உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ஆல்‌ஃபாத்‌ துகள்‌

202 ஆல்ஃபாத் துகள் R V S C P + W படம் 5. ஆல்ஃபாத் துகளின் மின்னூட்டத்தை மின்மானியால் அளவிடல் ஆலஃபாத்துகளின் நேர்மின்னூட்டத்தைப் பின் வருமாறு அளவிடலாம். R என்ற குவளையிலுள்ள ஒரு குறிப்பிட்ட அள வுள்ள ரேடியத்திலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு வலி மையான காந்தப் புலத்திற்குட்படுத்தப்படுவதால் அதில் அடங்கியுள்ள பீட்டாத்துகள்கள் விலக்கப் பெற்று, நேர்மின்னூட்டம் கொண்ட ஆல்ஃபாத்துகள் கள் மட்டும் மிக மெல்லிய அலுமினியத் தகட்டைக் (W) கடந்து இலக்குத் தகடான P ஐச் சென்றடை கின்றன. இவ்வாறு இலக்கடையும் துகள்களின் மின் னூட்டத்தை அத்தகட்டுடன் இணைக்கப்பட்டுள்ள மின்மானி உதவிகொண்டு தெரிந்து கொள்ளலாம். இதிலிருந்து ஒரு ஆல்ஃபாத்துகளின் மின்னூட்டத்தை அறிய, தகட்டை அடைந்த மொத்த ஆல்ஃபாத்துகள் களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அதிலிருந்து ஓர் ஆல்ஃபாத் துகளின் மின்னூட்டத்தைக் கணக் கிடலாம். ஆல்ஃபாத்துகள்களின் எண்ணிக்கையைக் கெய்கர் ஆல்ஃபா துகள் எண்ணியைக் கொண்டு அறியலாம். இதில் ஒரு குறிப்பிட்ட அளவு ரேடியம் உள்ள டங்கிய R என்ற தகட்டிலிருந்து வெளிவரும் ஆல்ஃ பாத்துகள்கள், மெல்லிய மைக்கா தகட்டினால் மூடப்பட்ட சிறு துளையின் வழியே உலோகத்தா லான உருளைவடிவப் பகுதியான C க்குள் நுழையும். இதனுள் அழுத்தம் ஒரு சில சென்டிமீட்டர் பாதரச அழுத்தத்திற்கு இருக்கும். மேலும் அதன் அச்சுக்கு ங்கிணைப்பாகப் பொருத்தப்பட்டுள்ள கம்பி W க்கும் இந்த உருளைக்கும் இடையே மின்கலம் ஒரு மின்மானி மற்றும் மின்கலம் B யுடன் தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. தனால் கம்பி W க்கும் உலோக உருளை C க்கும் இடை யே ஒரு குறிப்பிட்ட அளவு மின்னழுத்த வேறுபாடு உண் டாகின்றது. இந்நிலையில் ஒரு துகள் இவ்வுருளைக் குள் நுழைவதால் அயனியாக்கம் பெற்றுத் திடீர் மின்னோட்ட வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. இது மின்மானியில் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறாக ஒவ்வொரு ஆல்ஃபாத் துகளின் நுழைவையும் பதிவு செய்து மொத்த ஆல்ஃபாத் துகள்களின் எண்ணிக்கை யைக் கணக்கிட்டறியாலாம். இம்முறையில் கண்ட றிந்த ஆல்ஃபாத் துகளின் மின்னூட்டம் 9.3×10-10 நிலைமின்னலகு எனக் கணக்கிட்டுள்ளார்கள். கூட்டுச் சிதறல் ( Compound scattering) ஆல்ஃபாத் துகள் ஒன்று ஒரு மெல்லிய தகட்டின் வழியே செல்லும் போது ஏற்படும் கோணச் சிதறல் (p) ஓர் அணுக்கருவினால் மட்டும் ஏற்படுத்தப்பட்ட சிதற லன்று. காரணம், இந்த அளவு தடிமனுள்ள மெல்லிய தகட்டில் பல அணுக்கள் அடங்கியுள்ளன. இதில் ஒவ்வொரு அணுவின் அணுவின் அணுக்கருவும் ஆல்ஃபாத் துகளின் பாதையில் விலக்கத்தைத் தோற்றுவிக்கும். இங்கு செயல்படும் விலக்குவிசை அத்துக்கள் செல்லும் பாதைக்கும் அவ் அணுக்கருக்களுக்கும் இடையிலுள்ள தொலைவைப் பொறுத்து மாறுபடும். சாதாரணமாக ஒரு அணுவினால் ஆல்ஃபாத் துகளின் பாதையில் ஏற்படுத்தப்படும் சிறு விலக்கம்