ஆல்ஜின் 209
எரிமலை (volcanic) அனற்பாறைகளிலும் கிடைக் கும். படிவுப் பாறைகளான அர்க்கோசு (arkose), ஃபெல்ஸ்பாதிக் மணற்பாறைகளிலும் (feldspathic sandstones ) கிடைக்கும். உருமாற்றப் பாறைகளான (metamorphic) ஆல்பைட்டு படலப்பாறை (albite schist), வரிப்பாறை (gneiss) ஆகியவற்றிலும் கிடைக்கும். பயன்கள். வெங்களித் தொழில் கருவி உற்பத்தியி லும், சாக்கடைக் குழாய், மெருகேற்றப்பட்ட செங் கல்கள் ஆகியவற்றிற்குப் பளபளப்புக் கொடுப்பதற் கும், ஒளி குறைவாகப் புகும் கண்ணாடிகளின் உற் பத்தியிலும் தேய்ப்புச் சக்கரங்களில் (abrassive weels ) இணைப்புப் பொருளாகவும் மெதுவான தேய்க்கும் பொருளாகவும் பயன்படுகிறது. நூலோதி ம.ச.செகதீசன் 1. Ford, W.E., Danai's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Limited, New Delhi, 1985. 2. Winchell, A.N., Winchell, H., Elements of Opti- cal Mineralogy, Wiley Eastern Private Limited, New Delhi, 1968. 3. Milovsky, A.V., Kononov, O.V., Mineralogy, Mir Publishers, Moscow, 1985. ஆல்மஹோரா கடல் ஆல்மஹோரா கடல் (Halmahera sea) ஹால்ம ஹோரா தீவுக்கும் மேற்கு நியுகினியாவுக்கும் இடை யிலுள்ள பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். வடக்கில் பிலிப்பைன் கடலும் தெற்கில் சேரம் தீவும் இக்கடலுக்கு எல்லைகளாக உள்ளன. கவோ (Kaoe) வளைகுடா இக்கடலின் ஒரு பகுதியாகும். சுமார் 95,000 சதுர கி.மீட்டர் பரப்புடைய இக்கடலின் ஆழம் ஏறத்தாழ 2040 மீட்டராகும். ஆல்ஜின் ம்.அ.மோ. ஆல்ஜின் (Algin) கடற்பாசிகளிலிருந்து சிறப்பாகப் பழுப்பு நிறப்பாசிகளிலிருந்து, பிரித்து எடுக்கப்படும் ஒருவித பசை போன்ற பொருள் ஆகும். ஆல்ஜினில் சோடியம், பொட்டாசியம். அம்மோனியம், கால்சியம் ஆல்ஜினிக் உப்புகள் மற்றும் புரோபைன் கிளைகால் அல்ஜினேட்டு (Propylene glycol alginate) அடங்கியுள்ளன. ஆல்ஜின், உணவுப் பொருள்களை யும் மருந்துகளையும் மற்றும் வேதிப் பொருள்களை யும் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. ஆல்ஜின் குழைவிலிருந்து கூழ்கள், இழைகள் போன்ற பயன் அ.க. 3-14 ஆல்ஜின் 209 படு பொருள்கள் பல உருவாகின்றன. கடற்பாசிகள் அதிகம் கிடைக்கும் இடங்களில் தான் ஆல்ஜின் உற்பத்தி மலிவானதாகவும் பயன் உள்ளதாகவும் அமைகிறது. சில இடங்களில் இப்பாசிகள் கரைகளி லும் சில இடங்களில் கரையை அடுத்தும் மற்றும் சில இடங்களில் தரைமட்டத்திலும் காணப்படுகின்றன. பெரும் புயல் (heavy storms) அல்லது பெருங்காற் றால் இப்பாசிகள் கடற்கரைக்கு அடித்துக் கொண்டு வரப்படுகின்றன. இப்பாசிகள் தொடர்ந்து கிடைக்கு மானால் பொருளாதார வளர்ச்சி மிகவும் மேம் படும். இக்காலத்தில் விசைப்படகுகளின் (barges) மூலம் இரு வகைப் பாசிகள் கடலிலிருந்து எடுக்கப்படுகின் றன. அவை மாக்ரோசிஸ்டிஸ் பைரிஃபெரா (Macrocystis pyrifers), அஸ்கோஸ்பில்லம் நோடோசம் (Ascophyllum nodosum) ஆகும். இவை கலிபோர்னியா கடற்கரையி லிருந்து பல கிலோமீட்டர் தொலைவு வரை வளர் கின்றன. இவையிரண்டில் மாக்ரோசிஸ்டிஸ் பைரிஃ பெரா ஆல்ஜின் தொழிற்சாலைக்கு இன்றியமையாத தாகும். இதே போன்று இப்பாசிகள் கைல், மெக் சிகோ, ஆஸ்த்திரேலியா, நியுசிலாந்து போன்ற இடங்களில் கடற்கரையை அடுத்த இடங்களில் பெரு மளவு வளர்கின்றன. இவை ஆஸ்த்திரேலியாவில் மட்டும் தான் குறைந்த அளவு வளர்கின்றன. . நீண்டகாலம் வாழுகின்ற மாக்ரோசிஸ்டிஸ் பைரிஃபெரா 5 முதல் 25 மீட்டர் ஆழம் வரை போதுமான ஒளி கிடைக்கும் பகுதிகளில் வளர்கின் றது. ஒவ்வொரு பாசியிலும் பற்பல வளர்ச்சி நிலை களைக் கொண்ட சுமார் 100 கிளைகள் காணப்படு கின்றன. கோடைக்காலத்தில் ஓர் இளம் கிளை நாளொன்றிற்கு ஏறக்குறைய 30 செ.மீ. நீளம் வளர் கிறது. இப்பாசிகள் கடலின் ஆழப்பகுதியிலும், இவற் றின் இலைகள் குடை போன்று அடர்த்தியாகக் கட லின் மட்டத்திலும் காணப்படுவதால், படகுகள் இவற்றைத் தேவைக்கேற்ப எடுக்கின்றன. இப்பாசி களை அறுவடை செய்வதற்காக அடிப்பகுதியில் வெட்டும் அலகுகள் பொருத்தப்பட்ட படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. கடலின் மேல் மட்டத்தி லிருந்து கீழே 2 மீட்டர் வரை உள்ள கடற்பாசிகள் வெட்டிச் சேகரிக்கப்பட்டுப் பின்னர் அவை ஆல்ஜின் தயாரிப்புக்காகத் தொழிற்சாலைக்கு அனுப்பப்படு கின்றன. மாக்ரோசிஸ்டிஸ் பைரிஃபெரா அதிக அளவில் வளர்வதால் வருடத்திற்கு இரண்டு, மூன்று தடவைகள் அறுவடை செய்யப்படுகிறது. முறைப் படிக் கவனமாகச் செய்யப்படும் அறுவடை அங்கு வாழும் மீன்கள் இனத்திற்கு யாதொரு கேடும் விளைவிப்பதில்லை. ஆல்ஜின் தேவை அதிகப்படுவதால், உற்பத்தி யாளர்கள் அஸ்கோம்பில்லம் நோடோசம் என்ற சிறு கடற்பாசி வகையைப் பயிரிடுகின்றனர். அலை