210 ஆல்ஸ்பைஸ்
210 ஆல்ஸ்பைஸ் அலை ஏற்ற இறக்கப் பகுதியிலேயே வளரும் தன்மை யுள்ளது. இதனால், எளிதில் இதனை அறுவடைசெய்ய லாம். இப்பாசியினைப் பிரான்சு, நார்வே, கனடா போன்ற நாடுகளில் பயிர் செய்கின்றனர். அஸ்கோ பில்லம் பாறைகளில் ஒட்டிக்கொண்டு வளருகிறது. அலை ஏற்றத்தின் போது கடற்பாசி முழுவதும் நீருக்கு வெளியில் காணப்படும். அலைகளின் கடுமை யைத் தாங்குவதற்காக இப்பாசியின் அடித்தண்டு காணப் நீளக்கூடியதாகவும், வலிவுடையதாகவும், படுகின்றது. அனைத்துத் தண்டுகளின் உட்பகுதிகள் காற்று நிறைந்த குழாய்கள் போன்றுள்ளன. ஆதலின் இக்குழாய்கள் இப்பாசிகளை நீரில் மிதக்கச்செய் கின் றன. நார்வேயிலும் இங்கிலாந்திலும் ஆல்ஜின் தயா ரிப்புக்கு லாமினேரியா கிளவ்ஸ்ட்டோனி (Laminaria cloustoni) எனும் கடற்பாசியையே பெருமளவில் பயிரிடுகின்றனர். ஏறத்தாழ 2 முதல் 20 மீட்டர் ஆழத்தில் உள்ள பாறைகளில் இக்கடற்பாசி ஒட்டிக் கொண்டு அடர்த்தியாக வளருகிறது. இதில் காற் றுப்பைகள் கிடையா. குளிர்காலப் புயல்களால் இப் பாசி பெரிதும் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள கடற் கரையில் ஒதுங்குகின்றது. தனை உடனடியாகப் பதப்படுத்தி ஆல்ஜின் தயாரிக்கின்றனர். பிரான்சு நாட்டில் லாமினேரியா டிஜிடேட்டா (Laminaria digitata) பெரிதும் பயிரிடப்படுகின்றது. சர்காசம், ஐசீனியா, அலேரியா, எக்லோனியா போன்ற கடற்பாசிகளிலிருந்தும் ஆல்ஜின் தயாரிக்கப்படுகிறது. பின்னர் ஆல்ஜின் தயாரிப்பு. கடற்பாசி எவ்வகையைச் சார்ந்திருப்பினும் அதிலிருந்து ஆல்ஜின் தயாரிக்கும் முறை ஒன்றாகவே உள்ளது. முதலில் கடற்பாசியி லுள்ள அதிக உப்பையும், தூசியையும் அகற்ற அதனை நீரில் நன்றாகக் கழுவுகின்றனர். அதனுடன் சோடா உப்பைச் சேர்த்துச் சிறிது கொதிக்க வைத்தால் கடற்பாசியிலுள்ள ஆல்ஜினா னது கரையக்கூடிய சோடியம் உப்பாக மாறுகிறது. அடுத்து அதனை வடிகட்டி அதிலிருந்து நீர்த்த செல் லுலோஸ் கரைசல் எடுக்கப்படுகின்றது. அக்கரை சலில் கிடைக்கும் வீழ்படிவே ஆல்ஜின் ஆகும். அது ஆல்ஜினுடைய கால்சியம் உப்பாகவோ அமிலத் தன்மை கொண்டதாகவோ இருக்கும். இதிலிருந்து தேவைக்கு ஏற்றவாறு ஆல்ஜின் பசை தயாரிக்கப்படு கிறது. ஆல்ஜின் பயன்கள். கரைசல் தன்மையுடைய ஓரிணைதிறன் ஆல்ஜினேட்டு உப்பானது பல்வேறு பொருள்களின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின் றது. ஆல்ஜனேட்டு குளிர்ந்த அல்லது சூடான நீரில் எளிதில் கரையும் தன்மை உடையது. ஆல்ஜினேட்டுக் கரைசலின் pH மதிப்பு 4 ஆகும். 