உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் களஞ்சியம் தொகுதி-3 ஆஃப்செட்முறை அச்சடிப்பு காண்க, மறுதோன்றிமுறை அச்சடிப்பு ஆப்பிரிக்க நாடுகளின் கால்நடை ஆய்வு மையம், அனைத்துலக ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கால்நடை வளப் பெருக்கத்தைச் செழுமையாக்கும் நோக்கத்துடன் அனைத்து உலகநாடுகளின் ஒத்துழைப்பாலும், உதவியாலும் பலவித ஆய்வுகளை மேற்கொள்ள ஓர் ஆய்வு மையத்தை அமைக்க 1974 ஆம் ஆண்டு அனைத்துலக வேளாண்மை ஆய்வு அறிவுரைக்குழு (Consultative group on International Agricultural Research) முடிவெடுத்தது. பிறகு, 1976 இல் எத்தி யோப்பியாவில் உள்ள ஆடிஸ் ஆப்பா (Addis Ababai என்ற நகரைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு அனைத்துலக ஆப்பிரிக்க நாடுகளின் கால் நடை ஆய்வு மையம் செயல்படத் தொடங்கியது. வேளாண்மை ஆய்வு அறிவுரைக் குழுவில் உறுப்பு களாக இயங்கிவரும் ஆப்பிரிக்க நாடுகளின் மேம் பாட்டு வங்கி (African development Bank), ஆஸ்த்தி ரேலியா, பெல்ஜியம், டென்மார்க், ஃபிரான்சு, இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நைஜீரியா, நார்வே,சுவீடன், சுவிட்சர்லாந்து, இங்கி லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி (ஐக்கியக் குடியரசு) முதலிய நாடுகளின் அரசுகள், உலக வங்கி, அனைத் துலக வேளாண்மை வளர்ச்சி நிதி (International fund for Agricultural development) ஆகிய அனைத்தும் இம் மையத்துக்குத் தேவையான பண உதவி செய்து வருகின்றன. மேலும், வேறு சில நாடுகளும் அவ்வப் பொழுது சிறப்புத் திட்டத்திற்கான உதவியும் (special project grant) செய்து வருகின்றன. நோக்கம். அறிவியல்முறையில், கால்நடைகளை வளர்த்துப் பொருளாதார முன்னேற்றம் கண்ட நாடுகள் பல இருப்பினும், ஆப்பிரிக்க நாடுகளில் இவ்வகை முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்குத் தேவையான புரத உணவுப்பொருள்களான இறைச்சி, பால், முட்டை முதலியன கிடைப்பது அரிதாக இருப்பதால் அம் மக்கள் நலிவடைந்து வருகின்றார்கள். பல கோடிக் கணக்கான மதிப்புள்ள உணவுப்பொருள்களைச் சிறப்புற வாணிபம் நடத்துவதால் கிடைக்கும் வரு வாயைக் கொண்டும், அந்நியச் செலாவணிச் சேமிப் பைக்கொண்டும், மக்களுக்குத் தேவையான உரம், பூச்சிக் கொல்லி மருந்து முதலியவைகளை வாங்கிப் பயன்படுத்தி வேளாண்மை உற்பத்தியைப்பெருக்கி அதனால் இப்பகுதிகளில் வாழும் மக்களின் வரு வாயையும் பெருக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இந்த ஆய்வு மையத்தின் நோக்கமாகும். கால்நடை வளர்ச்சிக்குத் தேவையான பணம், இடம், உழைப்பு முதலியவை இருப்பினும், தரமான தேவையான பராமரிப்பு இல்லாததாலும், தீவனப் பற்றாக் குறையினாலும் இந்நாடுகளில் நிலவும் சமுதாய அமைப்பினாலும், பல கொடிய நோய்கள் இந்நாடுகளில் பரவலாக இருப்பதாலும் கால்நடை வளம் சிறப்புற அமையவில்லை. இக் குறையை நீக்கும்பொருட்டு அனைத்துலக ஆப்பிரிக்க நாடுகளின் கால்நடை ஆய்வு மையம் (International Livestock Centre for Africa-ILCA) சில சீரிய பணிகளை மேற்கொண்டுள்ளது. அவை ஆப்பிரிக்க நாடுகளில் தொன்று தொட்டு நிலவி வரும் கால்நடை வளர்ப்புமுறைகளையும், இம் முறைகளை இங்கு வாழும் மக்கள் பின்பற்றி வந்ததற்கான காரணங்களையும் ஆய்ந்து, அறிவி யல் முறைப்படி இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல், கால்நடை வல்லுநர்களின் உதவியால் ஆய்வுகளை மேற்கொண்டு இப்பகுதிகளிலுள்ள கால் நடைகளின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தல், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பல ஆய்வு மையங் களின் வேலைகளை ஒழுங்குபடுத்தல், ஆய்வு மையங் களின் பணிகளை ஒருங்கிணைக்க உதவுதல், அவ்வப் போது, கருத்தரங்குகள், மாநாடு முதலியவற்றை