ஆலமரம் 213
என இது சிறப்புப் பண்புகள். இது 20 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது; மிகவும் பருத்த அடி மரத்தைக் கொண்டது; அடிமரத்தின் சுற்றளவு 15 மீட்டரும் அதற்கு மேலும் இருக்கக்கூடும். கிளை களிலிருந்து மெல்லிய வேர்கள் தோன்றிக் கீழ்நோக்கி வளர்கின்றன. இவை விழுதுகள் எனப்படும். இவை நாளடைவில் பெருத்துத் தூண் போல ஆகின்றன. இவ்வேர்கள் முட்டு வேர்கள் (prop roots) அழைக்கப்படுகின்றன. இவை மரத்திற்கு முட்டுக் கால் போன்று அமைகின்றன. நன்கு வளர்ந்த மரத் தின் தலைப்பு ஏறக்குறைய 300 முதல் 600 மீ. வரை குறுக்கு சுற்றளவைப் பெற்றுப் பரவக்கூடும். வளர்ச்சி அடைந்த பருத்த வேர்கள் 3.5 மீ. சுற்றள வைப் பெறக்கூடும்; இவ்வாறாக வளர்ச்சி அடைந்த பிறகு விழுது அடிமரத்தை ஒத்திருக்கும். கல்கத்தா அருகில் உள்ள சிப்பூர் தாவரவியல் பூங்காவிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஆலமரம் 1965 ஆம் ஆண்டுக் கணக்குப்படி 1044 விழுதுகளைக் கொண்டிருந்ததா கக் கூறப்படுகிறது. இந்த மாபெரும் மரத்தின் தலைப்பு (crown) 416 மீ. சுற்றளவு உடையதாக இருந்தது. இதைவிடப் பெரிய மரம் ஒன்று சதாரா விற்கு அருகே இருந்ததாகக் கூறப்படுகிறது. தெற்கு வடக்காக 181 மீட்டரும் கிழக்கு மேற்காக 134 மீட்டரும் கொண்டு 483 மீ. சுற்றளவும் பெற்றி ருந்ததாகக் கூறப்படுகின்றது. இத்தகைய ஆலமரம் அடையாறில் உள்ள பிரம்மஞான சபைத் (Theosop- hical society) தோட்டத்திலிருப்பதைக் காணலாம். இலைகள் மாற்றடுக்கமைவு (alternate phyllotaxy) கொண்டவை, அகன்ற முட்டை அல்லது நீள்வட்ட (elliptci ) வடிவானவை; தோல்போன்ற தன்மையுடை யவை; விளிம்பு ஒழுங்கானது; முனைநீள் கூர்வடி வானது. மேற்பரப்பு பச்சை நிறமாகவும் கீழ்ப் பரப்பு வெளிர் பச்சை நிறத்துடனும் இருக்கும்: தளிர் கள் நீண்ட, பெரிய இலையடிச் சிதல்களால் மூடப் பட்டிருக்கும். பூக்கள் மிகச் சிறியவை, எண்ணற் றவை, ஒருபாலானவை; இவை உருண்டையான குடுவை போன்ற தோற்றத்தை உடைய சைக்கோனி யம் (syconium) என்ற உ உருள் குடுவை வடிவ வகை மஞ்சரியில் அமைந்திருக்கின்றன. மஞ்சரிகள் இலைக்கோணங்களில் இரண்டு இரண்டாக இணைந் திருக்கும். இதன் அடிப்பகுதியைச் சூழ்ந்து மூன்று பெரிய பூவடிச் சிதல்கள் உள்ளன. மஞ்சரியின் மேற் பரப்பு, கேசங்களைப் பெற்றிருக்கின்றது. முற்றிலும் முதிர்ச்சியடைந்த மஞ்சரி இரத்தநிறச் சிவப்பு பெறுகின்றது. அல்லது கருஞ்சிவப்பு நிறத்தைப் பூக்கள், சதைப்பற்றுள்ள குடுவையின் உட் சுவரில் அமைந்திருக்கின்றன. குடுவையின் மேற்புறநுனியில் ஒரு சிறிய துளை உள்ளது; இது பல சிதல்களால் ஒன்றன் மேலொன்றாக அடுக்குகளாகவும் நெருக்க மாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட வரிசையிலும் அமைந் திருக்கின்றது. ஒவ்வொரு குடுவையிலும் மூன்று வகை