ஆவி கடத்தல் 225
இம் மூன்றையும் புளித்த மோரில் கலக்கிக் குடிக்க நீரிழிவு நோய் நீங்கும். கை பூ. பூவைச் சமைத்துச் சாப்பிட நீரிழிவு, கற் றாழை மணம், உடம்பில் உப்புப் பூத்தல், நீர் வேட் முதலியவை சமனப்படும். இதைக் குடிநீர் இட்டுப் பால் சேர்த்துச் சாப்பிட உட்சூடு தணியும் மணப்பாகு செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும். இதை வதக்கிக் கண்ணோய்க்கு ஒற்றடம் இடலாம். பூவுடன், பச் சைப் பயறு சேர்த்து அரைத்து நமைச்சலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். பட்டை. ஆவாரம் பட்டை, ஆவாரங் கொழுந்து, ஆவாரம் பூ, அறுகம் வேர் இவற்றை நிழலில் உலர்த் திச் சம எடை எடுத்து, சூரணித்து வெருகடி அளவு {இரண்டு விரல் அளவு ) பசு நெய்யில் குழைத்து, ஒரு மண்டலம் (48 நாள்) சாப்பிட உள்மூலம் கரைந்து போகும். இதைக் குடிநீரிட்டு வாய் கொப்பளிக்கவும், ஆசனவழியாய்ப் பீய்ச்சவும் பயன்படுத்தலாம். ஆவாரம் வேரின் பட்டை, விஷ்ணுகிரந்தி வகைக்கு ஒரு எலுமிச்சங்காயளவு அரைத்துப் பசு வின் பாலில் கலக்கி மூன்றுநாள் கொடுக்க இரத்தப் பிரமியம் தீரும். ஆவாரம் பட்டை, கொன்றை,நாவல், கடலழிஞ் சில் முத்தக் காசு, கோட்டம், மருதப்பட்டை இவற்றை ஒரே அளவில் கூட்டிக் குடிநீரிட்டுக் குடிக்க நீரிழிவு போகும். விதை. இதைப் பொடித்து, நீா விட்டு அரைத் துக் குழப்பிக் கண் சிவப்பு நீங்க, கண் இமையின் மீது பற்றிடலாம். வேர். வேர்ப்பட்டையைக் குடிநீர் செய்து அதற்கு நேர் வெள்ளாட்டுப்பால் அல்லது பசுவின்பால்,நல் வெண்ணெய் இவற்றைக் கூட்டித் தைலம் செய்து தலை மூழ்கி வர மேகநீரால் வேதனைப்படுபவர் களின் வெப்பம் தணியும்; கண் குளிரும். பிசின். இதில் 4.2 மி.கிராம் முதல் 10 மி.கிராம் வரை நீரில் கலந்து குடித்துவர நீரிழிவு, வெள்ளை, சிறுநீர் எரிச்சல் போகும். வி ஆவி அடைப்பு சே.பிரேமா பொறியின் (engine) எரிபொருள் செலுத்தும் அமைப் பில் எரிபொருள் ஆவி (vapour) குமிழிகள் உண்டாவ தால் எரிபொருள் பாய்வில் ஏற்படும் தடையே ஆவி அடைப்பு (vapour lock) ஆகும். பொறியை எளிதில் கிளப்பும் (start) எரிபொரு ளின் எளிதில் ஆவியாகும் பொருள்கள் சுற்றுப்புற அ.க. 3-15 ஆவி கடத்தல் 225 மிகு வெப்பத்தால், எரிபொருள் எக்கி (fuel pumd) எரிவளி கலப்பித் துளைகளின் (carburetor vents) திறனுக்கு மீறிய அளவில் ஆவியை உண்டாக்குகின் றன. எரிபொருள் எக்கியின் நுழைவழியில் அழுத்தம் குறைவதாலும் எரிபொருள் ஆவியாகிறது. ஆவியான எரிபொருளின் பருமன் அளவு மிகுந் திருப்பதால் நீர்மநிலையில் செல்லும் அளவு குறைந்து ஒழுங்கற்ற பொறி இயக்கமும் நிறுத்தமும் ஏற்படு கின்றன. எக்கி (pump) எரிபொருளை இழுப்பதை விட விரைவாக எரிபொருள் ஆவியானால், எரிவளி கலப்பிக்குள் பாயும் எரிபொருள் நிறுத்தப் பெற்றுப் பொறியும் நின்றுவிடுகிறது. எரிபொருள் தொட்டியினின்றும் பொறிக்குச் செல்லும் வழியில் பல வளைவுகளும் இணைப்பு களும் இருப்பதும், பாதை பொறியின் வெப்பத்தி னின்றும் காக்கப்படாமையும், பாதையில் வெற்றி டம் (vaccum) ஏற்படுவதும், ஆவிக் குமிழிகள் உண் டாகக் காரணமாகின்றன. எரிபொருள் பாதையைத் தண்மையாக வைத்தி ருப்பதாலும், பாதையின் திசையிலும், குறுக்கமைப் பிலும் திடீர் மாற்றங்களைத் தவிர்ப்பதாலும், போது மான திறமுடைய எரிபொருள் எக்கியைப் பாதை யின் மிகத் தாழ்ந்த இடத்தில் (lowest point) பயன் படுத்துவதாலும் ஆவியாதலைக் குறைத்து குறைத்து ஆவி அடைப்பைத் தவிர்க்கலாம். நூலோதி தமிழநம்பி 1. கே.ஆர்.கோவிந்தன், உட்கனற் பொறி ஓர் அறிமுகம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை,19. 2. DEBUSSY, J.H., Materials & Technology, Vol. VI, Longmans, London, 1978. ஆவி கடத்தல் நிலப்பரப்பிலிருந்து வளிமண்டலத்துக்கு ஆவி கடத் தப்படுவதற்கு ஆவிகடத்தல் (evapotranspiration) என்று பெயர். ஏரி, ஓடை, மண்பரப்பு, தாவர நீரா விப்போக்கு (transpiration) ஆகியவை இந்த ஆவி கடத்தலுக்கான ஆவியைத் தரும் மூலங்களாகும். சராசரியாகப் பொழியும் மழையில் 2/3 பங்கு ஆவி கடத்தல் மூலம் வளி மண்டலத்துக்குத் திரும்புகிறது. பாலை நிலங்களில் 100% அளவுக்கு இது உண்மை யாகிறது. நல்லமழை பொழிந்தும் ஆவியாதல் மிகக் குறைவாக நிகழும் இடங்களில் ஆவிகடத்தல் இதில் 1/3 பங்கே நிகழ்கிறது.