உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியோல்‌, தொடுகை 151

. அகத்தளப் பாறையில் ஆங்காங்கு காணப்படுகின் றன. இத்தகைய புள்ளிகள் சில சமயத்தில் வெப் பத்தால் உருகி உராய்ந்த கண்ணாடிப் பாறைகளில் காணப்படுவதே தொடுகை உருமாற்றப் பாறைகளுக் குரிய அறிகுறியாகும். இன்னும் சற்று உள்புறத்தி லுள்ள மஸ்கோவைட்டு, குளோரைட்டு மற்றும் இரும்பு ஆக்சைடுகள் உருகி ஒன்றாக இணைந்து பயோடைட்டு (biotite) என்னும் கனிமமாகப் படிக மாகிப் படலப்பாறை (schist), களிமட்பாறை, அகத் தளப் பாறைகளாக மாறுபட்டுக் காணப்படுகின்றன. ஊடுருவி வந்துள்ள டயோரைட்டு பாறைக்கு அருகில் கனி கார்டியரைட்டு (cordierite) என்னும் புதிய மத்தைத் தாங்கிய ஹார்ன்ஃபெல்சு (hornfelse) பாறைகள் காணப்படுகின்றன. இவ்வாறே அமெரிக்காவிலுள்ள மின்னசோட்டா (Minnesotta ) என்னுமிடத்தில் ஊடுருவி வந்துள்ள கிரானைட்டு காப்ரோ (gabbro) போன்ற பாறைகள் அவற்றைச் சுற்றியுள்ள களிமூல மாற்றுப் பாறையாகிய களிமட் பாறை (pelitic slates) என்ற அகத்தளப் பாறையில், எல்லை வரையிலிருந்து அதன் சந்திப்பு, தொடு தெளிவாகத் தெரியும் 10 மைல் தொலைவுக்குத் படியான பயோடைட்டுக் கனிம மாற்றத்தை உரு வாக்கியுள்ளன. அதேசமயத்தில் டுயுலுத் காப்ரோ (duluth gabbro) ஊடுருவுப்பாறை அது ஊடுருவி வந்துள்ள தகட்டு அகத்தளப் பாறையில் மூன்று வகையான தொடு மாற்றவட்ட வளாகத்தை உரு வாக்கியிருப்பதைக் கண்டுள்ளார்கள். தொடு புள்ளி பகுதி யிலிருந்து 2 மீ. தொலைவுக்குள் யில் கார்டியரைட்டு, டயாப்சைடு (diopside), பயோடைட்டு ஹைபர்ஸ்த்தீன் நிறைந்த ஹ்ார்ன்ஃபெல்சு பாறையும் 1.5 மீட்டரி லிருந்து 15 மீட்டருக்குள் கார்டியரைட்டு குறைந்த பயோடைட்டு சற்று மிகுந்த ஒருவிதமான மாற்றுப் பாறையையும் 15க்கு மேல் 150 மீட்டருக்குள் உள்ள பகுதிகளில் மேலே கூறியதைப் போல் பயோடைட்டு நிறைந்த புள்ளிகளை உடையதும் கார்டியரைட்டு கொண்ட மாற்றுரு திரள் கனிமங்களை (porphyro- blast) உடையவைகளாகவும் தகட்டு அகத்தளப் பாறை மாறுபட்டுக் காணப்படுகின்றது. (hypersthene), உள்ள வளா இவ்வகை மாற்றவட்ட வளாகத்தில் ஒரு கார வேதியியல் தன்மையுடைய பாறைக் குழம்பு ஊடுருவும்பொழுது கிரானைட்டுக் குழம்பு ஊடு ஏற்படக்கூடிய மாற்றவட்ட ருவுவதால் கத்தின் அளவைவிடச் சிறியதாகவே இருக்கும். அகத் தளப் பாறைகளில் இம்மாதிரி ஊடுருவும் காரப் பாறைக் குழம்பு முதலில் கார்டியரைட்டு அல்லது ஹைப்பர்ஸ்த்தீன் செறிந்த ஹார்ன்ஃபெல்சு பாறை யும் அல்லது பயோடைட்டு படலப் பாறையும் அதற் கும் அப்பால் புள்ளியுடைய