ஆலமரம் 213 யானபூக்கள் இருக்கின்றன. ஆண் பூக்கள் நான்கு பூவிதழ்களையும் ஒரு மகரந்தத் தாளையும் பெற்றுத் துளைக்கு அடுத்தாற்போல் அமைந்திருக்கின்றன. சூற்பை மேல்மட்டத்திலுள்ளது; ஒரு சூல் கொண் டது. சூலகத்தண்டு சூற்பையின் ஒருபக்கமாக அமைந் துள்ளது. ஆலவிதை என்று கூறப்படுவது அதன் உண்மையான கனியாகும். இவற்றைத் தவிர மலட் டுப் பூக்களும் (gall flowers) உண்டு. இவை பெண் பூக்கள் போன்று காணப்பட்டாலும் இவற்றின் சூலகத்தண்டு பெண்பூக்களின் சூலகத் தண்டைவிடக் குட்டையாகவும், நுனி விரிந்தும் காணப்படும். இவற்றின் சூற்பையில் சூலுக்குப் பதிலாக மலட்டுப் பூக்கள் காணப்படும். இந்த மலட்டுப் பூக்கள் அயல்மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதற்கு உதவு கின்றன. விதை போன்ற கனிகள் பறவைகளின் எச்சத்துடன் அல்லது மலத்துடன் வெளிப்பட்டுத் தகுந்த இடங்களில் விழும்போது முளைக்கின்றன. சில சமயங்களில் வீட்டுச்சுவர் வெடிப்புக்களிலும் இலைகளுக்கிடையேயும் பறவை பனைமரத்தின் களால் பரப்பப்பட்டு முளைக்கின்றன. நாற்றுகள் மேற்கொண்டு வளர வளரச் சுவர் பிளந்து இடிந்து போகக்கூடிய அளவிற்கு நாசத்தை விளைவிக்கின்றன. ஆனால் பனை மரத்தைப் பொறுத்த மட்டில் வேர் கள் ஒரு வலையைப் போல அதைச் சுற்றிப் பின்னிக் கொள்கின்றன. பிறகு அவ்வேர்கள் தடித்து வளரும் போது பனைமரத்தை நெரித்து அழித்துவிடக் கூடிய அளவிற்கு ஆலமரம் இணைந்து வளர்கின்றது. ஆல் மரத்தைக் கட்டடத்தின் அருகே வளர்ப்பதும், வளர் விடுவதும் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இதன் வேர்கள் நிலத்தின் கீழ் நீண்டு பருத்து வலுவடைந்து இறுக்கத்தை ஏற்படுத்தும்பொழுது கட்டடங்களில் இங்குமங்குமாகப் பிளவுகள் உண்டாகின்றன. பொருளாதாரச் சிறப்பு. படர்ந்த, அடர்த்தியான நிழல் தரும் மிகச்சிறந்த மரமாகச் சாலையோரங் களில் வளர்க்கப்படுகின்றது. இம்மரத்தினுடைய முட்டு வேர்களின் கட்டை உறுதியானது. அது கூடா ரக் கம்பங்களாகவும், வண்டிகளின் ஏறுகாலாகவும் பயன்படுகிறது. இதன் பட்டை நாட்டு மருத்துவத் தில் பெரிதும் பயன்படுகிறது. பட்டைச்சாறு வயிற் றுப் போக்கு, சீதபேதி, நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதி ஆகியவற்றிற்கு மருந்தாகும். இசிவு நோய் (hysteria), நரம்பு நோய்கள், மலட்டுத்தன்மை ஆகி யவற்றின் சிகிச்சைக்குப் பட்டை பயன்படுகிறது. தண்டுகளிலிருந்து கிடைக்கும் பால்மம் (latex) என்று கூறப்படுகின்ற வெண்மையான போன்ற நீர்மம் பல்வலி, பித்தவெடிப்பு, காயங்கள், மூட்டு வாதம் (rheumatism), இடுப்புவாதம் (lumbago) ஆகியவற்றின் சிகிச்சைக்குப் பயன்படுகிறது. தண்டு, வேர் ஆகியவற்றின் பட்டையை நீரில் காய்ச்சி அந் நீரைக் குளிப்பதற்குப் பயன்படுத்தினால் தொழு நோயும், உடல் வலியும் நீங்கும் என்று கருதப்படு பிசின்