உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்டோஸ்ட்டீரோன்‌ 183

யியல் முறையில் செயல்பட்டு இணைகின்றன. புரதப் பொருளில் உள்ள விடுபட்ட அமைனோ பிரிவுகளு டன் இவை செயல்படும். செய்முறை. தோல்களைத் தகுந்த முறையில் பத னிடாவிடில், தோல்களைச் சேமித்து வைக்கும் போது அவை நொறுங்கிவிடும்; எளிதில் முறியத் தக்கவையாக இருக்கும். நீர்மத்தில் பி.எச். அளவு சுமார் 7-ஆக இருக்கும் போது பதனிட்டால் நல்ல தோல் கிடைக்கும். பி.எச். அளவு 9-க்கு மேல் போனால், இலை நார்கள் பருத்துவிடும். இந்த நிலையில் பதனிட்டால் தோல்கள் கடினமாகவும் உடையும் தன்மை உடையவையாகவும் இருக்கும். பி.எச். அளவு மிகவும் குறைவாக இருந்தால் தோல் கள் பதனிடப்படாமல் இருக்கும். பதனிடும்பொழுது உப்புகளைப் பயன்படுத்தினால் அவை தோல்களைப் பருக்காமல் இருக்க உதவி புரியும். பொதுவாக நடைமுறையில் பேட்டு செய்த தோல்களைப் பி.எச்.அளவு சுமார் 7.0 உள்ள ஃபார் மாலிடிஹைடு நீர்மத்தில் இரவு முழுவதும் நனைத்து வைத்துப் பதனிட வேண்டும். பிறகு இவற்றை நீர்த்த சோடியம் கார்பனேட்டு (sodium carbonate) நீர்மத்தைக் கொண்டு கழுவி, எண்ணெய்க் குழம்பு ஊட்ட வேண்டும். முடித்தோல்கள் தயாரிக்கவும் தோல் காகிதங் கள் அல்லது பதுமைத் தோல்கள் (parchment leathers) தயாரிக்கவும் இதனைப் பயன்படுத்த இயலும். தற்காலத்தில் ஃபார்மாலிடிஹைடு அல்லது குளுட்டரால்டிஹைடு முதலியவற்றைப் பயன்படுத் திப் பதனிடப்படும் முறைகள், ஆல்டிஹைடு தோலில் உள்ள புரதப் பொருளுடன் இணையும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவனவாகும். இவை மென்மையான தோல்களை ளத் தரும். நூலோதி பழ.முத்தையா முத்தையா, பழ., தோல் பதனிடும் முறைகள் பற்றிய அறிவியலும் தொழில் நுணுக்கமும், தமிழ்நாட் டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1978. ஆல்டோஸ்ட்டீரோன் குறைபாடு ஆல்டோஸ்ட்டீரோன் (aldosterone) உடலுக்கு. இன்றியமையாத தாதுப்பொருள்களைச் சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும் ஒரு முக்கியமான ஹார் மோனாகும் (hormone). மினரலோகார்ட்டிகாய்டு (mineralocorticoid) வகையைச் சார்ந்த ஆல்டோஸ்ட் டீரோன், சோடியம் தாதுவைத் தக்க வைப்பதில் கார்ட்டிசாலைவிட (cortisol) ஆயிரம் மடங்கும், 11- ஆல்டோஸ்ட்டீரோன் குறைபாடு 183 டிஸ்ஆக்சிகார்ட்டிசோனை (11-desoxycortisone) விட 35மடங்கும் ஆற்றல் மிக்கது. உடலில் தினமும் மொத் தம் சுரப்பது 50முதல் 250 மைக்ரோகிராம் ஆகும். நமது உடலில் உள்ள இரத்தமட்ட ஆல்டோஸ்ட்டீ ரோன் அளவு 5-115 நா.