உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 ஆல்டோஸ்ட்டீரோன்‌ மிகை

184 ஆல்டோஸ்ட்டீரோன் மிகை பாரின் (heparin) மருந்து செலுத்துதல், எழுந்து நிற்கும்போது இரத்த அழுத்தம் குறைந்து இருத்தல் (Orthostatic hypotension) முதலியனவாகும். அறிகுறிகள். உப்பைக் குறைவாக உட்கொள்ளும் போது ஆல்டோஸ்ட்டீரோன் சுரப்பு அதிகரிக்க வேண்டும். இத்தகு நோய் நிலைகளில் சுரப்பு, கூடி வருவதில்லை. இரத்தத்தில் பொட்டாசியம் கூடி இருக்கும் பொதுவாக 5 மில்லி சமமான எடைக்கு (5mEq) இருப்பதைவிட அதிகமாக இருக்கும். சிறு நீரில் சோடியம் அதிகமாக வெளியேறிக் கொண்டே இருக்கும். சிறப்பான நுணுக்கங்கள். ரெனின் ஆல்டோஸ்ட்டீ ரோன் குறைந்து வாலிபப் பருவத்திய சிறுநீரக நோயோடு சர்க்கரை நீரிழிவு நோய் கூடி (renal failure + diadetes mellitus) உடலில் அமிலச் ச சத்து (metabolic acidosis) தென்படும்போது ஆல்டோ ஸ்ட்டீரோன் குறைபடுவதைக் காணலாம். ரெனின் குறைவு ஏன் ஏற்படுகிறது என்று தெளிவாகக் கூற இயலாது. அநேகமாக சிறுநீரகக் கோளாறினால் இருக்கலாம். ஒரு சிலருக்கு அண்ணீரகப் புறணியின் வளர்சிதை மாற்றத்தில் தென்படும் குறைபாட்டால் (biosynthetic defect) ஆல்டோஸ்ட்டீரோன் குறை படலாம். மருத்துவம்.ஆல்டோஸ்ட்டீரோன் குறைபாட்டை மருந்து மூலம்தான் சரிசெய்ய இயலும். 9-புளுரோ கார்ட்டிசோன் (9- pleurocortisone) 1-2 மி.கி. தினமும் மாத்திரையாகச் சாப்பிட வேண்டும். ரெனின் குறைவு உள்ளவர்களும், ஆல்டோஸ்ட்டீ ரோன் குறைவு உள்ளவர்களும் உப்பு அதிகமான அளவு உட்கொள்ள வேண்டும்; டி ஆக்சி கார்ட்டி கோஸ்ட்டீரோன் அசட்டேட்டு (desoxy corticos- trone acetate) 2.5 மி.லி. ஊசி மூலம் உடலுள் செலுத்தப்பட வேண்டும். நூலோதி அ. துரைராஜ் 1. ததாரினோவ், வி., மனித உடற்கூறு இயலும், உடல் இயங்கு இயலும், மீர் பதிப்பகம், மாஸ்கோ, 1980. 2. Romanes, G.J., Gunningham's Text Bock of Anatomy, Oxford University Press, New York, 1981. ஆல்டோட்ஸ்டீரோன் மிகை அண்ணீரகச் சுரப்பிகளிலிருந்து (adrenals) ஒரு புதிய ஹார்மோன் 1954 ஆம் ஆண்டு, சிம்சன் (Simson) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அண்ணீரக ஹார்மோன், மிகவும் ஆற்றலுடன் உடலின் திசுக்களுடைய மின்பகுளி (Electrolyte) விகிதத்தை மாற்றும் ஆற்றல் கொண்டமையால், எலெக்ட்டிரோ கார்ட்டின் (electrocortin) என்றும் பிறகு