உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ஆல்த்தியா ரோசியா

186 ஆல்த்தியா ரோசியா corticoids) மருந்து பயனளிக்கும். அட்ரினல் சுரப் பிக் கட்டி தீவிரப் பரிசோதனையில் வெளிப்பட்டால், சிகிச்சையால் கட் தகுந்த அண்ணீரக அறுவை டியை உடலிலிருந்து அகற்றிவிடலாம். இத்தகைய அண்ணீரகக் கட்டிகள் மிகச் சிறிய அளவுடையன (2 cm.size). அதனால் அண்ணீரகச் சுரப்பிக்குள் புதைந்து கிடக்கும் இக்கட்டிகள் நிதானமாக அறுவை சிகிச்சையின் போது ஆராய்ந்து அகற்றப் படவேண்டும். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் ஆல்டோஸ்ட்டீரோன் குறைவைத் தக்க அளவு சோடியம் தாதுவினால் மட்டுப்படுத்த முடி யும். இரத்த அழுத்தநோய் மிகை தொடர்ந்து இருந்தால் தகுந்த குறைக்கும் மருந்துகளை அளித்து இரத்த அழுத்த சில மாதங்களில் இரத்த நோயையும் குறைத்து விடுதல் நல்லது. பிற ஆல்டோஸ்ட்டீரோன் மிகைகள். ஆல்டோஸ்ட் டீரோன் ரெனின் இயக்கங்கள் மாறுபடுவதால், பல்வேறு நோய்கள் வெளிப்படும். இயல்பான இரத்த அழுத்த மிகை (Essential hypertension) நோய்வாய்ப்பட்டவர்களில், 30% பேருக்கு ரெனின் அளவு குறைந்திருக்கும் (low reninhyper- tension). சிறுநீரகக் கோளாறுகளாலும் ரெனின் மிகுந்து ஆல்டோஸ்ட்டீரோன் மிகைப்பு ஏற்பட்டு இரத்த அதி அழுத்த நிலை (high renin-hyperten- rion) உண்டாகும். உடல்நீர்ச் சேர்வு வீக்கம் ஏற் படுவதிலும், ஆல்டோஸ்ட்டீரோன் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆல்டோஸ்ட்டீரோன் விளைவுகளில் ருந்து தப்பிக்கும் நுட்பம் (escape mechanism) உட லில் ஏற்படாவிட்டால், உடல்நீர் அதிகரித்து, தாழ் லான உடற்பகுதிகளில் நீர்ச்சேர்வு வீக்கம் ஏற்படு கிறது. இதய இயக்கத் தளர்ச்சி (congestive cardiac failures), சிறுநீரகச் சிறு குழல் உயிரணுக்கள் பழுத டையும் மாறுபாடு (nephrosis), கல்லீரல் அரிப்பு நோய்கள், (cirrhosis of liver), கருக்கால நச்சேற் றம் (Toxemia of pregnancy) ஆகிய நோய்கள் இரண் டாம் நிலை ஆல்டோஸ்ட்டீரோன் மிகையை (secondary aldosteronism) ஏற்படுத்திவிடுகின்றன. இச்சமயங்களிலும் ஆல்டோஸ்ட்டீரோன் குறைக் கும் மருந்துகளால், உடல்நீர்ச் சேர்வு வீக்கத்தைக் குறைத்து விடலாம். நூலோதி வே. கண்ணன் 1. Guyton, Arthur C., Text Book of Medical Physiology, VIth Edition, W.B. Saunders Com - pany, London, 1981. 2. Brobeck, Jhon R., Best & Taylor's Physiological Basis of Medical Practice, Williams & Wilkins, Baltimore, 1981. ஆல்த்தியா ரோசியா ஹாலிஹாக் (Hollyhock) என்ற ஆங்கிலப் பெயரு டைய தோட்டங்களில் வளர்க்கப்படும் ஒருவகை எழில்செடிகளுக்குத் தாவரவியலில்ஆல்த்தியா ரோசியா Althaeo rosea Car.) என்று பெயர். இதன் தாய சும் சீனா என்று கருதப்படுகிறது. இது அல்லி இணையா இருவிதையிலைக் குடும்பமாகிய மால்வே சியைச் (malvaceae) சார்ந்தது. ஆல்த்தியா பேரினத் தில் ஏறக்குறைய 15 சிற்றினங்களுள்ளன. இவை பெரும்பாலும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் பேரளவில் பரவியிருந்தாலும் இரு சிற்றினங்கள் மட்டும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டுள்ளன. சிறப்புப் பண்புகள். இது 1 முதல் 3 மீ. உயரம்வரை வளரக்கூடிய செடி. இது இருபருவச் செடி biennial) என்று கூறப்பட்ட போதிலும் உண்மையில் இன்னும் குறுகிய காலம் வரை வாழும் செடியாகும். இலைகள் ஏறத்தாழ வட்ட வடிவிலோ இதய வடிவிலோ இருக் கின்றன; மாற்றிலை அடுக்க அமைவு கொண்டவை. தண்டும் இலைகளும் கேசங்களைப் பெற்றுச் சொர சொரப்பாக இருக்கும். மலர்கள் ரெசிம் (1aceme) மஞ் சரியில் அமைந்திருக்கின்றன; இவை பெரியலை; வெவ் வேறு அழகிய வண்ணங்களுடையவை ; ஆரச்சமச் சீரானவை; பூச்சிகளின் புல்லி வட்டத்திற்கு வெளியே புறப்புல்லி வட்டம் ஒன்று உள்ளது. இது 6 முதல் 9 புறப்புல்லி இதழ்களாலானது. அவை அடிப்பகுதி யில் மட்டும் இணைந்திருக்கும். புல்லிவட்டம்,அல்லி வட்டம் ஒவ்வொன்றிலும் முறையே ஐந்து இதழ்கள் டங்கியிருக்கின்றன. குட்டையான எண்ணற்ற மகரந் தத்தாள்கள் ஒற்றைக்கற்றையாக (monadelphous) ஒரு குழல் போன்ற அமைப்பில் நெருக்கமாக அமைந் திருக்கின்றன. மகரந்தப்பை ஓர் அறை கொண்டது. சிறு நீரக வடிவானது. சூற்பை, பல சூலக இலை களாலான, பல அறைகளைக் கொண்டது. ஒவ் வொன்றிலும் பல சூல்கள் அச்சுச் சூல் அமைவில் அமைந்திருக்கும். கனி உறைக்கனி (capsule) வகை யைச் சார்ந்தது. பயிரிடும் முறை. பூக்களின் எழிலுக்காகவே இது தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. சில செடி களில் ஓர் அல்லிவட்டத்திற்குப் பதிலாக இரு அல்லி வட்டங்களும் காணப்படுவதுண்டு. இச்செடியை விதைகளிலிருந்து வளர்க்கலாம். விதைகளைப் பாத் திகள் அல்லது மண் சட்டிகளில் முளைக்க வைத்துப் பிறகு நாற்றுகளைத் தோட்டத்தில் வரிசையாக நடு வது சாலச் சிறந்தது. நாற்றுகளை எடுக்கும்போது அவற்றின் வேர்கள் ஊறுபடாத வகையில் இருத்தல் வேண்டும். வேரிலிருந்து தோன்றுகின்ற பதியன் களைப் பிரித்து இச் செடிகளை வளர்த்தல் மற் றொரு முறையாகும். சில சூழ்நிலைகளில் பக்சீனியா மால்வேசியாரம் (Puccinia malracearum) என்ற பூஞ் சையால் பாதிக்கப்பட்டுச் செடியில் நோய் உண்டா