிமண்டலச்சோதனையின் மூலம் நிலக்கோளத் தைச் சுற்றியுள்ள அயனமண்டலத்தைப் பற்றியும் அதன் நீண்ட தூரத்தில் செயல்படும் வானொலித் தொடர்புகளையும் மண்டலத்தில் உள்ள துகள்களையும், அதன் இயங்கியலைப் பற்றியும், அயனமண்டலத்தில் காணப்படும் ஒளிச்சுழற்சியைப் பற்றியும், புற ஊதா நிறங்களில் ஏற்படும் சிதற லைப் பற்றியும் நிலக்கோளப் புறப்பரப்பில் (Geo- corona) ஹைட்ரான் அணுக்களின் அடர்த்திபற்றியும் எலெக்ட்ரான் அடைப்பும் (electron trap) ஆற்றல் நிறமாலையும் பற்றிய பற்றிய ஆய்வும், இவ்வாற்றலில் காணப்படும் அதி வெப்ப எலெக்ட்ரான் பற்றியும் {super therma electrons) புற ஊதாநிறமானியைப் பற்றியும் இரவு நேரங்களில் விண் வெளியில் ஏற் படும் ஆல்பாக்கதிர்கள் பற்றியும் ஆய்வுகள் நடத்தப் பட்டவண்ணம் உள்ளன. தரைக்கட்டுப்பாட்டு நிலையங்கள். (ground control system). இச் செயற்கைக் கோளின் குறிப்புகளை வாங்கிச் செய்திகள் திரட்ட ஸ்ரீஹரிகோட்டாவில் ஒரு தரை நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.திருப்ப முடிந்த உணர்யாகி சட்டத் (steerable yagi antenna) தொடரும் ஒரு முழுமையான குறியீட்டு அலைவாங் கியும் அலைவு காட்டியும் செயற்கைக் கோளில் இருந்து பெறப்படும் செய்திகளை ஆய்வு செய்யும் ஏற்பாடும் செயற்கைக் கோளுக்கு ஆணையிடும் ஏற்பாடும் இத்தரைக்கட்டுப் பாட்டு நிலையத்தில் உள்ளன. நூலோதி சு.ச. Eknath Ranade, Indian Science Through the Ages, Vivekananda Vendra Patrica, Vol. 12, Madras, 1983. ஆரியோல், தொடுகை தொடுகை ஆரியோல் (contact aureole) என்பது உருமாற்றப் பாறைகள் உருவாகும் பல முறைகளில் ஒன்று. இது, பாறைக் குழம்பு ஏற்கனவே உருவான பாறைகளை ஊடுருவும் பொழுது ஏற்படும் தொடர் பால் அதைச் சூழ்ந்துள்ள பாறைகளில், தான் ஏற்று வந்த அதிவெப்பம், ஆவிப் பொருள்களை உட்புகுத் துவதால் உருவாகும் புதிய பாறையாகும். இது ஆரியோல். தொடுகை 149 தொடுகை உருமாற்றப் பாறை (contact metamorphic rock) எனப்படும். இம்மாற்றம் அவ்வூடுருவிய பாறையின் நடுவிலிருந்து அதைச் சுற்றி ஏறத் தாழ வட்டமாக ஒரு குறிப்பிட்ட ஆரத் தொலைவு வரை மட்டுமே உருவாகும். இந்த ஆரத்தொலைவை உள்ளடக்கி வரைந்த ஒரு வட்டப் பகுதியே ஆரி யோல் அல்லது மாற்றவட்ட வளாகம் (aureole) எனப்படும். ஒரு பாறைக் குழம்பு மற்றொரு பாறையை ஊடுருவித் தொடும்பொழுது இம்மாதிரி யான தொடுகை உருமாற்றப் பாறை ஒரு குறிப் பிட்ட தொலைவில் ஏற்படுவதால் இத்தொலைவில் அடங்கியுள்ள மாற்றம் அடைந்த பாறைகளைக் கொண்ட பகுதி தொடுகை ஆரியோல் அல்லது தொடு மாற்றவட்ட வளாகம் எனப்படும். அனற்பாறை தொடுகை வட்டார வளாகம் சுழற் பாறை தொடுகை வட்டார வளாகம் இவ்வகை ஆரியோலில் ஏற்படக்கூடிய மாற்றம் ஊடுருலி வந்துள்ள பாறைக் குழம்பின் வெப்ப நிலையையும், அதன் வேதியியல் உட்கூறையும் அது ஊடுருவி வந்துள்ள பாதையைச் சுற்றி அமைந்துள்ள பாறைகளின் வேதியியல் உட்கூறையும் பொறுத்த தாகும். ஓர் ஊடுருவிய பாறை (intrusive rock) வேதியியல் அமைப்பில் கிரானைட்டு (granite) உட் கூறையோ (அமிலத்தன்மை) பசால்ட்டு (basalt) உட் கூறையோ (காரத்தன்மை) அவற்றிற்கு இடைப்பட்ட கிரானோ டயரைட்டு (grano diorite) உட்கூறையோ உடையதாக இருக்கலாம். ஓர் ஊடுருவிய பாறையின் பாறைக் குழம்பைச் சுற்றி யுள்ள சுழற் பாறைகள் (country rocks) கிரானைட்டு வேதியியல் உட்கூறையோ படிவுப்பாறைகளின் (sedimentary rocks) உட் கூறையோ பெற்றிருக் கலாம். ஓர் ஊடுருவிய பாறையின் குழம்பு வெப்ப நிலை அது ஊடுருவி வந்துள்ள தொலைவைப் பொறுத்தும் அது தாங்கி வந்துள்ள எஞ்சிய ஆவியா கவியன்ற பொருள்களைக் கொண்டும் (residual