ஆல்டோஸ்ட்டீரோன் என்றும் அழைக்கப் படுகிறது. ஆல்டோஸ்ட்டீரோன் மிகைப்பினால் (hyperaldosteronism) உண்டாகும் இரத்த அழுத்த மிகைப்பு (hypertension), பொட்டாசியம் கழிவு (potassium wastage), அண்ணீரகக் கட்டி (adenoma of adrenals ) முதலியவற்றை 1955ஆம் ஆண்டு கான் (Conn) விரிவாக ஆய்ந்து அறிந்ததால் அதைக் கான்நோய்த் தொகுதி (Conn syndrome) என்றும் கூறுவர். உடலியங்கியல். ஆல்டோஸ்ட்டீரோன் சுரக்கக் கூடிய அண்ணீரகத் திசுக்களின் ஆற்றலை உடல் தேவைக்கேற்றவாறு கண்காணிப்பவை ரெனின் ஆஞ்ஜியோடென்சின் (cenin angiotensin system), பொட்டாசியம் அளவு (potassium content) ஹார் மோன்கள் (ACTH) பரிவு நரம்பு அளவு இயக் கம் ஆகியவை. இரத்த ஓட்டம் மூலம் உட லெங்கும் பரவும் ஆல்டோஸ்ட்டீரோன், இதுவரை கண்டு பிடிக்கப் பட்டவைகளிலேயே ஆற்றல் மிக்க கனிம ஹார்மோனாகும் (mineralo corticoid). ஆல்டோஸ்ட் டீரோன் சிறுநீரக நுண் குழாய்களிலிருந்து (renal tubules), சோடியம் அயனிகளை உறிஞ்சவும் பொட் டாசியம் அயனிகளை வெளியேற்றவும் செய்கிறது. ஆல்டோஸ்ட்டீரோன் மிகைப்பு ஏற்படுவதால், உட லில் சோடியம் தாது மிகுந்து, பொட்டாசியம் குறைந்துவிடுகிறது. உடலின் தண்ணீர் விகிதம் மிகு வதுடன், வளர்சிதை மாற்றக் காரமிகுந்தன்மை (metabolic alkalosis) ஏற்படுகிறது. ஆல்டோஸ்ட்டீ ரோன் உடலின் வியர்வைத் துளிகள், உமிழ்நீர், ரைப்பை நீர் போன்றவற்றின் சோடியம் அள வைக் குறைத்து, பொட்டாசியம் அளவினை அதிக ரித்துவிடுகிறது. ஆல்டோஸ்ட்டீரோன் மிகைப்பினால் இரத்த அழுத்த அதிகரிப்பு அல்லது உடல்நீர் சேர்வி னால் வீக்கம் (oedema) உண்டாகின் றது. ஆல் டோஸ்ட்டீரோனின் விளைவு, கார்டிசால் (cortisol), கார்ட்டிகோஸ்ட்.டீரோன் (corticosterone), புரோ ஜெஸ்ட்டீரோன் (progesterone), பிராடிகினின் (bradikinin) முதலிய மற்ற ஹார்மோன்களுடன் சேர்ந்து திசுக்களின் சக்திகளை ஊக்குவிப்பதே. முதற்படி ஆல்டோஸ்ட்டீரோன் மிகை. அண்ணீரகப் புறணியின் மாறுபட்ட இயக்கத்தால் ஆல்டோஸ்ட் டீரோன் மிகைப்பு ஏற்படின், அது முதற்படி ஆல்டோஸ்ட்டீ ரோனிஸம் (primary hyperaldoster- onism). என்று அழைக்கப்படும். இந்த நோயின் ஆல்டோஸ்ட்டீரோன் மிகைப்புக்குரிய காரணங் கள்: ஒரு அண்ணீரகக் கட்டி 80%; இருபக்க அண் ணீரகச் சுரப்பியின் பெரு வளர்ச்சி (bilateral adrenal hyper plasia) அண்ணீரகப் புற்றுநோய் (carcinoma); பிட்யூட்டரி (ACTH) அதிசுரப்பால் விளையும் அதி