உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்டோஸ்ட்டீரோன்‌ மிகை 185

அண்ணீரக வளர்ச்சி முதலியன. கடந்த முப்பது ஆண்டுகளின் ஆராய்ச்சியால் ஆல்டோஸ்ட்டீரோன் மிகை இரத்த அழுத்த நோயில் முக்கிய பங்கு (20-30%) வகிக்கக்கூடும் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உரிய மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை முறைகளால், ஆல்டோஸ்ட்டீரோன் மிகை குணப்படுத்தப்படின், இரத்த அழுத்த நோயும் மறைந்து விடும் அல்லது குறைந்துவிடும். நோயின் அறிகுறிகள். ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவர்கள் 100mg சோடியம் கலந்து உணவு உட்கொண்டு வரும் நிலையில், உடலில் நாளொன் றுக்கு 50 முதல் 200 மைக்ரோக்ராம் (microgram) உரை ஆல்டேஸ்ட்டீரோன் சுரந்து வருகிறது. இரத்த ஒட்டத்தில் ஆல்டோஸ்ட்டீரோன் 5 முதல் 15 நானோ கிராம் (nanogram) 100 மி. லி. அளவு காணப்படும். ஆல்டோஸ்ட்டீரோன் மிகையினால் ஏற்படும் நோய்க் குறிகளில் இரத்த அழுத்த மிகைப்பு, பொட்டாசியம் குறைவு, ஆல்கலோஸிஸ் (hypolalemic alkalosis), உடல் தளர்ச்சி,சிறுநீர்ப்போக்கு (polyuria). முறை நரப்பிசிவு (tetany), கைகால் மதமதப்பு முதலியன முக்கியமானவை. இவற்றோடு அதிசோர்வு இதய நிறுத்தம் (cardiac failure), நாடித்துடிப்பு மாறு பாடு (arrhythmias), தசைகளில் அயர்ச்சி (muscle weakness), சிறுநீர் வடிப்புகள் (diuretics), ஒவ்வாமை முதலியனவும் காணப்படும். தீங்கிழைக்கும் உக்கிர அதிஇரத்த அழுத்த நோய் (malignant hypertension) போன்றவை முதற்படி ஆல்டோஸ்ட்டீரோன் மிகை யினால் உண்டாவதில்லை. மிகை பரிசோதனைகள். இரத்தப் பரிசோதனையில், இரத்தத்தில் பொட்டாசியம் தாது குறைந்து, சோடி யம் கார அமில நிலை (pH), பைகார்பனேட்டு மிகுந்து இருக்கும். சிறுநீரின் ஒப்படர்த்தி (specific gravity) குறைந்து காணப்படும். நோய்வாய்ப்பட் டவரின் இரத்தப் பொட்டாசியம் 3.0 mEq/லி. அள விற்குக் குறைந்து அதேசமயம் சிறுநீர்ப் பொட்டா சியம் 30.0 mEq/24 மணிகள் அளவிற்கு மிகுந்து காணப்பட்டாலோ, உமிழ்நீரின் சோடியம் /பொட் டாசியம் விகிதம் 0.25க்குக் கீழே இருந்தாலோ அது முதற்படி ஆல்டோஸ்ட்டீரோன் என்று சந்தேகப்பட்டு நிரூபித்துவிட முயல் வேண்டும். புரத நீரிழிவு (proteinuria), பாக்ட்டீரியா நீரிழிவு (bacteriuria) முதலியன அதிகரித்துச் சிறு நீரகச் சீழ் அழற்சி (pyelonephritis) ஏற்பட்டுவிடும். இரத்தச்சர்க்கரை அளவு மிகுந்து, இரண்டாம் நிலை நீரிழிவு நோய் தோன்றும். இரத்த ஆல்டோஸ்ட்டீ ரோன் அளவு மிகுந்து, ரெனின் அளவு குறைந்து விடும் (plasma renin activity-1 ng/mi/ மணி). இந்தச் சிறப்பு ஹார்மோன் அளவுகளின் போது, உண வின் சோடியம் அளவையும் (150 