4 க்கு கீழ் குறையும் போது இது கரைக்கமுடியாத அமிலமாவதால், இதன் இளகிய தன்மை உயர்கிறது. 3 முதல் 3.5 அளவில் இக்கரைசல் கூழாகிறது. பொதுவாக, ஆல்ஜினேட்டுக் கரைசல் குறைந்த செறிவுள்ள மக்னீசியம், அம்மோனியம் உப்புக்களு டன் எளிதில் இணையும் தன்மை கொண்டுள்ளது. ஆல்ஜினேட்டுக் கரைசலுடன் சேர்க்கப்படும் ஸ்டார்ச், சர்க்கரை போன்ற மாவுப்பொருள்கள், கரைசலை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. ஆல் ஜின் கரைசலானது ஆல்கஹால், நீரில் கரையக் கூடிய பசைகள், புரதச் சத்துக்கள் ஆகியவற்றுடன் எளிதில் ணையும் தன்மையுடையது. இதி ஆல்ஜினேட்டுக் கரைசலானது கால்சியம் உப்பு டனும் அமிலங்களுடனும் இணைந்து ஆல்ஜின் கூழா கிறது. இது பல தொழிற்சாலைகளுக்குப் பெரிதும் பயன்படுகிறது. ஆல்ஜின் கூழ் சூடுபடுத்துவதனால் இளகாது. இது நீரின் கொதிநிலை வரை நிலைத்து நிற்கும் தன்மை உடையது. கரையும் ஆல்ஜினி லிருந்து கரையக்கூடிய படலங்களும் இழைகளும் தயாரிக்கப்படுகின்றன. இதை உலரவைத்து லிருந்து உலர்ந்த படலங்கள் தயாரிக்கின்றனர். நீரில் கரையும் தன்மை பெற்ற சோடியம் ஆல்ஜினேட்டு கொண்ட இப்படலங்கள் உறுதியாகவும் வளையும் தன்மையுடனும் உள்ளன. நீராவி மட்டும் இப்பட லங்களினுள் நுழையும். ஆனால் எண்ணெய், கொழுப்பு, கரைப்பான்கள் போன்றவை இதில் நுழைய இயலா. கிளிசரால் (glycerol) சார்பிட் டால் (sorbitol) போன்ற பொருள்களை ஆல்ஜின் படலத்துடன் சேர்ப்பதால் இதன் நெகிழும் தன்மை அதிகமாகிறது. இதில் நீர் நுழைவதைத் தடுக்க இத னுடன் யூரியாஃபார்மால்டிஹைடு பிசின் சேர்க்கப் படுகிறது. படலமாக்குதல், கூழாக்குதல், திடமாக்குதல், ஆகிய செய்முறைகளுக்கு ஆல்ஜின் பெரும்பாலும் உதவுகின்றது. முக்கியமாக உணவு, மருந்து, துணி, அழகுப் பொருள்கள், காகிதம் இவற்றின் தயாரிப்பு களில் ஆல்ஜின் பெருமளவு பயன்படுகிறது. ஆல்ஸ்பைஸ் ம. அ.மோ. தாவரவியலில் ஆல்ஸ்பைஸின் பெயர் பிமெண்ட்டா டய்யாய்க்கா (Pimenta dioica Linn.) Merr. = Pimenta officinalis Lindl.) என்பதாகும். இது அல்லி இணையா இருவிதையிலைக் குடும்பங்களில் ஒன்றா கிய மிர்த்தேசிக் (Myrtaceae) குடும்பத்தைச் சேர்ந் தது. இதன்கனிகள் இலவங்கப்பட்டை (cinnamomon), கிராம்பு (clove), ஜாதிக்காய் (nutmeg), ஆகிய மூன் றின் மணங்களையும் ஒருங்கே கொண்டிருப்பதால் இதற்கு ஆல்ஸ்பைஸ் (Allspice) என்ற பெயர் வந் தது. ஆல்ஸ்பைசின் தாயகம் மேற்கிந்தியத் தீவுகளும்