தகட்டுப் பாறையும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து அமைந்தபடி ஆரியோல், தொடுகை 15i ஒவ்வொரு மாற்ற வட்ட வளாகத்திலும் இருக்கும். இவ்வாறு மாற்றவட்ட வளாகங்களாய் ஏற்படும் உருமாற்றப்பாறைகளில் கால்சியம் ஆக்சைடு (CaO), இரும்பு ஆக்சைடு (FeO) போன்றவை அதிகமாகச் சேர்க்கப்படுகின்றன. ஆனால் பொட்டாசியம் ஆக் சைடு அங்குள்ள அகத்தளப் பாறைகளிலிருந்து அகற் றப்படுகின்றது. இத்தகைய காரப்பாறைக் (basic rock) குழம்பு ஊடுருவுவதால் ஏற்படக்கூடிய மாற்ற வட்ட வளாகங்களில் அயல் அடக்கப் பாறைகள் (xenolith) முழுமையாக மாற்றப்பட்டுவிடுகின்றன. அதையடுத்து அதன் தொடுபாறைகள் குறிப் பிட்ட மாற்றங்களைக் காண்பிக்கின்றன. றன. அமில (acidic) பாறைக்குழம்பு ஓர் அகத் தளப் பாறையில் ஊடுருவும்பொழுது பல ஆயிரக் கணக்கான மீட்டர் தொலைவிற்குத் தொடர்ச் சியாக மாற்றவட்ட வளாகத்தை உ உருவாக்குகின் இதன் தொடு பாறையும் இதில் இழைந்துள்ள அயல் பாறைகளும் வேதியியல் தன்மையில் மாற்றம் உண் டாக்காது புதிய கனிமங்கள் நிறைந்த உருமாற்றப் பாறைகளாக இப்பாறைக்குழம்பிற்கு அருகாமை யில் காணப்படுகின்றன. இம்மாற்றவட்ட வளாகத் தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மகனீசியம், இரும்பு கார ஆக்சைடுகள் உருமாற்றத்தின்போது மேலும் அதிகரிக்கப்படுகின்றன. ஆவித்தன்மையில் நிறைந் துள்ள புளோரின், பாஸ்பரம், கந்தகம் போன்ற வேதியியல் பொருள்களும் அகத்தளப் பாறையில் கலந்து இப்பகுதிகளில் மாற்றத்தை உருவாக்கு கின்றன. எனவே, ஊடுருவி வரும் பாறைக்குழம்பு கள் அவற்றைச் சுற்றியுள்ள அகத்தளப் பாறையில் கலந்து இப்பகுதிகளில் மாற்றத்தை உருவாக்கு கின்றன. எனவே ஊடுருவி வரும் பாறைக்குழம்புகள் அவற்றைச் சுற்றியுள்ள அகத்தளப் பாறைகளிலும் அதனுள் ஈர்க்கப்பட்ட அயல்பாறைகளிலும் அவை கொணரும் வேறுவிதமான வேதியியல் கூட்டுப் பொருள்களையும் அதிக வெப்பத்தையும் கொணர்ந்து அகத்தளப் பாறைகளோடு பகிர்ந்து கொண்டு ஒரு புதிய பாறைகளை உருவாக்கும். அப் பகுதிகளையே இவ் ஆரியோல் (மாற்றவட்ட) வளாகம் குறிக் கின்றது. இது அமைவதைக் கொண்டே அப்பகுதி யில் ஒரு பாறை ஊடுருவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இவற்றினின்று நெருக்கமாக எடுத்த மாதிரிப் பாறைகளின் வேதியியல் உட் கூறை ஆராய்வதன் மூலம் இவற்றின் வலிமையும், தன்மையும், பரவலும் கணிக்கப்படுகின்றன. ஞா. வி. இராசமாணிக்கம் நூலோதி 1. Dana, J.S., and Ford, W.E., A Text Book of Mineralogy, Wiley Eastern Limited, New Delhi, 1985.