உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ஆல்டிஹைடு பதனிடுதல்‌

182 ஆல்டிஹைடு பதனிடுதல் பயன்கள். ஆல்டிஹைடுகள் கரைப்பான்களா கவும், பலபடிவுகளாகவும், வாசனைப் பொருள்களா கவும், இடைநிலைப் பொருள்களாகவும் தொழில் துறையில் பயன்படுகின்றன. உடலியல் வினை களிலும் (physiological proess) ஆல்டிஹைடுகள் பங்கேற்கின்றன. எடுத்துக்காட்டாக ரெட்டினால் எனப்படும் விட்டமின் 'ஏ' கண்பார்வை நன்றாகத் தெரிவதற்கு உதவுகிறது. பிரிடாக்சால் பாஸ்ஃபேட் pyridoxal phosphate) விட்டமின் B.யின் ஒரு வகை யாகவும் விளங்குகிறது. ஃபார்மால்டிஹைடு, ஃபார் மோலினாக (formalin, 40% நீரிய ஃபார்மால்டி ஹைடு கரைசல்) புரோட்டின் நிறைந்த பொருள்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பொருளாகப் (preservative) பயன்படுகிறது. பாரால்டிஹைடு மருத்துவத்தில் அமைதியூட்டியாகப் (sedative) பயன் படுகிறது. குளோரால் டி.டி.ட்டி (DDT) தயாரிக்க பென்சால்டிஹைடு, (vanillin) வேனிலின் வும் முதலியவை வாசனைப் பொருள்களாகவும் பயன் படுகின்றன. நூலோதி எஸ்.பி. சீனிவாசன் Finar I.L., Organic Chemistry, Vol I, Sixth Edition, ELBS, London, 1973. ஆல்டிஹைடு பதனிடுதல் ஆல்டிஹைடுகள் (aldehydes) பல ஆண்டுக் காலமா கப் பதனிடு பொருள்களாகப் பயன்படுகின்றன. நடைமுறையில் மற்ற பொருள்களோடு சேர்த்தே இவை பயன்படுத்தப்படுகின்றன. 1898ஆம் ஆண்டு பேயினி (Payeni) என்பவரும் புல்மன் (Pullman) என்பவரும் ஃபார்மாலிடிஹை டைப் பதனிடு பொருளாகப் பயன்படுத்தும் முறை குறித்துப் பதிவுரிமம் (patent) பெற்றார்கள். அதன் பிறகு பல ஆய்வாளர்கள் இவற்றின் செயல் குறித் தும் ஆய்வு நடாத்தியுள்ளார்கள். பல்வேறுபட்ட ஆல்டினஹ்டுகளின் தன்மை பற்றியும் அவற்றைப் பதனிடு பொருளாகப் பயன்படுத்த இயலுமா என் பது பற்றியும் அப்படிப் பதனிடுவதால் பெறப்படும் சிறப்புத் தன்மைகள் பற்றியும் விரிவாக ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றின் பலனாக ஆல்டிஹை டுகளைக் கொண்டு பதனிடும் முறைகள் பல கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆய்வுகளின் முடிவுகள் இவற்றை மற்றைய பதனிடு பொருளோடு இணைத்துக் கூட்டாகப் பதனிடப் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கின்றன. இவற்றில் மிகவும் சிறியது ஃபார்மாலிடிஹைடு (formaldehyde) ஆகும். ஃபார்மாலிடிஹைடு பல ஆண்டுக்காலமாகப் பத னிடு பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. நடை முறையில் மற்றைய பொருள்களோடு சேர்த்தே இது வும் பயன்படுத்தப்படுகிறது. ஃபார்மாலிடிஹைடு 40 விழுக்காடு உள்ள கரை சல் ஃபார்மலின் (formalin) என்றும் ஃபார்மோல் (formol) என்றும் அழைக்கப்படும். இதற்குக் கிருமி களைக் கொல்லும் திறன் அதிகமாக உண்டு. தோல் உற்பத்தியின்போது பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இதற்குத் தோலினைப் பதனிடும் தன்மை உண்டு. பதனிடு செயலும் விரை வாக நடைபெறும். நீர்மத்தின் பி.எச். அளவு அதிக மாக இருந்தால், பதனிடு செயல் அதிகமாக நடை பெறும். பி.எச். அளவு சுமார் 7-ஆக இருந்தால் பதனிடுதல் நல்லமுறையில் நடைபெறும். இதைக் கொண்டு பதனிடுவதால், தோலின் சுருங்கும் வெப்பநிலை ஏறத்தாழ 32°C அளவு உயரும். பெரும்பாலும் உலோகப் பதனிடு பொருள்க ளான குரோமியம் (chromium), அலுமினியம் (alu- minium) முதலியவற்றோடு முன்பதனிடு பொருளா கவோ, பின்பதனிடு பொருளாகவோ இது பயன் படுத்தப்படும். பதனிட்ட தாவரத் தோலைப் பின் பதனிடவும் பயன்படுத்தப்படுகிறது. விரைவு முறைப் படிப் பட்டைப் பதனிடும் தோல்களைப் ஃபார்மா லிடிஹைடு கொண்டு முன்பதனிட்டால் குறைந்த பயன்தரும் என்று கூறப்படுகிறது. ஃபார்மாலிடி ஹைடு குறைந்த அளவே தோலின் எடையைவிட அதிகரிக்கும். கொண்டு பதனிடும் ஃபார்மாலிடிஹைடு பொழுது நீர்மத்தில் செறிவு, பி.எச். அளவு, பதனி டும் கால அளவு முதலியன கவனிக்கப்பட வேண்டி யவையாகும். குளுட்டரால்டிஹைடு (gluteraldehyde). அண் மைக்கால ஆய்வுகளின் பலனாக இதனைப் பதனிடு பொருளாகப் பயன்படுத்த இயலும் என்று அறியப் பட்டுள்ளது. இது மிகவும் சிறந்த பதனிடு பொரு ளாகும். இதனைக் கொண்டு பதனிட்டால் கருமை யான மஞ்சள் நிறமுடைய தோல்கள் கிடைக்கும். குரோமியப் பதனிட்ட தோல்களையும் தாவரப் பதனிட்ட தோல்களையும் மீண்டும் பதனிட இதைப் பயன்படுத்தலாம். இந்தத் தோல்கள் வேதியியல் பொருள்களால் பாதிக்கப்படுவதில்லை. இந்தத் தோல்கள் அதிகமான வியர்வைக் காப்பு உடைய வையாகவும், கழுவும் தன்மையுடையனவாகவும் இருக்கின்றன. குரோமியப் பதனிட்ட தோல்களை மீண்டும் பதனிட இதனைப் பயன்படுத்தலாம். அப்படிப் பத னிட்ட தோல்கள் என்றும் சிறந்த தன்மைகள் உடை யனவையாக இருக்கின்றன என்று அமெரிக்காவில் செய்த ஆய்வுகள் மூலம் அறிந்துள்ளனர். கோட்பாடு. இவை புரதப் பொருளுடன் வேதி