உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ஆரேசீ

152 ஆரேசீ 2. Turner, F.J., and Verhoogen, J., Igneous and Metamorphic Petrology, Wiley Eastern Limi- ted, New Delhi, 1980. ஆரேசி 1900 உள்ளன. ஆரேசீ ஒருவிதையிலைக் குடும்பம். இதில் 107 பேரினங்களும் சிற்றினங்களும் தென்னிந்தியாவில் 18 பேரினங்களும், 42 சிற்றினங் களும் காணப்படுகின்றன. பொதுப் பண்புகள். இவற்றில் பெரும்பாலானவை நிலத்தாவரங்களாகும். மிதக்கும் நீர்த் தாவரங்களாக வும் ஆகாசத் தாமரை (Pistia stariot ·s Linn), மட்ட நிலத்தண்டுகளைப் (rhizomes) பெற்றுப் பலபருவச் செடிகளாகவும் (வசம்பு - Acorus calamus), தண்டடிக் கிழங்குடன் இருபருவச் செடிகளாகவும் (கருணைக் கிழங்கு-Amorphophalluscampanulatus), (சேப்பங்கிழங்கு- Colocasia antiquorum), பற்றுவேர்களின் துணை கொண்டு தொற்றிப்படருகின்றனவாகவும் (ஆனைப் scandens, ஃபைலோடெண்ட்ரான்- பருவன் - Pothos Philodendron, மான்ஸ்டீரா - Monstra), சதுப்பு நிலத் தில் வாழும் செடிகளாகவும் (லேஜீனான்ட்ரா- Lage- andra) வெல்வேறு வளரியல்புகளுடன் காணப்படு கின்றன. சாதாரணமாகப் பால் போன்ற சாற்றில் (latex), கால்சியம் ஆக்சலேட்டு (calcium oxalate) படிகங்கள் (crystals) உண்டு. சேம்பு, கருணைக்கிழங் குகள் ஆகியவற்றை உண்ணும்பொழுது வாயிலேற் படுகின்ற நமைச்சலுக்குக் காரணம் அவற்றில் ஊசி வடிவத்திலிருக்கின்ற ஆக்சலேட்டுப் கால்சியம் படிகங்களே ஆகும். இலைகள் தனித்தவை; மாற் றிலை அடுக்கமைப்பு (alternate phyllotaxy) உடை யவை; இலையடி உறை (sheath) போன்றவை; வலை அம்பு வடிவத்திலோ நரம்பமைப்பு உடையவை; வடிவத் ஆப்பு வடிவத்திலோ, வாள் (sagittate), திலோ, இறகு வடிவில் பிளவுற்றோ, உள்ளங்கை வடிவத்திலோ, பல துளைகளை வரிசைக்கிரமமாகப் பெற்று; பலவண்ணங்களுடன் காணப்படும். மஞ்சரி, பாளை மஞ்சரி (spadix) ஆகும்; இதன் தண்டு (peduncle) தடித்து, சதைப் பற்றுள்ளது, செங்குத்தானது; ஒவ்வொன்றும் ஒரு பெரிய, ஏறக் வடிவப் குறைய இலையையொத்த பச்சை, மஞ்சள், வெள்ளை, சிவப்பு நிறப் பாளையினால் (spathe) சூழப்பட்டிருக்கும். மலர்கள் சிறியவை, காம்பற்றவை; மஞ்சரித் தண்டில் புதைந்து அல்லது மேற்பரப்பில் அமைந்தவை. இவை மூவங்க (trimerous) அல்லது ஈரங்க (dimerous), இருபால் (bisexual) பூக்கள். ஒருபால் (uniserual) பூக்களாயின் பெண்பூக்கள் மஞ்சரித் தண்டின் அடிப்பகுதியிலும் ஆண் பூக்கள மேற்பகுதியிலும் அணைந்து இருக்கும். மலட்டுப் பூக்களோ இவை யிரண்டிற்கு மிடையில் வளரிகளின் தொகுப்புகளோ காணப்படும். பெரும் பாலான பேரினங்களில் மலரிதழ்கள் இல்லை. இதழ் களிலிருக்கும்பொழுது