ஆல்ஃபாத் துகள் 201
+ படம் 2. ஆல்ஃபாத் துகளின் விலக்கம் ஆல்ஃபாத் துகள்கள் விலக்கமடைவதற்குக் காரணம் ஆல்ஃபாத்துகள்களைப் போலவே நேர்மின்னூட்டம் கொண்ட பகுதி அணுவில் அடங்கியுள்ளது. எனவே தான் அப்பகுதிக்கு அருகில் செல்லும் நேர் மின்னூட்டம் பெற்ற ஆல்ஃபாத் துகள்கள் விசைக்கு உள்ளாகிப் பாதையிலிருந்து மடைந்து செல்கின்றன. விலக்கு விலக்க ஆல்ஃபாத் துகள் 201 மேலும் இவ்வெதிர்ப்பு ஆல்ஃபாத் துகளுக்கும் அணுவில் இருக்கும் நேர் மின்னூட்டத்திற்கும் இடையே செயல்படும் கூறும் விலக்கு விசையினால் ஏற்படுகிறது. இதனால் ஆல்ஃபாத்துகள்கள் அவற் றின் பாதையிலிருந்து சிதறி விலக்கமடைகின்றன. மேலும் ஆல்ஃபாத்துகள்கள் அணுவின் மையத்தை நோக்கிச் செல்லச் செல்ல அவற்றிடையே ஏற்படும் எதிர்ப்புவிசை அதிகரிக்கிறது. எனவே, ஆல்ஃபாத் துகள் பெருங்கோணச் சிதறலுக்கு உள்ளாகின்றது. ரூதர்ஃபோர்டு செய்த ஆய்விலிருந்து ஆல்ஃபாத் துகள்கள் எலக்ட்ரானைப் போன்று இருமடங்கு நேர்மின்னூட்டத்தை உடையவை என்பதும், ஹைட் ரஜனைப் போன்று நான்கு மடங்கு பொருண்மை யுடையவை என்பதும் தெரிய வந்தன. ஆல்ஃபாத் துகளின் மின்னூட்டம். ஆல்ஃபாத் துக ளின்மின்னூட்டத்தை முதலில் கண்டறிந்தவர் ரூதர்ஃ போர்டு ஆவார். 1902-இல் ஆல்ஃபாத் துகள்களை வலிமைமிக்க மின்புலத்திலும், காந்தப் புலத்திலும் உட்படுத்தி, அவை விலக்கமடைவதை அறிந்தார். ஒரு ஈயப் பாளத்தில் உள்ள ஆழமான துளை யின் அடியில் வைக்கப்பட்டிருக்கும் ரேடியத்திலிருந்து வெளியாகும் கதிர்வீச்சை, மின்புலத்திற்கு உட்படுத்தி னால் ஆல்ஃபாக் கதிர்கள் நேர்மின்னூட்டம் பெற்ற தகட்டிற்கு எதிர்ப்பக்கம் வளைந்து செல்வதைக் காணலாம். இதிலிருந்து ஆல்ஃபாத் துகள்கள் நேர் மின்னூட்டம் கொண்டவை என அறியப்படுகிறது. எனவேதான் அவை நேர்மின்னூட்டம் அளிக்கப் பட்ட தகட்டிலிருந்து விலகிச் செல்கின்றன. 1 y + + + + + V + + E P W R படம் 3. மின், காந்தப் புலத்தில் ஆல்ஃபாத் துகளின் விலக்கம் படம் 4. ஆல்ஃபாத் துகளின் நேர்மின்னூட்டத்தை அளவிடல்