216 ஆலிகோகிளேசு
216 ஆலிகோகிளேசு இராமேஸ்வரம், இலட்சத்தீவு, மாலத்தீவு முதலிய பகுதிகளில் இனப்பெருக்கம் செய்வதாக அறியப்படு கிறது. ஆலாக்கள் நெடுந்தூரம் பறப்பதற்கு ஏற்ற தகவமைப்பைக் கொண்டலை. ஆர்க்டிக் ஆலாக்கள் தம்முடைய இனப்பெருக்கத்துக்காகச் சென்று திரும்ப ஏறத்தாழ 40,000 கிலோ மீட்டர் தொலைவு வரை பறந்து செல்கின்றன. ஆலிகோகிளேசு ம்.அ.மோ. பிளேஜியோகிளேசு (plagioclase) எனப்படும் ஒத்த இயல்புடைய ஒரு திண்மக் கரைசல் தொகுதியிலுள்ள ஒரு கனிமம் ஆலிகோகிளேசு (oligoclase) ஆகும். இதன் வேதியியல் உட்கூறு ஆல்பைட்டு (albite) 90./- அவார்தைட்டு (anorthite) 10% முதல் ஆல்பைட்டு 70% அனார்தைட்டு 30% வரை இடைவெளி உடை யது. ஆல்பைட்டின் வேதியியல் உட்கூறு NaAlSi,O, ஆகும். வேதியியல் உட்கூறு அனார்த்தைட்டின் CaAl, 2 Si, O ஆகும். போலவே மற்ற பிளே ஜியோகிளேசுகளைப் இதுவும் முச்சரிவுத் தொகுதியில் (triclinic system) இயல்புப் படிகங்கள், பன்மை படிகமாகிறது. இரட்டிப்புப் படிகங்கள் தட்டைப் படிகங்கள் ஆகப் பலவாறு இது கிடைக்கிறது. இது அனற் பாறைகளில் பிளக்கக் கூடிய கட்டிகளாகவும் சீரற்ற துகள்படிகங்களாகவும் உள்ளது. இதன் கடி னத்தன்மை 6. கனிமப்பிளவு அடியிணை வடில் பக் கத்தில் (001) சீரானது; குறுஇணை வடிவப் பக்கத் தில் (010) தெளிவானது. பட்டகப் பக்கத்தில் (110) அரிதாகக் காணப்படும். இதன் அடர்த்தி எண் ஆல் பைட்டுக்கும் (2.62); அனார்த்தைட்டுக்கும் (2.76) டைப்பட்டது. கண்ணாடிபோல் ஒளிபுகக் கூடியதாயும் நிறமற்றதாயும் வெள்ளை, சாம்பல் நிற முடையதாயும் இருக்கும். இது ஓர் இயல்பான பாறையாக்க கிரேனைட்டு அணிவரிப்பாறை, சயனைட்டு டயோரைட்டு, ஆண் டிசைட்டு,டிராகைட்டு ஆகியவற்றைப் போன்றபார் மிரிகளில் காணப்படுகிறது. இது சில சமயம் ஆர்த் தோகிளேசுடன் சேர்ந்தவாறு கிரேனைட்டுப் பாறை களிலும் காணப்படுகிறது. இது நார்வே நாட்டில் 2 முதல் 3 அங்குல நீளப்படிகங்களாகக் காணப்படு கிறது. சூரியக்கல் (sunstone) அல்லது அவெஞ்சுரைன் (aventurine) என்னும் வகை டிலீடெஸ்ட்ராண்டு (Tvedestrand) என்னுமிடத்தில் கிடைக்கிறது. ஆல் 98 முதல் ஆல் 83 வரை இடைவெளியில் இருக்கும் இயற்கையான கனிமப் பொருளானது திண்மக் கலவையிலிருந்து விடுபட்டு அனா 2 மற்றும் அனா 25-30 ஆகிய இடைவெளிக்கு வந்துவிடுகிறது. இது மிக நுண்ணிய குறைபளிங்கு அளவுகளில் இருக் கும். இவ்வாறு உள்ளபோது ஆலிகோகிளேசுகளும் ஆல்பைட்டுகளும் நீலநிற மிளிர்வு உடையனவாக இருக்கும். இதற்குப் பெரிஸ்ட்டெரைட்டு (peristerite ) என்ற பெயருண்டு. சில குறிப்பிட்ட கட்டமைப்புத் தளங்களுக்கு இணையாக Fe2O3 இணுக்குகள் வரிசைப்பட்டுள்ளபோது 1அவெஞ்சுரைன் அல்லது சூரியக்கல் (aventurine or sunstone) உண்டாகிறது ம.ச. ஆனந்த் நூலோதி 1. Ford, W.E., Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Limited, New Delhi, 1985. 2. Winchell, A.N., Winchell, H., Elements of Optical Mineralogy, Wiley Eastern Private Limi- ted, New Delhi, 1968. 3. Milovsk, A.O., Kononov, O.V., Mineralogy, Mir Publishers, Moscow, 1985, ஆலிகோகிளேசு கனிமத்தோற்றம் ஆலிகோசின் காலக்கட்டம் அறுபத்தைந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி அண்மைக் காலம் வரையுள்ள நிலஇயல் காலத்திற்குப் புத்துயிரூழிக் காலம் (Cenozoic era) என்று பெயர். நிலஇயல் கால அட்டவணையில் (geological time scale) இந்த உயிரூழிக்காலத்தை டெர்ஷியரி (tertiary), குவார்ட்டர்னரி (quarternary) என இரண்டு காலப்பிரிவுகளாகப் (periods) பிரித் துள்ளனர். மேலும், டெர்ஷியரி காலம் பலயோசின் (palaeocene), இயோசின் (eocene), ஆலிகோசின் (oligocene), மியோசின் (miocene), பிளியோசின்