கி/டெ.லி. (ng/dl} ஆகும். மொத்தச் சுரப்பில் 75% கல்லீரலில் அழிக்கப்பட்டு விடுகிறது. ஆல்டோஸ்ட்டீரோனை உடலில் செலுத் தியபின், உடலில் உள்ள உயிரணுவின் வெளிநீர் (extracellular fluid) அளவும் இரத்த ஓட்டமும் மிக, அதனால் சிறுநீர்ச் சுரப்பு அதிகமாகிறது. இரத்த அழுத்தமும் அதிகரிக்கின்றது. ஆல்டோஸ்ட்டீரோன் அண்ணீரகப் புறணியால் சுரக்கப்படுகிறது. இச்சுரப்பியின் அளவு உடலின் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கும் அல்லது குறையும் பந்துருவத் தந்துகிகளை அடுத்த பகுதியில் (Juxta glomerul apparatus) சிறுநீரக (kidney) இரத்த அழுத் தம் குறைந்துவிடுகிறது. அதனால் ஜக்ஸ்ட்டா குளோ மரூலர் உயிரணுக்கள் அதிக அளவில் ரெனினை (renin) வெளியேற்றுகின்றன. ரெனின் ஆஞ்சியோ டென்சினில் (Angiotensin) வேலை செய்து ஆஞ்சி யோடென்சின் I ஐ உண்டாக்குகிறது. இந்த ஆஞ்சி யோடென்சின் I,II ஆக மாறி அட்ரினல் சுரப்பியில் உள்ள ஜோனோ குளோமரூலோசாவில் வேலை செய்து ஆல்டோஸ்ட்டீரோனை வெளியேற்றுகிறது. ஆல்டோஸ்ட்டீரோன் சிறுநீரக நுண் குழாய்களில் (renal tubules) வேலை செய்து சோடியத்தை உட் சேர்க்கவும், பொட்டாசியத்தை வெளியே தள்ளவும் செய்கின்றது. அதனால் இரத்த அழுத்தம் சரியாகி ரெனின் சுரப்பது குறைகிறது. ஆல்டோஸ்ட்டீரோன் குறைதலில் குளுகோகார்ட்டிகாய்டும், மினரலோ கார்ட்டிகாய்டும் சேர்ந்தே குறைந்து இருக்கும். நோய் அறிகுறிகள். பசியின்மை, குமட்டல், களைப்பு, சோர்வு, வாய், வயிறு,கை,கால் ஆகிய உடலுறுப்புகள் கருநிறமடைதல், உடல் மெலிதல், குறைந்த இரத்த அழுத்தம், வயிற்றுவலி, அதிக உப்பு உண்ணுதல், வயிற்றுளைச்சல், மயக்கம் ஆகி யவை இந்நோயின் அறிகுறிகளாகும். திடீரென்று உண்டாகும் அண்ணீரகக் குறைபாடு. அறுவை சிகிச்சைக்குப் பிறகோ, நுண்ணுயிரிகளால் ஏற்படும் சேதத்திற்குப் பிறகோ அண்ணீரகக் குறை பாடு ஏற்படலாம். பசியின்மை, வாந்தி, வயிற்றுவலி, காய்ச்சல், மயக்கம், குறைந்த இரத்த அழுத்தம் முதலியவை இதன் அறிகுறிகளாகும். ஆல்டோஸ்ட்டீ ரோன் மட்டும் தனித்துக் குறைந்து காணப் படுதல் அரிது. காணப்படும் நோய்க்கூறுகள், ரெனின் மிகக் குறைந்து சுரத்தல், பிறவியிலேயே ஆல்டோஸ்ட்டீரோன் சுரத்தல் இயலாது போதல், அறுவை சிகிச்சையில் ஆல்டோஸ்ட்டீரோன் சுரக்கும் பகுதிகளை எடுத்துவிடுதல், மூளையில் முன் டெக்டல் (pretectal) பகுதியில் நோய், நீண்ட காலம் ஹெப்