உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ஆல்கஹால்கள்‌

166 ஆல்கஹால்கள் படங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க விளங்கின. ஆல்கஹால்கள் பணிகளாக உலோ. செ. ஆல்கஹால்கள், ஃபீனால்கள், ஈதர்கள் போன்றவை மற்ற கரிமச் சேர்மங்களிலிருந்து குறைந்தது ஒரு ஆக் சிஜன் அணுக் கரியணுவுடன் ஒற்றைப் பிணைப்பால் இணைந்திருப்பதிலிருந்து வேறுபடுகின்றன. ஆல்க ஹால்களிலும், ஃபீனால்களிலும் ஆக்சிஜன் அணு ஹைட்ராக்சில் தொகுதியின் (-OH) ஒரு பகுதியாக அமைந்துள்ளது. ஆனால் ஈதர்களில் ஆக்சிஜன் அணு இரு கரியணுக்களுடன் இணைந்துள்ளது. ஆல்கஹால் களில் ஹைட்ராக்சில் தொகுதி ஹைட்ரோகார்பன் களிலும், ஃபீனால்களில் அரோமாட்டிக் உட்கரு வுடனும் (nucleus) இணைந்துள்ளது. ஒரு ஹைட் ரோகார்பனில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்கள் ஹைட்ராக்சில் தொகுதியால் பதிலீடு செய்து கிடைக்கும் பெறுதி களை ஆல்கஹால்கள் எனலாம். இவற்றை ஹைட்ரோ கார்பன்களின் ஹைட்ராக்சில் பெறுதிகள் எனவும் கூறலாம். அரோமாட்டிக் சேர்மங்களின் கிளைக் தொடரில் ஹைட்ராக்சில் தொகுதிகள் இணைந்திருந் தால் அவ்வமைப்பு அரோமாட்டிக் ஆல்கஹால்கள் aromatic alcohols) எனப் பொதுவாகக் குறிப்பிடப் படுகின்றன. ஏனைய அலிஃபாட்டிக் ஹைட்ரோ கார்பன்களின் ஹைட்ராக்சி பெறுதிகள் அலிஃ பாட்டிக் ஆல்கஹால்கள் (aliphatic alcohols) அல்லது ஆல்கஹால்கள் எனப் பொதுவாக அழைக்கப்படு கின்றன. ஆல்கஹால், ஃபீனால், ஈதர் ஆகியவற்றின் அமைப்புக்களை நீர் மூலக்கூறின் அமைப்புடன் ஒப்பிடலாம். நீர் H-O-H ஆல்கஹால்கள் R-O-H ஃபீனால்கள் Ar-O-H ஈதர்கள் R-O-R இங்கு Ar என்பது அரோமாட்டிக் வளையம்;R,R' என்பனஹைட்ரோகார்பன் தொடர்கள், மேற்காணும் அமைப்புக்களிலிருந்து ஆல்கஹால்களையும் ஃபீனால் களையும் நீரின் பெறுதிகளாகக் கருதலாம். அதாவது நீர் மூலக் கூறிலிருக்கும் ஒரு ஹைட்ரஜன் அணு வுக்குப் பதிலாக அலிஃபாட்டிச், அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் பதிலிடப்படுகின்றன. சிறிய ஹைட்ரோகார்பன்களைக் கொண்டு ஆல்கஹால்கள் பெரும்பாலும் நீரையொத்திருக்கின்றன ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட உண்மையாகும். என்பது ஈதர்களில் இரு ஹைட்ரஜன் அணுக்களும் நீக்கப் பட்டு ஹைட்ரோகார்பன்கள் பதிலிடப்படுவதால் அவை நீரின் பண்புகளை ஒத்திருப்பதில்லை. ஆல்கஹால்கள் பொதுவாக அதிக வினைபுரியும் சேர்மங்களாக அமைந்துள்ளன. ஹைட்ராக்சில் தொகுதியில் இருக்கும் ஹைட்ரஜனோ ஹைட்ராக் சில் தொகுதி முழுதுமோ வேதி வினையின்போது மற்ற தொகுதிகளால் விலக்கப்படுகின்றன அல்லது சேர்க்கப்படுகின்றன. சாதாரணமாக ஆல்கஹால்கள் நடுநிலைச் சேர்மங்களாக உள்ளன. ஆல்கஹால்கள் கனிமச் சேர்மங்களுடன் வினைப் பட்டுப் படிகப்பொருள்களை உண்டாக்குகின்றன. (எ.கா.MgCl,. 6 CH,OH) இவை கனிம நீரேற்ற உப்புகளையொத்திருக்கின்றன. பெயரிடும் முறை, ஹைட்ராக்சில் தொகுதிகளில் எண்ணிக்கைக்கேற்ப ஆல்கஹால்களை வகைப்படுத் தலாம். ஓர் ஆல்கஹால் சேர்மத்தில் ஒருஹைட்ராக் சில் தொகுதி மட்டும் இணைந்திருந்தால் அது ஒற்றை ஹைட்ரிக் ஆல்கஹால் (monohydric alcohol) என்றும், மூன்று இருந்தால் அது மூ ஹைட்ரிக் ஆல் கஹால் (trihydric alcohol) என்றும், அதற்கு மேற் பட்ட எண்ணிக்கையில் ஹைட்ராக்சில் தொகுதிகள் இருந்தால் அலை பல்ஹைட்ரிக் ஆல்கஹால் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள், CH,OH, C,H,OH ஒற்றை ஹைட்ரிக் ஆல்கஹால் HOCH,-CH,-CH,OH - இரு ஹைட்ரிக் ஆல்கஹால் HOCH,-CHOH-CH,OH - மூ ஹைட்ரிக் ஆல்கஹால் HOCH,-(CHOH},-CH,OH - பல் ஹைட்ரிக் ஆல்க ஹால் என்பனவாகும். இவற்றில் ஒற்றை ஹைட்ரிக் ஆல்கஹால்களை மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஹைட்ராக்சில் தொகுதி இணைக்கப் பட்ட கரியணு நேரடியாக மற்றொரு கரியணுவுடன் இணைந்திருந்தால் அது ஓரிணைய ஆல்கஹால் (primary alcohol) என்றும், ஹைட்ராக்சில் தொகுதி அமைந்திருக்கும் கரியணு இரு கரியணுக்களுடன் இணைந்திருந்தால் அதுஈரிணைய ஆல்கஹால் (secondary alcohol) என்றும் அதுவே மூன்று கரிய ணுக்களுடன் இணைந்திருந்தால் அது மூவிணைய ஆல்கஹால் (tertiary alcohol) என்றும் பெயரிடப் படுகின்றன. கீழே எடுத்துக்காட்டுகள் உள்ளன. CH,CH,CH,CH₂OH HC, CH-CH₂OH CH₂ ஓரிணைய ஆல்கஹால் ஈரிணைய ஆல்கஹால்