உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்டிரின்‌, எட்வின்‌ யூகின்‌ 178

178 ஆல்டிரின், எட்வின் யூகிள் வினைகள் (aldol condensation reactions) TEST பெயர். H HH HHH B CH -CaO+H-C-C=O–CH, - C - C - Cao H ÔH H அசெட்டால்டிஹைடு 3 -ஹைட்ராக்சி பியூட்டனால் (ஆல்டால்) புரொப்பியோனால்டிஹைடு (propionaldehyde) இவ்வினைக்கு உட்படுத்தப்பட்டால் 3-ஹைட்ராக்சி 2- மெத்தில் பென்டனால் கிடைக்கிறது. அசெட் டோன் இவ்வினைபுரிந்து டைஅசெட்டோன் ஆல்கஃ ஹாலைக் கொடுக்கிறது. இவ்வாறு கிடைக்கும் பீட்டா-ஹைட்ராக்சி ஆல்டிஹைடு அல்லது பீட்டா ஹைட்ராக்சி கீட்டோன்களிலிருந்து நீரின் மூலக்கூறு பிரிந்து வெளியேறுவதால் குரோட்டனால்டிஹைடு (crotonaldehyde) போன்ற இரட்டைப் பிணைப் புள்ள அடைபடாச் சேர்மங்கள் (unsaturated com- pounds) கிடைக்கின்றன. ஆல்டால் குறுக்க வினை நடக்க வேண்டுமென் றால் ஆல்டிஹைடு அல்லது கீட்டோனில் ஆல்ஃபா ஹைட்ரஜன் அணு (a-hydrogen atom) இருக்க வேண்டும். Ar CHO, (CH,), C-ChO, ArCOAr, ArCOCR போன்ற பொது வாய்பாடுகளைக் கொண்ட சேர்மங்களில் ஆல்ஃபா-ஹட்ரஜன் அணுக் கள் கிடையா. எனவே இவை ஆல்டால் குறுக்கு வினைக்கு உட்படுவதில்லை. இவ்வினைகளில் ஆல்டிஹைடு அல்லதுகீட்டோன் களில் உள்ள கார்போனைல் தொகுதி (carbonyl) group) இரு வகைகளில் செயல்படுகிறது. கூட்டு வினை ஏற்பட வழி செய்ய அடைபடாப் பிணைப் பைக் கொடுப்பதுடன், ஆல்ஃபா ஹைட்ரஜனையும் அமிலத்தன்மை உடையதாகச் செய்து கரிமஎதிரயனி carbanion) உண்டாக வழி செய்கிறது. புதுக் கரிமச்சேர்மங்களைத் தயாரிக்கும் தொகுப்பு முறைகளில் (synthetic methods) ஆல்டால் குறுக்க வினை பயன்படுகிறது. இவ்வினைகளில் கிடைக்கும் ஆல்டாலை நீர் அகற்றி, கிடைக்கும் ஆல்ஃபா, பீட்டா அடைபடா ஆல்டிஹைடு அல்லது கீட்டோன் களை வினையூக்க ஹைட்ரஜனேற்றத்திற்கு உட்படுத் தினால் கார்போனைல் தொகுதியிலும் கரி-கரி இரட் டைப் பிணைப்பிலும் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து i பியூட்டனால் போன்ற சேர்மங்கள் கிடைக்கின்றன. - இரு மாறுபட்ட கார்போனைல் சேர்மங்களி டையே நிகழும் ஆல்டால குறுக்க வினையால் நான்கு விதமான விளைபொருள்கள் கிடைக்க வாய்ப்புண்டு. ஒலிஃபீன்களையும் (olefines) சேர்த்து எட்டு வித விளைபொருள்கள் கிடைக்கும். ஏதேனும் ஓர் ஆல்டிஹைடு மூலக்கூறில் ஆல்ஃபா ஹைட்ரஜன் இலலாவிட்டால் இரண்டு ஆல்டால்கள் மட்டுமே கிடைக்கும். இந்தக் குறுக்கீட்டு ஆல்டால் வினை களுக்குப் பொதுவாக, கிளைசன் ஸ்கிமிட் (Claisen- Schmidt) வினை என்று பெயர். நூலோதி பி.எஸ்.எம். கண்ணன் Finar I.L., Organic Chemistry, Vol I, Sixth Edition, ELBS, London, 1973. ஆல்டிரின், எட்வின் யூகின் விண்வெளிக்கலப்புறச் செயல்பாடுகளில் வல்ல இவர் நிலவில் நடந்தவருள் இரண்டாமவர். 1930 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 20 ஆம் நாளன்று அமெரிக்க ஒன்றிய நாட்டில் உள்ள மான்கிளேர் என்னுமிடத்தில் பிறந்தார். ஆல்டிரின் நியூயார்க்கில் உள்ள அமெரிக்க ஒன்றிய நாட்டுப் படைக் கல்விக் கழகத்தில் (War Academy), 1951 இல் பட்டம் பெற்றார்.பிறகு வான்படை வலவர் ஆனார். இவர் கொரியாவில் 66 அதிரடிப் படையெடுப்பு களை நிகழ்த்தினார். மேற்கு ஜெர்மனியில் பணிபுரிந் தார். 1963 இல் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மசாசூசட் தொழில் நுட்பக் கழகத்தில் முனைவர் (Ph. D.,) பட்டம் பெற வட்டணை இயக்கவியல் (Orbital dynamics) பற்றிய ஆய்வுரையை எழுதினார். அடுத்த ஆண்டே இவர் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். 1966ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 11ஆம் நாளன்று ஜேம்ஸ் ஏ. லோவலுடன் ஜெமினி-12 இன் நான்கு நாள் விண்வெளிப் பயணத்தில் கலந்து கொண்டார். இவர் 51 மணி நேரம் விண்வெளியில் நடந்து, வெற்றிடத்தில் மனிதன் திறம்படச் செயல் பட முடியும் என்பதை நிறுவினார். ஆல்டிரின், நீல்