உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்டிஹைடுகள்‌ 179

ஆல்டென் ஆர்ம்ஸ்டிராங்க், மைக்கேல் காலிசுன் ஆகியோர்களால் ஓட்டப்பட்ட அப்பொல்லோ-11 1969 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 16 ஆம் நாளன்று விண்ணில் ஏவப்பட்டது. நான்கு நாள் கழித்து ஆர்ம்ஸ்டிராங்கும் ஆல்டிரினும் நிலவில் உள்ள மேர் டிராங்குவிலிட்டீசுக்கு அருகில் இறங் கினர். நிலவின் மேற்பரப்பில் இரண்டு மணிநேரம் இருந்தனர். அப்போது கல் மாதிரிகளையும் ஒளிப் படங்களையும் எடுத்தனர்; மேலும் சோதனைகள் செய்ய அறிவியல் கருவிகளை நிறுவியபின்னர் காலின்சுடன் கட்டளைக் கலத்தில் இணைந்தனர். ஜூலை 24 ஆம் நாளில் பசிபிக் பெருங்கடலில் பாது காப்பாக இறங்கி பயணத்தை முடித்தனர். 1971 ஆம் ஆண்டு ஆல்டிரின் தேசீய வான் துறை, விண்வெளித்துறை நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றதும் எட்வர்ட்சு நகர வான்படையக வான், விண்வெளி ஆராய்ச்சி வலவர்ப் பள்ளியின் கட்டளை வலவர் (Commandant) ஆனார். 1972 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் வணிகம் தொடங்க வான் படையிலிருந்து விலகினார். "புவிக்குத் திரும்பி னோம்" என்ற வாழ்க்கைக் குறிப்பு நூலை எழுதி யுள்ளார். ஆல்டிஹைடுகள் உலோ. செ. R.CHO என்ற பொதுவான அமைப்புக் குறியீட்டைக் கொண்ட சேர்மங்கள் ஆல்டிஹைடுகள் (aldehydes) என்று வழங்கப்படுகின்றன. ஃபார்மால்டிஹைடு, ஆல்டிஹைடு வரிசையில் முதலாவது ஆகும். R ஆல்டிஹைடுகள் 179 என்பது ஹைட்ரோகார்பன் உறுப்புக்களாகவோ, பதிலீடு செய்யப்பட்ட ஹைட்ரோகார்பன் தொகுதி களைக் கொண்டவையாகவோ இருக்கலாம். ஆல்டி ஹைடுகளுக்கும் கீட்டோன்களுக்கும் நிரம்ப ஒற்றுமை யுண்டு. னெனில் இரண்டிலும் கார்போனைல் தொகுதி (C=0) இருக்கின்றது. கீட்டோன்களில் கார்போனைல் தொகுதி இரண்டு அல்க்கைல் அல்லது அரைல் தொகுதிகளுடன் இணைந்திருக்கிறது. ஆல்டி ஹைடுகளின் அதிக வேதிலினைபுரியும் தன்மையால் இவை ரெசின், கரைப்பான், சாயங்கள், மருந்துகள். ஆகியவற்றைத் தயாரிப்பதற்கு முக்கியமான இடை நிலைப்பொருளாக (intermediate) உள்ளன. சிலசிறப் பான ஆல்டிஹைடுகளின் பெயர்களும், வாய்பாடு களும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இயல்புகள். அறைவெப்பநிலையில் ஃபார்மால்டி ஹைடு ஒரு நிறமற்ற வளிமம். தொழில் முறையில் இதனை 37 விழுக்காட்டு நீர்ம நிலையிலோ, இதன் பலபடியான பாராஃபார்மால்டிஹைடாகவோ (CH,O), பயன்படுத்துகிறார்கள். குறைந்த மூலக் கூறு எடை கொண்ட மற்ற ஆல்டிஹைடுகள் நீர்மமா கவும், பொதுவாக எரிச்சல் ஊட்டக்கூடிய நெடி கொண்டவையாகவும் உள்ளன. அடைபடா ஆல்டி ஹைடுகளான (unsaturated aldehydes} அக்ரோலீ னும், குரோட்டானால்டிஹைடும் கண்ணுக்கு மிகுந்த எரிச்சலூட்டிக் கண்ணீர் வரவழைக்கும் தன்மை கொண்டவை. வேதிப்பண்புகள் ஆக்சிஜனேற்றம். ஆல்டிஹைடுகள் காற்று, ஆக்சி ஜன், ஹைட்ரஜன், பெராக்சைடு, நைட்ரிக் ஆக் சைடு, பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு முதலிய பல அட்டவணை. ஆல்டிஹைடுகளின் பெயர்களும் அட்டவணைகளும் எண் சேர்மம் வாய்பாடு கொதிநிலை 1. ஃபார்மால்டிஹைடு HCHO -19°C 2. அசெட்டால்டிஹைடு CH,CHO 20.2°C 3. 4. 5. அசெட்டால் - பியூட்டிரால்டிஹைடு CH,CHOHCH, CHO 103-104°C புரொப்பியோனால்டிஹைடு C,H CHO 48.8°C CHỊ(CH,), CHO 75.7°C 6. ஜசோபியூட்டிரால்டிஹைடு (CH,),CHCHO 65°C 7. அக்ரோலின் CH,CH=CHCHO 52.7°C 8. குரோட்டானால்டிஹைடு CHỊCH=CHCHO 102°C 9. குளோரால் CC1, CHO 97.7°C 10. குளோரால் ஹைட்ரேட்டு CCI, CH(OH), 97.5°C 11. பென்சால்டிஹைடு C.H CHO 170°C 12. சின்னமால்டிஹைடு CHCH=CH-CHO 248°C