உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரோஸ்மித்‌, ஹாரன்‌ 165

தொடங்கி முத்தலைத் தசையின் வெளிப்புறத் தலை யை ஊடுருவி வந்து மேல்கையின் வெளிப்புறமாகக் கீழ் நோக்கிச் சென்று கீழ்க்கையின் பின்பக்கத் தோலுக்குக் கீழாக மணிக்கட்டு வரை செல்லும். இந் நரம்பு கீழ்க்கையின் பின்பக்கத் தோலுக்கும், மேல்கை யின் கீழ்ப்பாகப் பின்பக்கத் தோலுக்கும் செல்லும். கையின னது பின்பக்கத் தோலுக்குப் பின்பக்க விரலுக்குரிய நரம்புக் கிளைகள் செல்லும். பொது வாக நான்கு கிளைகள் உள்ளன. முதலாவது கிளை பெருவிரலின் ஆரை எலும்புப் பக்கப் பின்பக்கத் தோலுக்கும், பெரு விரலுக்குரிய புற மணிக்கட்டு எலும்பின் பின்பக்கத் தோலுக்கும் சிறிதளவு உள்ளங்கைத் தோலுக்கும் செல்லும். இரண்டாவது கிளை, பெருவிரலின் எஞ்சிய பின் பக்கத்தோலுக்கும், மூன்றாவது கிளை ஆள்காட்டி விரலின் பின்பக்கத் தோலின் பெருவிரல் பக்கத்தின் பாதிக்கும், நான்காவது கிளை ஆள்காட்டி விரல் நடுவிரல் ஆகியவற்றின் பின்பக்கத் தோலின் அடுத்துள்ள அரைப் பாகங்களுக்கும் செல்லும். பின்பக்க விரலுக்குரிய நரம்புகள் மேற்கூறிய விரல் களுடன் சேர்ந்த புற மணிக்கட்டெலும்பின் பின் பக்கத் தோலுக்கும் செல்லும். இந்நரம்புகள் பெருவிரலில் நகத்தின் அடிப்பாகம் வரையும் ஆள்காட்டி விரலில் விரல் நடு எலும்பின் நடுப்பாகம் வரையும், நடு விரலில் முதலாவது (proximal) விர லின் பிற்கிடையிலான மூட்டு வரையும் மட்டுமே செல்லும். எஞ்சிய பாகத்தில் நடு நரம்பின் கிளை கள் செல்லும். மூட்டிற்குரிய நரம்புகள். ஆரை நரம்பிலிருந்து உருவாகும் மூட்டிற்குரிய நரம்பு முழங்கை மூட்டிற் குச் செல்கிறது. தசைக்கு ஆழமாகச் செல்லும் நரம் பிலிருந்து உருவாகும் மூட்டிற்குரிய நரம்புக் கிளை கள் மணிக்கட்டெலும்பிற்கும் கீழ்ப்பாக ஆரை அரந்தி எலும்பிற்கும் இடையிலான மூட்டு, சில மணிக்கட்டு எலும்புகளுக்கு இடையிலான மூட்டு, புற மணிக்கட்டு எலும்புகளுக்கிடையிலான மூட்டு ஆகியவற்றிற்குச் செல்லும். புற மணிக்கட்டெலும்பிற்கும் விரல் எலும்பிற் கும் இடையிலான மூட்டு முதலாவது விரல் எலும் பிற்கும் இடையிலான மூட்டு என்பவற்றிற்கும் ஆரை நரம்பின் பிற்பக்க விரலுக்குரிய நரம்புகள் செல்லும். நூலோதி ஆ. கிருஷ்ணமூர்த்தி 1. Anderson, J.E., Grants Atlas of Anatomy, Williams & Wilkins, Baltimore, 1978, 2. Dasker G.A.G., Dv Plessis, D.J., Lee Mcgregors Synopsis of surgical Anatomy, K.M. Varghese Co. Bombay, 1986. ஆரோஸ்மித், ஹாரன் 165 3. Romanes, G.J., Cunninguam's manual of Pratical Anatomy, Vol.3, ELBS, oxford University Press, Oxford, 1984. ஆரோஸ்மித், ரன் பிரிட்டன் பெருநாட்டுப் புவியியலாளரும் நிலப் படவியலாளருமான (cartographer) இவர் 1750 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 14 ஆம் நாளன்று இங்கி லாந்து நாட்டுத் தர்காமில்(Durgham) உள்ள வின்ஸ்ட் டன் நகரில் பிறந்தார். 1823 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28 ஆம் நாளன்று இலண்டன் மாநகரில் இறந்தார். ஆரன் ஆரோஸ்மித் பல புகழ் பெற்ற நிலப்படங்களையும் (maps) நிலப்படநூல்களையும் (atlasses). வெளியிட்டார். கல்வியே கற்காத ஆரோஸ்மித் 1790 இல் இலண்டன் சென்று அளக்கையராகச் (surveyor) சேர்ந்து நிலப்படத் தயாரிப்பாளரானார். 1790 இல் வெளியிட்ட இவரது உலகப்படநூல் மிகவும் பெயர் பெற்ற ஒன்றாகும். 1794 இல் இந்நூலையே விளக் கக் குறிப்புகளுடன் வெளியிட்டார். 1796 இல் இவர் வெளியிட்ட வடஅமெரிக்கா. 1798 இல் வெளியிட்ட பசிபிக் மாகடல், 1822 இல் வெளியிட்ட தென்னிந்தி யாவின் அட்லாண்டாஸ் ஆகிய நிலப்படங்கள் இவ ரது புகழ்பெற்ற பணிகளாகும். ஆரோஸ்மித் இறந்ததும் நிலப்பட வணிகம் அவர் பிள்ளைகளான ஆரன், சாமுவேல் ஆகியோ ராலும், பிறகு இவரது உறவினரான நிலப்படவிய லாளர் ஜான் ஆரோஸ்மித்தாலும் நடத்தப்பட்டது. ஆரோஸ்மித்தால் 1834 இல் வெளியிடப்பட்ட இலண்டன் நிலப்பட நூல் (4 தொகுதிகள்) மிசுவும் புகழ் பெற்ற நூலாகும். மேலும் ஆஸ்த்திரேலியா, வடஅமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நிலப்