mEq/24 மணிகள்) பொட்டாசியம் அளவையும் கட்டுப்படுத்திச் சிறுநீர் ஆல்டோஸ்ட்டீரோன் மிகை 185 வடிப்பி மருந்துகளை நிறுத்திவிடவும் வேண்டும். சிறந்தபரி சோதனைக் கூடங்களில், உடல் சோடியம் அளவினை அதிகரித்தோ (200 mEq உணவு) அல்லது குறைத்தோ (10 mEq உணவு) உண்டாகும் ஆல்டோ ஸ்ட்டீரோன் அளவு வேறுபாடுகளைக் கொண்டும், முதற்படி ஆல்டோஸ்ட்டீரோன் அளவு வேறுபாடு களைக்கொண்டும், முதற்படி ஆல்டோஸ்ட்டீரோன் மிகையினை உறுதி செய்து கொள்ளலாம். அண்ணீர கச் சுரப்பி கட்டியா அல்லது இருபக்கப்பெருவளர்ச் சியா என்று அறிந்துகொள்ள, டோமோகிராம் (Tomogram), அணு அலகீடு (CT scan), ஐசோடோப் அலகீடு isotope scan) அட்ரினல் சுரப்பி நாளங் களின் ஆல்டோஸ்ட்டீரோன் அளவு (percutaneous adrenal vein cannulation) போன்ற ஆய்வுகள் உதவு கின்றன. ஆல்டோஸ்ட்டீரோன் மிகை ஒரு கட்டியால் உண்டாகியிருந்தால், தகுந்த சிகிச்சை மூலம் இரத்த அழுத்த நோய் முழுதும் குணம் (80%) அடைய முடியும். இருபக்கப் பெருவளர்ச்சியால் ஆல்டோஸ்ட் டீரோன் மிகை ஏற்பட்டு இருந்தால், அறுவை சிகிச்சை முறையால் இரத்த அழுத்த நோயை நிரந் தரமாகக் குணமடையச் செய்ய முடியாது. இதனால் ஒவ்வொரு நோயாளியினுடைய அண்ணீரகச் சுரப்பி களின் இயக்கம். வசதிக்கேற்றவாறு தீவிரமாக ஆராயப்பட்டபின்பே, சிகிச்சை முறை மேற்கொள் ளப்படும். முதற்படியாக, ஆல்டோஸ்ட்டீரோன் மிகையை, மற்ற கோளாறுகளிலிருந்து பிரித்து அறிய வேண் பொட்டாசியம் டும். அவற்றில் முக்கியமானவை கழிவு ஏற்படுத்தும் மருந்துகள், சிறுநீர் போக்குவிப் பன, மலம் இளக்கிகள், உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள், தீவிரப்பட்ட இரத்த அழுத்த நோய். சிறுநீரக நோய்கள் (medullary cystic disease), ரெனின் சுரக்கும் கட்டிகள், பார்டரின் நோய்த் தொகுதி (bartter's syndrome) (இது பந்துருவத் தந்து கிகளையடுத்த உயிரணுக்களின் {juxta glomerular cells) அதிவளர்ச்சியால் விளைவது) அண்ணீரகச் சுரப்பி இயக்கக் கோளாறுகள் முதலியன. சிகிச்சை முறைகள். முதற்படி ஆல்டோஸ்ட்டீ ரோன் மிகைப்பு நோயைக் குணப்படுத்த உணவின் சோடியம் அளவைக் குறைத்து விடவேண்டும் (10 mEq/day). பொட்டாசியம் தாது மிகுந்த கனிகளை ஒதுக்கிவிட வேண்டும். ஸ்பைரானோலாக்டோன் (Spironolactone) மருந்து, ஆல்டோஸ்ட்டீரோன் விளைவுகளை முறியடிக்கும் வல்லமை பெற்றது. நாளொன்றுக்கு 300மி.கி. அல்லது 400மி.கி. ஸ்பைரா னோலாக்டோன் கொடுத்து வந்தால், அதிகப்பட்ட இரத்த அழுத்தம் குறைந்து, உடல் பொட்டாசியம் இழிவும் நீக்கப்பட்டு, 4 அல்லது 5 வாரங்களில் நோய்க் குறிகள் நீங்கும். அண்ணீரகச் சுரப்பிகளின் இருபக்க பெருவளர்ச்சி கார்ட்டிகோட்ரோஃபின் சார்பாக (ACTH dependant) இருப்பின், கார்டிஸால் (gluco-