அவை இரு வட்டங்களில் 2+2 அல்லது 3+3 ஆகக் காணப்படும். மகரந்தத் தாள்கள் எண்ணிக்கை 6 முதல் 10 வரை இருக்கும்; இவை இணையாமலோ அடிப்பாகத்தில் மட்டும் இணைந்தோ முழுவதுமே இணைந்தோ மகரந்தத் தாள்களும் மகரந்தப்பையும் சினாண்டிரஸ் (syfan- drous) என்ற நிலையிலிருக்கும். சூற்பையின் சூலி லைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டு இணைந்திருக்கும்; மேல்மட்டத்திலமைந்திருக்கும்; ஓர் அறை கொண்டவை. சூலகத்தண்டு குட்டையானது. சூலகமுடி கிளைத்தோ, கிளைக்காமலோ இருக்கும். சூலமைவு அடித்தளமொட்டியது அல்லது சுவரொட் டியது (Basal or Parietal Placentations}, ஈரறை அல்லது மூவறைச் சூற்பைகளில் சூல்கள் அச்சுச்சூல் அமைவுடனிருக்கும் (axile placentations) சூல்களின் எண்ணிக்கை வேறுபடும். மகரந்தச்சேர்க்கை. இக்குடும்பத்தில் ரந்தச் சேர்க்கை உண்டாகின்றது. பாளையின் அழ கிய வண்ணத்தினாலும் மலர்களின் முடைநாற்றத் தினாலும் ஈக்கள் கவரப்படுகின்றன. மஞ்சரியின் பெண்மலர்கள் முதலில் முதிர்வடைந்து மகரந்தத் தூளை வெளிப்படுத்தும் வரை ஈக்கள் மஞ்சரியைச் சுற்றியுள்ள மடலில் குறுகிய கழுத்துப் பகுதியினா லும், அப்பகுதியிலுள்ள கீழ்நோக்கிய வளரிகளாலும் வெளியேற முடியாத நிலையில் மஞ்சரிக்குள்ளாகவே சிறைப்படுத்தப்படுகின்றன. ஆண்மலர்கள் முதிர் வடைவதும் மஞ்சரித் தண்டின் வளரிகள் உதிர்வதும் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. இப்பொழுது ஈக்கள் வெளியேறும் பொழுது மகரந்தம் அவற்றின் உடம்பில் ஒட்டி க்கொள்கின்றது. இவை வேறு மஞ் சரிக்குச் சென்று மேற்கூறப்பட்ட வகையில் அயல் சேர்க்கையையேற்படுத்துகின்றன. மகரந்தச் பெர்ரி (berry) வகையைச் சார்ந்தது. முளைசூழ்சதை (endosperm) இன்றியோ அதிகமாகப்பெற்றோ இருக் கும். கரு வளைந்தோ அல்லது நேராகவோ இருக்கும். கனி பொருளாதாரச் சிறப்பு. சேப்பங் கிழங்கு (Taro- Colocasia esculenta) கருனைக்கிழங்கு (Yam - Amoro phallus campanulatus) ஆகியவற்றின் தண்டடிக்கிழங்கு கள் சமைத்து உண்ணப்படுகின்றன. கருனைக்கிழங்கு மூலவியாதிக்கும் (piles), சீதபேதிக்கும். (dysentery) தக்க மருந்தாகக் கொடுக்கப்படுகின்றது. வசம்பின் (Sweet Flag) உலர்ந்த தரையடி மட்டத்தண்டு பசியைத் தூண்டுவதற்கும், செரிப்பின்மை, வயிற் றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்துவதற் கும் பயன்படுகிறது. மேலும், தண்டின் தூள் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது. நட்டாத்திவச யத்தின் (Cryptocoryne spiralis) நில அடித்தண்டு வேறுசில மருந்துகளைச் சேர்த்து, குழந் டன்