உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்பர்ட்‌, ஆபிரகாம்‌ அட்ரியன்‌ 189

இலை மழுங்கலாகவோ கூர்மையாகவோ, கூர்முனைவடி வுள்ளதாகவோ (cuspidate) இருக்கும். நரம்பு களின் கீழ்ப்புறம் கேசங்களுடனிருக்கும். மலர்களுண்டான பிறகு தோன்றும், பூக்கள் வெண்மை நிறத்துடன் பெரும்பாலும் கொத்தாகக் காணப்படும். மஞ்சரித்தண்டு தனித்தோ, சோடி யாகவோ இருக்கும். புல்லி வட்டம் தலைகீழ்க் கூம்பு வடிவானது (obconic); கனி கற்கனி (drupe) வகை யைச் சார்ந்தது. இது பசுமை, பொன்னிற மஞ்சள், சிவப்பு, சிவப்புக் கலந்த ஊதா என வெவ்வேறு நிறங்களுடன் கடினமானதாயிருக்கும். உருண்டை யாகவோ முட்டை வடிவத்துடனோ தொங்கிக் கொண்டிருக்கும். கனியின் உட்பகுதி கெட்டியாக இருப்பதனால், இது கொட்டை அல்லது கல் என்று கூறப்படுகின்றது. இது பெரிய, சமமற்ற பரப்புடன் அல்லது சிறு குழிகளுடன் காணப்படும். வளர்முறைகள் (habits). ஆல்பகோடா இலை அளவு, வடிவம், பூக்கும் முறை, கனியின் பண்புகள் ஆகியவற்றைப் பொறுத்து மிகவும் வேறுபடுகின்ற புதர்ச் செடியாகும். பயிரிடும் முறை. இதைப் பயிராக்குவதற்கு வெப்பம் தேவைப்படுகின்றது. மொட்டு ஒட்டுதல், ஓட்டுதல் ஆகிய முறையில் இது பரப்பப்படுகின்றது. செடிகள் 4.5 முதல் 8.0 மீ. இடைவெளிக்கு ஒன் றாக நடப்படுகின்றன. கோடையில் நீர் பாய்ச்சுதல் வேண்டும். தொழு எருவும், செயற்கை உரங்களும் நன்கு இட வேண்டும். வெவ்வேறு வகையான பிளம் மரங்கள் வெவ்வேறு வளர்முறைகளில் வளர்வதால், இவற்றிற்கேற்றவாறு அவ்வப்பொழுது நறுக்குதல் முறையினால் இவற்றைச் சீர்படுத்த வேண்டும். பொதுவாகக் கிளைகள் நெருக்கமாக வளர்வதையும் ஒன்றோடொன்று பிணைவதையும் நறுக்குதல் மூலம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு நறுக்கும் பொழுது ஒவ்வோர் ஆண்டும் 30 முதல் 50 செ.மீ. வளர்ச்சி ஏற்படும்படிப் பார்த்துக் கொள்வது அவ சியம். அளவு நோய்கள். சூடோமோனாஸ் (Pseudomonas Sp.) எனும் பாக்டீரியாவின் சிற்றினத்தினால் தாக்கப்படும் பொழுது பிசின் போன்ற நீர்மம் (Gummosis) வெளிப்படுகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுரண்டி எடுத்துவிட்டுப் போர்டோ கலவையை அதன்மேல் பூசவேண்டும். சில வேளை களில் நச்சுயிர் நோய்கள் ஏற்பட்டு இலைகள் பாதிக் கப்படுகின்றன. வீவில் பூச்சிகள் (Weevil Amblyrr- hinus poricollis) தளிர்களைத் தாக்குகின்றன. ஒரு வகை வண்டு (Beetle- Anomala lineatopensis) இலை களையும், கனிகளையும் இரவில் சென்று உண்கின் றது. வேறு சில வண்டுகளும் தீமை விளைக்கின்றன. இதனால் இலைகள் முழுவதும் உதிர்ந்துவிடுகின்றன. ஈய ஆர்சனேட்டு டி.டி.ட்டி (D.D.T) ஆகியவற் ஆல்பர்ட், ஆபிரகாம் அட்ரியன் 189 றைத் தெளிப்பதனால் இவற்றைக் கட்டுப்படுத்த லாம். பொருளாதாரச் சிறப்பு. பிளம் பழங்கள் சமைத்து உண்ணப்படுகின்றன. இவற்றை உலர்த்தி, டின்க ளில் சேமித்து வைக்கின்றார்கள். இதன் பழங்களிலி ருந்து பழக்குழைவு (jam) செய்யப்படுகின்றது. கூனூரில் (Coonoor) பயிராக்கப்படுகின்ற ஸ்ப்லெண் டர் ( Splendour) என்னும் வகை, கொட்டைகள் நீக்கப்படாமல் அப்படியே உலர்த்தப்பட்டுச் சேமிக் கப்படுகின்றது. இவற்றைப் (prunes) புரூன்கள் என்று அழைக்கின்றனர். புரூன்கள் தயாரிப்பதற்கு மரத்திலேயே கனிந்து, நிலத்தில் விழுந்த பழங்களை சேகரிக்கின்றார்கள். மட்டுமே இவற்றை ஒரு நிமிடம் வரை சூடான காரக் கரைசவில் இட்டுப் பழங்களின் மேலிருக்கும் மெழுகை அகற்றுகின் றார்கள். பிறகு இவற்றை ஊசிப்பலகையின் மேலிட் டுத் தோலின்மேல் கீறல்களை உண்டாக்குகின்றார் கள். பிறகு இவை தட்டுகளில் வைத்து சூரிய வெப்பத்தாலோ செயற்கை வெப்பத்தாலோ உலர்த்தப்படுகின்றன. இவ்வாறு உலர்த்தப் பட்ட புரூன்கள் மெருகேற்றப் படுகின்றன. புரூன்கள் பிணிகளைப் போக்கக்கூடிய பொதுத் தன்மையுடையவை. இவை பேதிமருந்தாகப் பயன்படு கின்றன. இவற்றைப் பயன்படுத்தி ஒரு வகைக்கூழும், பானமும் தயாரிக்கப்படுகின்றன. புரூன்கூழ். ஐஸ்கிரீ மில் கலப்பதற்கும், ரொட்டி செய்வதற்கும் பயன்படு கின்றது. கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் எண் ணெய் பாதாம் எண்ணெய்க்குப் பதிலாகப் பயன்படுத் தப்படுகின்றது.இத்துடன் தாது எண்ணெயைக் கலந்து எந்திரங்களுக்கு உயவு எண்ணெயாகப் பயன்படுத்து கின்றனர். மேலும் இந்த எண்ணெய் சமையலுக்கும். உடம்பின்மேல் தடவிக் கொள்வதற்கும், விளக்கு எரிப்பதற்கும் இந்தியாவில் மலைப்பகுதிகளிலுள்ள மக்கள் இதைப் பயன்படுத்துகின் றார்கள். இம் மரத்தின் கட்டை பெட்டிகள் செய்வதற்கும் கடைசல் வேலைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. நூலோதி எ.கோ. 1. Hooker, J.D., Hook F, Fl. Br. Ind., Vol. II 1878. 2. The Wealth of India, CSIR Publication, New Delhi, 1984. ஆல்பர்ட், ஆபிரகாம் அட்ரியன் ஆபிரகாம் அட்ரியன் ஆல்பர்ட், (Abraham Adrian Albert), என்ற கணித அறிஞர், சிகாகோ (Chicago)