212 ஆலமரம்
212 ஆலமரம் இதன் கனிகள் கருமை அல்லது கருநீல நிறத்தில் இரு விதைகளைப் பெற்றுப் பட்டாணி போல இருக்கும். ஒவ்வொன்றிலும் இரு விதைகள் உண்டு. விதைகள் அவரை விதை வடிவத்துடனும், கரும்பழுப்பு நிறத் துடனும் இருக்கும். இந்தியாவில் மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய இடங்களில் இது தோட்டப் பயிராக வளர்க்கப் படுகிறது. தமிழகத் தில் குறிப்பாக உதகமண்டல மலையடி வாரத்தில் உள்ள கல்லாறு, பர்லியாறு. என்ற இடத்திலும் குற்றாலத்திலும் பயிராக்கப்பட்டு நன்கு பலனளித்து வருகின்றது. பொருளாதாரச் சிறப்பு. இதன் இலைகள் பச்சை யாகவோ, உலரவைத்தோ புலவுக்கும் மற்ற உணவு வகைகளுக்கும் நறுமணமூட்டியாகப் பயன்படுத்தப் படுகின்றன. எனவே இதற்குப் புலவு இலை மரம் என்ற பெயரும் உண்டு. தகரப்பெட்டிகளில் அடைக்கப்படும் இறைச்சி, சூப், சாசேஜ், உணவுப் பொருள்கள், இனிப்புப் பண்டங்கள், ஊறுகாய் ஆகி யவற்றிற்கு மணமூட்டியாகப் பயன்படுகின்றது. சில வகை மருந்துகள், ஊட்ட நீர்மம் (tonic), மதுபானங் கள், சவர்க்காரம் ஆகியவை தயாரிப்பதற்கும் பயன் படுகிறது. உலரவைத்த கனிகள் முழுமையாகவோ பொடி செய்தோ பயன்படுத்தப்படுகின்றன. இவற்றி லிருந்து பிமென்ட்டோ பெர்ரி பழ எண்ணெய் (pimento berry oil) வடித்து எடுக்கப்படுகிறது. மரத் தின் இலைகளிலிருந்து வாசனை எண்ணெய் வடித்து எடுக்கப்படுகிறது. ஆனால் இந்த எண்ணெய் கனிக ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைவிடத் தரத்தில் குறைந்தது. இம்மரக் கிளையின் கட்டைகளிலிருந்து ஊன்று கோல்களும், குடைக்காம்புகளும் செய்யப் படுகின்றன. ஆல்ஸ்பைஸ் செரிப்பின்மையைப் போக் கக்கூடிய மருந்தாகப் பயன்படுகிறது. எனவே, மலச் சிக்கலையும், வயிற்றில் ஏற்படும் வாயுக் கோளாறு களையும் நீக்குகிறது. மூட்டுகள், நரம்புகள் ஆகிய வற்றில் ஏற்படும் வலியைக் குறைப்பதற்கு மருந்தா கப் பயன்படுகின்றது. பயிரிடும்முறை. ஆல்ஸ்பைஸ் விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகள் நன்கு பழுத்த பழங்களிலிருந்து எடுக்கப்படுகின்றன. நன்கு தயாரித்த நாற்றங்காலில் மேட்டுப் பாத்திகள் அமைத்து, விதைகள் ஊன்றி இலைச் சருகுகளால் மூட வேண்டும். பின்பு பூவாளியால் நீர் தெளித்தல் வேண்டும். இரண்டு வாரங்களில் விதைகள் முளைக் கத் தொடங்கும். செடிகளில் நான்கு இலைகள் உண் டான பிறகு நாற்றுகளை 20 செ.மீ. விட்டமுள்ள பெரிய மண் தொட்டிகளில் நட வேண்டும். இத் தொட்டிகளில் செடிகள் 30 முதல் 40 செ.மீ. உயரம் வரை வளர்ந்தவுடன் நிலத்தில் 6 மீ. இடைவெளி விட்டு நடவு செய்யலாம். நட்ட ஏழாண்டுகளுக்குப் பிறகு மரங்கள் பூத்துக் காய்க்கத் தொடங்கும். தொடர்ந்து சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் வரை பலன் அளிக்கும். அறுவடைமுறை. காய்கள் நன்கு முற்றிய பிறகே (ஆனால் பழுப்பதற்கு முன்) அறுவடை செய்கின் றார்கள். பின்பு வெயிலில் 4 முதல் 10 நாள்களுக்கு உலரவைக்கின்றார்கள். காய்களை முழுதும் பழுத்த பின்பு பழங்களாக அறுவடை செய்து உலர்த்தினால், அவற்றின், மணம் சற்றுக் குறைவாக இருக்கும். காய் கள் நன்கு உலர்ந்தபின் சுருக்கங்களுடன் கூடிய உலர்ந்த மிளகு போன்று தோற்றமளிக்கும். அப் போது இவை சிவப்புக் கலந்த பழுப்பு நிறத்துடன் காணப்படும். இவ்வாறு உலர்ந்த ஆல்ஸ்பைஸ் காய் கள் தாம் மிகச் சிறப்பான மணம் கொண்டிருக்கும் நன்கு வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 30 முதல் 40 கிலோகிராம் வரை பழங்கள் கொடுக்கும். நோய்கள். இம்மரத்தின் இலைகளைத் தாக்கக் கூடிய துருநோய் பக்சீனியா சிடியை (Paccinia psidii) என்ற பூஞ்சையினால் உண்டாகிறது. மூன்று அல்லது நான்கு முறை செம்புப் பூசணக்கொல்லி மருந்தினைத் தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் அறுடைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே மருந்து தெளிப்பதை நிறுத்திவிட வேண்டும். நூலோதி 1. Shanmugavelu, K. G., Spices and மு. குலசேகரன் Madhava Rao, V. N., Plantation Crops, Popular Book Depot, Madras, 1977. 2. The Wealth of India, CSIR Publication, New Delhi, 1984. ஆலமரம் மக்களுக்கு நன்கு அறிமுகமான மரங்களில் ஆல மரமும் ஒன்றாகும். தாவரவியலில் இதற்கு ஃபிகுஸ் பெங்காலென்ஸிஸ் (Ficus bengalensis Linn) என்று பெயர். இது ஒரு பூவிதழ் வட்டமுடைய இருவிதை யிலைக்குடும்பங்களில் ஒன்றானமோரேசியைச்(Mora- ceae) சார்ந்தது. இமயமலைச் சாரலின் சரிவுகளில் இது காட்டுமரமாக வளர்கிறது, சாலை ஓரங்கள், ஆலயங்கள், மேடைக் கோவில்கள் ஆகியவற்றின் அருகிலும் கிராமப் பொது இடங்களிலும் வளர்க்கப் படுகிறது. ஈரான் வளைகுடா நாடுகளில் பனியாக்கள் எனும் இந்திய வணிகர்கள் வாணிபத்திற்காகவும் தெய்வ வழிபாட்டிற்காகவும் இதன் கீழ்க்கூடுவது வழக்கம் என்றும், இதன் காரணமாக அங்கு வசித்து வந்த ஆங்கிலேயர்கள் பானியன் மரம் (banyan tree ) என்று இதை அழைத்தனர் என்றும் கூறப்படுகிறது.